செவ்வாய் 13 2013

பெயருக்கு முன்னால் பட்டங்களை போட்டுக் கொள்ளாதவர்கள்!!!!

PUChinnappa.jpg

இன்றைய 21ம் நூற்றாண்டில் புல் தடுக்கி விழும் சாதரணமானவர் களுக்குகூட, 

தானைத்தலைவர்,தமிழினத்தலைவர்,அம்மா,கொம்மா, தாயே. பேயே, பிசாசே, புரட்சிபுயலு, இளம்புயலு.முதியபுயலு புரட்சி தளபதி, வீரத்தளபதி, வீரத்துறவீ, ஓடும் துறவி, தலயே,மலயே, சூப்ஸ்டாரு,கூப்பிட்டாரு, கும்பிட்டாரு , கேப்டவுனு,  வருங்கால, இறந்தகால, இப்படி அறிவுக்கு எட்டாத என்னற்ற பட்டங்கள்

நடிக நடிகர்களுக்கும் அரசியல் தொழில் நடத்தும் தலைவர்களுக்கும் சரி, ஒரு பேச்சுக்குகூட அவர்களுக்கு பொருந்தாத, பொருத்தமில்லாத பட்டங்களை வாரி வழங்குறார்கள்.

இப்படி வாரி வழங்கப்பட்ட பட்டங்களுடன்  ஊர்வலம்  நகர்வலம், திரைவலம் வரும் 

இவர்களுக்கு மத்தியில் 20 நூற்றாண்டில் ஆரம்பத்தில் பொருத்தமான பட்டங்களை பெற்ற   “கந்தர்வ கான ஏழிசைஎன்ற பட்டத்தை பெற்ற எம்.கே. தியாகராஜன் பாகவதரும்,

“நவ நடிக பூபதிபட்டம் பெற்ற பி.யு.சின்னப்பாவும் 

தங்கள் பெயருக்கு முன்னால் அந்தப் பட்டங்களை போட்டுக் கொள்ளவில்லையாம்......

இவர்கள் பிழைக்கத் தெரியாத நடிகர்களாக அந்த பட்டங்களை விரும்பாதவர்களாக வாழ்ந்து மடிந்து விட்டார்கள்.



2 கருத்துகள்:

  1. வலி பொக்கேன் ங்கிறது - உங்க பெற்றோர் வைச்ச பேரா. அதுவும் அடைமொழி தானே.

    பதிலளிநீக்கு
  2. பொட்டுன்னு அடிக்கிறிங்க ளாக்கும். நல்லது!

    வலி பொக்கேன் இல்லீங்க... வலிப்போக்கன் எனக்கு பொருத்தமான பெயருங்கோ........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....