பக்கங்கள்

Saturday, August 03, 2013

ஒரு கிராமத்தானின் தீராத சந்தேகம்.......
கண்மாய்கரையில் நடந்து வந்த கிராமத்தான்  ஒருவன். மாடு மேய்த்துக் கொண்டு இருந்த ஒரு விவசாயிடம் கேட்டான்.

செவலை நிற பசுவும்,கருப்பு நிற எருமையும் . பச்சை நிற புல்லை திண்ட பிறகு அது போடும் சாணம் பச்சையாக இருக்கிறது.ஆனால் அது கறக்கும் பால் மட்டும் வெள்ளை நிறமாக இருப்பது ஏன்? என்றான்.விவசாயி,அவனை மேலும் கீலும் பார்த்துவிட்டு,  உனக்கே தெரியல! இதுல அறிவாளி மாதிரி கேள்வி வேறா? என்று நிணைத்து விட்டு,“ அது தெரிந்திருந்தா நா....ன் ஏனுப்பா மாட்ட மேய்ச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னார்.

மாடு மேய்க்கிறவங்களுக்கு தெரிஞ்சிருக்குமேன்னு கேட்டேன் என்றான்.

இதை அந்தக் கிராமத்தில் இருந்தவர்களிடம் பலபேரிடம் கேட்டான். ஒருவரும் அவனின் சந்தேகத்தை தீர்க்கவில்லை, அவனை காத்து கருப்பு புடிச்சிருக்குன்னு நிணைத்துக்கொண்டனர்.

கடைசியாக  அவ்வழியாக பைக்கில் சென்ற ஒரு கருப்பு சட்டைக்கராரிடம் கேட்டான். அவர் சொன்னார் அது வேதியியல் மாற்றத்தால். நடக்கிறது. என்று விளக்கமாக சொல்லாமல்  கூடவே  இரண்டாவது சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டு போய்விட்டார்.

அதாவது, பச்சை புல்லை தின்று பச்சையாக வரும் சானத்தை  சானபிஷேகம் செய்யாமல்,வெள்ளையாக வரும் பாலை ஏன்? பாலபிஷேகம் செய்கிறார்கள் என்று அவனிடம் கேட்டார்.

அவனும் அட,ஆமா,பச்சையாக வரும் சானத்தை அபிஷேகம் செய்யாமல் வெள்ளையாக வரும் இன்னொன்றையும்விட்டு விட்டு பாலை மட்டும் அபிஷேகம்  செய்கிறார்கள் ஏன்? ஏன்? என்று   கேட்டான். 

அவனது சந்தேகத்தை தீர்க்க கிராமத்தில அறிவாளிகள் யாருமில்லாததால், நகரத்தில் மெத்த படித்த அறிவளிகள் இருப்பார்கள்  அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் புறப்பட்டான். 

தீராத சந்தேகத்துடன்  நகரத்துக்கு  கிளம்பியவன்.  நகரத்தில் உள்ளவர்களை தூ ன்னு துப்பிவிட்டு,  திரும்பவும் கிராமத்துக்கே திரும்பினான்.

தீராத சந்தேகத்தை   நகரத்தில் உள்ள படித்தவர்களிடம் கேட்டு தீர்த்துக்கிறலாம் என்று போனவன் ஏன் ? 

திரும்பி வந்தான். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.1 comment :

  1. அநேகமா அவன் எங்க ஊராத்தான் இருக்கணும்.எங்க ஊரா, அது கோயம்புத்தூருங்க.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com