செவ்வாய் 02 2013

தமிழகம் தவறவிட்ட இன்னொரு பெண் முதலமைச்சர்.!!!



ஏமாளிகளின் ஒட்டு மொத்த ஆதரவால் தமிழகத்தை புர்ச்சி தலவரு அண்ணாயிச வழியில் ஆட்சி செய்து கொண்டு இருந்தபொழுது......

தன்னுடன் நடித்த ரத்தத்தின் ரத்தமான ஒரு நடிகையை தன்னுடன் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதற்கு முன்னோடியாக ஆளுங்கட்சியின் சார்பாக தமிழக மேலவை தேர்தலில் போட்டியிடும்படி ஆசீர்வதித்தார்.

புர்ச்சி தலவரின் ஆசீர்வாதத்தையும் ஆணையையும் ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட முயன்றபோது, அந்த நடிகையை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு விதி வருமாணவரிதுறை மூலமாக விதி சதி செய்து விட்டது.

புர்ச்சி தலவரின் ஆசீர்வாததிற்கும் ஆணைக்கும் முன் காலத்தில் அந்த நடிகை கடன் தொல்லையால் அவதிப்பட்டதால்.“தான் திவாலாகி விட்டதாக“ அறிவிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து ஆணையும் பெற்றார்.

 இதனால் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டதினால்,
கடன்களை அடைத்து முடிக்காமல். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம்.. 

திவாலான நடிகை தேர்தலில் போட்டியிடுவதை  தெரிந்து கொண்ட வருமாண வரித்துறையினர் அந்த நடிகை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு  வழக்கு போட்டனர்.

இதை அறிந்த புர்ச்சி தலவரு,ரொக்கமாக 90.00.000 லட்சத்தை கொடுத்து, கடனை அடைக்கச் சொல்லி உயர் நீதி மன்றத்தில் செலுத்த செய்தார்.

90,00.000 ரூபாயை கடனாக பெற்றதும் தவறு, ரொக்கமாக 
கடனை அடைத்த்தும் தவறு என்று மீண்டும் அந்த நடிகை மீது   வருமாணவரித்துறை வழக்கு போட்டது.

இந்த சிக்கலினால் அந்த நடிகை மேலவை தேர்தலில் நிற்க முடியாமல் போய்விட்டது. அந்த சதி இல்லையென்றால் தேர்தலில் வெற்றி பெற்று,அப்புறம் அமைச்சராகி, புர்ச்சி தலவரின் கூடவே இருந்து. புர்ச்சி தலைவரு மண்டய போட்டதும் ஏகோபித்த ஆதரவுடன்  தமிழ்நாட்டின் முதல் அமைச்சரா ஆகியிறுப்பார் தமிழகத்தை சனியும் ஓரளவு பிடிக்காமல் இருந்திருக்கும்.

வருமாணவரிதுறையின் சதியால் புர்ச்சி தலவரின் ஆசிப் பெற்றும் அந்த நடிகையை  தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டது விதி அன்ரைக்கு பிடித்த சனிதான் இன்றுவரை தமிழகத்தை  ஆட்டி படைக்குது.

அந்த நடிகைக்குப்பின்தான் தமிழகத்தின் இருண்டகாலம் புர்ச்சி தலவரின் அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற காப்பகத்தின் கொள்ளை பரப்பு செயலராகி.வீதி உலா வந்து சட்ட மேலவை உறுப்பினராகி, புர்ச்சி தலவரு மண்டய போட்டதும் சக்களத்தி சண்டையில் ஓய்வு எடுத்து, அதுக்கு பெறவு. புர்ச்சி தலவரின் வானுலக ஆசியுடன்  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

அப்புறம், அந்த நடிகைக்கு புர்ச்சி தலவரு கடனை அடைக்க  90,00,000 பணம் என்னாச்சுனா... கட்சிக்காக நாட்டிய நிகழ்ச்சி நடத்தியதாக கட்சிக் கணக்கில் சேர்க்கப்பட்டு, வருமாணவரித்துறைக்கும் கணக்கு காட்டப்பட்டது.

அன்னிக்கு மட்டும் அந்த நடிகைக்கு விதியும் சதியும் இல்லாம இருந்திருச்சுன்னு வச்சுக்கோங்கோ....... இன்னிக்கு பச்சை ஆடை உடுத்திய இருண்டகாலத்துக்கு பதிலா வெண்ணிற ஆடை நடிகையின் ஆட்சிதான் நடந்துகிட்டு  இருக்கும்.   வீதியிலே போகிற சனியும் தமிழகத்தை இந்த ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டியிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்காது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....