பக்கங்கள்

Thursday, April 04, 2013

அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை


அவள் பணக்கார
பத்தினியாகவுமில்லை .
சீமாட்டியாய் இருந்து
பரத்தையாகவுமில்லை

மண் தின்ற உடம்பை
மனிதர்கள் தின்னட்டுமே!
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்கு
சரியாகப்படவில்லை

அவள் சொல்லும்
மனிதர்கள் அவளை
மனுசியாகவே பார்க்கவில்லை
போகப் பொருளாய்தானே
பார்த்தார்கள்- அவள்
அப்படிச் சொன்னது
எனக்கு சரியாகப்படவில்லை........

தன் தொழில் தர்ம்ம் காக்க
மனிதர்களை மண்ணைவிட
மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே!

பல உடலோடு படுத்து
அந்த உடல்தரும் வேக்கு
காட்டை பெற்று நோய்
வாய்ப்பட்டு இறக்கும்போது
அந்த மேலான மனிதர்களா?
தாங்குகிறார்கள். மண்தானே
தாங்குகிறது.

மண் தின்ற உடம்பை
மனிதன் தின்னனூட்டுமே
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்குச்
சரியாகப்படவில்லை.

2 comments :

 1. பல உடலோடு படுத்து
  ??????????????????????????????

  "அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை"

  ReplyDelete
 2. /// மனிதர்களை மண்ணைவிட
  மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே! ///

  அவள் அப்படிச் சொன்னது எனக்கும் சரியாகப்படவில்லை....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com