வியாழன் 28 2013

புடலங்கா சட்டமும் ரப்பர் நீதியும்........



 மனித உரிமை ஆர்வலர்களுக்கும்,பொது நல விறும்பிகளுக்கும் சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கு முடிவு காண கடைசி 
வாய்ப்பாக அனுகுவது நீதி மன்றங்களைத்தான்.

அந்த நீதிமன்றங்களோ, புடலங்கா  மாதிரி சட்டத்துக்குள் 
வளைந்துகுலைந்து  அது வழங்கும் நீதியும் ரப்பர் மாதிரி நீண்டு கடைசியில் டப்பென்று அறுந்து போகும் அளவிற்கு இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒன்றான ஆசிட் 
வீச்சு குற்றங்களை தடுப்பதற்க்காக. ஈரோட்டை சேர்ந்த மனித 
உரிமை ஆர்வலர் சாந்தி என்பவர்.

மனிதர்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடிய ஆசிட் வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்தவும் தாராளமாக கிடைப்பதை தடை செய்யவும் மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் 
என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள மனுவில் கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி லட்சுமி என்பவரும் உச்சி 
மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில்  மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிடர் ஜெனரல்..குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டள்ளது. இது 
பற்றி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

தமிழக அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழுக்குரைஞர். ஆசிட் வீச்சில் பலியானவர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இழப்பிடு அளித்தள்ளார். ஆசிட் வீச்சு தொடர்பாக தமிழக அரசு ஒரு சட்டத்தை கொண்டவர உள்ளது என்று கூறினார்.

உயர்மன்ற நிதிபதியோ, உச்ச மன்றத்திலும் 
உயர்நீதிமனறத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 
மனுக்கள் ஒரே தன்மையை கொண்டவையா? 
என்பதை ஆறாய்வதற்க்காக வழக்கின் 
விசாரனையை மார்ச் 13க்கு தள்ளிவைத்தார்.

இந்த ஆசிட் விச்சில் பாதிக்கப்படுவது போல்தான் 
அரசின் தனியார்மயம். தாராளமயம்,உலகமயம் என்ற 
புதிய பொருளாதார கொள்கையினால் நாட்டின் பொது 
சொத்துக்களான பொதுத்துறைகள்  தொழிற்சாலைகள், 
தண்ணீர் முதலானவற்றை அடிமாட்டு விலைக்கு 
விற்கப்படுகின்றன.விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு
விலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும்  நாடே படுபாதக 
பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாகி பெரும்பாண்மையான விவசாயிகளும்,தொழிலாளர்களும்.அன்றாட காய்ச்சிகளும் 
தின்ம்தினம் செத்து செத்து பிழைத்து வருகின்றனர்.இவற்றை 
எதிர்த்து  மனித உரிமை ஆர்வலர்களும்,பொதுநல 
விறும்பிகளும் உச்ச-உயர் நீதி மன்றங்களில் வழக்கு 
தாக்கல் செய்யும்போது

இதே உச்ச-உயர் (அ) நீதிமன்றங்கள். அரசின் கொள்கை 
முடிவகளில் தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கி 
கொள்கிறது. அபூர்வமான ஒருசில வழக்குகளில் நுழைந்தாலும்  
புடலங்கா சட்டத்தில் அது வழங்கும் நீதியும் ரப்பராக நீண்டு 
கொண்டு செல்கிறது....

தப்பித்தவறி உத்தரவு இட்டாலும் அதை அமுல் படுத்த 
வலு இல்லாமல் கெஞ்சி புலம்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...