பக்கங்கள்

Wednesday, August 14, 2013

நடுநிசியில் வாங்கிய போலி சுதந்திரத்தின் கதை.........!!!ஆங்கிலேயன். இந்தியாவுக்கு   1947ம்ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரம் தருவதாக அறிவித்தான். அன்றைய தினம் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும்மாறு தெரிவித்தான்.

அன்றைய இந்தியாவின் இந்துத்துவ வாதிகள், ஆகஸ்டு 15ந்தேதி அஷ்டமி நாள்  சுதந்திரத்தை வாங்கினால் ,அபசகுனம் ஆகும். அதனால் இரண்டு நாள் கழித்து 17ந்தேதி சுதந்திரத்தை வாங்கினால் நல்ல சகுனம் உள்ள நாள் என்றும் பொருத்தது பொருத்தோம். இன்னும் இரண்டு  நாள் கழித்து சுதந்திரத்தை வாங்கலாமே என்று அங்கலாயித்தனர்.

இது பற்றி ஜவகர்லாலுவிடம் முறையிட்டனர். ஜவகர் லாலுவும் அஷ்டமி-நவமி போன்ற பஞ்சாஙக்கத்தில் நம்பிக்கை இல்லையென்று வெளியில் பீத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் இந்துத்துவாதிகளின் வேண்டு கோளுக்கு இணங்கி ஆங்கிலேயனை அனுகினார்.

ஆங்கிலேயரோ, சட்டம் இயற்றியாகிவிட்டது, இனி மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டனர்.

மெத்த தெரிந்த பூனூல்களும்,  கடவுளுக்கு மேலானவர்களாக பீற்றிக் கொள்ளும் உச்சி குடுமிகளும், அனைத்து வகையான பஞ்சாங்கங்களை கொண்டு நாள் நட்சத்திரங்களை கணக்கீடு செய்து அந்த நாளுக்குரிய பரிகாரம் செய்வதற்கு வழிவகைகளை  தீவிரமாக ஆராய்ந்தனர்.

அப்படி ஆராய்ந்து ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தனர்...

இந்தியனுக்கு அதாவது  பூனூல்களுக்கும் உச்சி குடுமிகளுக்கும் மறுநாள் என்பது அதிகாலை 5மணிக்கு தொடங்குகிறது.

ஆங்கிலேயனுக்கு மறுநாள் என்பது நடுநிசி 12 மணிக்கு தொடங்ககிறது. இதனால் அஷ்டமி- நவமி கேடுகள்-மற்றும் அப சகுணங்கள் இல்லாது போகிறது என்று கண்டுபிடித்தனர்.

இதன் காரணங்களை கொண்டுதான். 1947ம்ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி முடிந்து  ஆங்கிலேயனின் மறுநாளான  ஆகஸ்டு 15ந்தேதி நடுநிசி  12 மணிவாக்கில் ஆங்கிலேயனிமிருந்து   போலிச் சுதந்திரத்தை பெற்று  15ந்தேதி அதிகாலை 5மணியில்  இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லி 67 வருடமாக சுதந்திர தின திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.


14 comments :

 1. So you'd want India to be under English still?? I mean I don't understand this nonsense.

  ReplyDelete
 2. சீனாவில் இருந்து கொண்டு சீனாவையோ, ரஷ்யாவில் இருந்து கொண்டு ரஷ்யாவையோ திட்ட முடியாது. ஆனால் இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவை திட்டலாம்! இதுதான் சுதந்திரம்! உங்கள் ஆதங்கம் புரிகின்றது! வேற்றுமையில் ஒற்றுமை! இதுதான் இந்தியா! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ஏனுங்கண்ணா...உண்மையான சுதந்திரம் உலகத்தில எங்கேண்ணா கிடைக்கும்?


  மா ஆத்மாவை இன்னிக்கு திட்டுவீங்கன்னு எதிர்பார்த்தனுங்க..இப்படி ஏமாத்திட்டீங்களே?

  ReplyDelete
 4. உங்களுக்கு “போர்" அடிக்குமுன்னுதானுங்கண்ணா, மகா அத்துமா சாந்தி அடையட்டுமுன்னு விட்டுனுங்கண்ணா,

  ReplyDelete
 5. தி.தமிழ் இளங்கோ சார்,சீனாவிலோ,ரஷ்யாவிலோ போய் பார்த்தானே அவுக திட்டுறாங்களா, தீட்டுறாங்களான்னு தெரியும், வினவு தளத்துல போயி பாருங்க, போஸ்டர் ஒட்டுனதுக்கு இந்தியாவின் சுதந்திர போலீசு கைது..பன்னியிருக்கு.......

  ReplyDelete
 6. இந்தியாவில் பன்ச் டயலாக்-கூட பேசமுடியாது

  ReplyDelete
 7. If those folks can pay tax, who'd prevent them from issuing "punch" dialogue? These "cinema tigers" don't have guts.

  ReplyDelete
 8. இந்தியாவில்தான் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று கூறலாம். "அரசை ஒழிப்போம் புரட்சியை புடுங்குவோம்" என்று "வினவலாம்". அவர்கள் ஆதரிக்கும் "இடது" அரசாங்களில் நடக்குமா ? அது சரி.. அவர்களது "உண்மை சுதந்திரம் " அவர்களை ஆதரிப்பவர்களுக்கு மட்டும் தானே ...

  ReplyDelete
 9. நம்பள்கி சார்.சினிமாவில் பேசுறாங்க, அவுக வாய்ப்பு பொருத்து....

  ReplyDelete
 10. பெயரில்லா சொன்னது…
  இந்தியாவில்தான் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று கூறலாம். "அரசை ஒழிப்போம் புரட்சியை புடுங்குவோம்" என்று "வினவலாம்".

  சே...சே.... அவுக “புரட்சியை புடுங்குவோம்” முனு சொல்லல சார்,

  திரும்பவும் ஒருவாட்டி கோபப்படாம நல்லா நிதானமா படிச்சுப் பாருங்க, புரட்சியை புடுங்குவோம்னா... வினவுறாங்க........

  ReplyDelete
 11. எனக்கு ரொம்ப நாளா ஏன் நைட்டுல சொதந்திரம் குடுத்தாய்ங்கன்னு ஒரு டவுட்டு. நம்மளும் ஹிஸ்டரி வாத்தியார்ட்ட கேக்கல; அவரும் சொல்லல. இப்பதான் கிளியர் ஆச்சு. நன்றி.

  ReplyDelete
 12. தட்டட்டி கந்தசாமி அவர்களுக்கு ரெம்ப நாள் டவுட்டு கிளியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com