பக்கங்கள்

Sunday, January 05, 2014

ஆசை.........காட்டி....................சிறுகதை


புதுசா தவனை தொழிலுக்கு வந்த தவனைக்காரனிடம், தவனை
வாங்கியே பழக்கப்பட்ட ஒருவன். ஒரு லட்சம்வரை தவனை வாங்கி இருந்தான்.இரண்டு மாதங்கள் வரை தவனை செலுத்திய தவனை வாங்கியவன்.

தவனை கொடுத்தவன் தொழிலுக்கு புதியவன் என்பதினால் தவனை கொடுக்காமல் எமாற்றும் திட்டத்தோடு அவனுடன் சண்டையிட்டான்.
இதனால் தவனை கொடுத்தவனுக்கும் தவனை வாங்கியவனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டது.

தவனை வாங்கியவன் தவனைத் தொகையை இன்னைக்கு தாரேன். நாளைக்கு தாரேன் என்று நாட்களை கடத்தி வந்தான்.

தவனை கொடுத்தவனோ, தெரியாத் தனமா இத் தொழிலுக்கு வந்துவிட்டனே! என்று தன் நண்பரிகளிடம் புலம்பியபடி சலிக்காமல் கேட்டு அலைந்து கொண்டு இருந்தான். கொடுத்த பணத்தையாவது  வாங்கிவிட வேண்டும் என்று மனதில் கங்கணம் செய்து கொண்டு இருந்தான்.

மூன்று பைசா வட்டிக்கு வாங்கி மாதம் தவறினாலும் வட்டியை தவறாமல் செலுத்தி வரும்  நேர்மையாளனின் ஒருவனின் மூலமாக தெரிந்த நண்பரின் ஆலோசனைப்படி......

முதலில் தவனை கொடுக்கும் தவனை பார்ட்டிகளிடம் ஆலோசனையை கேட்டான். அந்த தவனை பார்ட்டிகளோ.....மிரட்டல்,கடத்தல்,அடித்தல், கொடுத்த பணத்திற்கு ஈடாக பெருமான பொருளை எடுத்துக்
கொள்ளுதல்,கட்டபஞ்சாயத்து செய்தல். போலீசில் மோசடி புகார் செய்தல்.போன்ற பல அனுபவங்களை சொன்னார்கள்.

புதிய தவனைகாரனுக்கு அந்த வழிகளில் செல்வது  சரியாகப்படவில்லை, கம்பும் உடையாமல் பாம்பும் சாகமால் இருப்பது போன்ற வழிகளை யே தேடினான்.

ஒருநாள்  ஆலோசனை கேட்டதின்படி தனக்கு தெரிந்த பேங்க்காரன் ஒருவனிடம் ஒரு லட்சம் கடன் பெற்றவனைப்பற்றி சொல்லி பணத்தை வசூல் செய்யும் வழி கேட்டான்.

அந்தப் பேங்காரனோ.தனக்கு இவ்வுளவு கமிஷன் கொடுத்தால். பணத்தை பெற்று தருவதாக சொன்னான்.

கடைசியாக. புதுத்தவனைக் காரனும் பேங்க்காரனும் சில  உடன் படுக்கை செய்து கொண்டனர்.

சில நாள் கழித்து தவனை கொடுத்தவன். தவனை வாங்கியவனை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது டிப்டாப் ஆசாமி ஒருத்தன் இவர்களுக்கு அருகில் வந்தான். வந்தவன். ஒரு நோட்டீசை கெர்டுத்து

அரசு அங்கீகாரம் பெற்ற இன்வெஸ்ட கம்பெனி, உத்தரவதமானது,
கஷ்டப்பட்டு ரெண்டு லட்சம் கட்டினால்.அடுத்த ரெண்டெ வருசத்தில்
 ஐந்து லட்சம் உங்களுக்கு கிடைக்கும், மந்திரமும் இல்லை. மாயமும்
இல்லை நிஜம்... இப்படி நிறைய பேரு கட்டி வாங்கிட்டாங்க........ ஒரு குடும்பத்துல ஒரு நபருக்கு ஒரு தடவைதான் சான்ஸ்.....  அடுத்த சான்ஸ் மற்றவங்களுக்கு.இத்திட்டம் குறுகிய காலம் வரைக்கும்தான்  என்று நம்பும்படியாக அளந்து விட்டான்.

தவனை வாங்கியவனிடம் சென்று ரெண்டு லட்சம் இல்லேன்னாலும் ரெண்டு பேர் சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம் கட்டிவிட்டு ரெண்டு வருசம் கழித்து ஐந்து லட்சம் வரும்போது ரெண்டரையாக பிரித்துக் கொள்ளலாம் .“ வீடு தேடி வர்ர சீதேவிய ஊதாசினப்படத்தக்கூடாது என்றான்.

தவனை கொடுத்தவனும் தவனை வாங்கியவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தவனை வாங்கியவன் .டிப்டாப் ஆசாமியிடம் மேலும் சில சந்தேகங்களை கேட்டான்.

பணத்தோடு,ரெண்டு பாஸ்போர்ட் போட்டோ ரெண்டு.ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, ஜெரக்ஸ்சுடன் ஒரிசினலுடன் ஆபிசுக்கு வரவேண்டும் என்றான்.

தவனை கொடுத்தவன். தவனை வாங்கியவனிடம் சொன்னான். ஏப்பா....... எனக்கு தர வேண்டிய ஒரு லட்சத்த எப்படியாவது பொரட்டு,நானும் ஒரு லட்சம் தர்ரேன். ரெண்டு பேர்லேயும் கட்டுவோம். அஞ்சு லட்சத்தில் பாதியாக பிரித்துக் கொள்வோம், எனக்கு  நீ ஒரு லட்சம் தரவேண்டியதில்லை என்றான்.

டிப்டாப் ஆசாமி, விசிட்டிங்கார்டை ரெண்டு பேரிடமும் கொடுத்துவிட்டு  சில விசயங்களில் சட்டுபுட்டுன்னு முடிவெடுக்கனும், லேட்டானா  வாய்ப்பு கை நழுவிப் போயிடும் என்றான்.

மறுநாள் தவனை வாங்கியவன். தனக்கு தெரிந்தவர்களிடம் இனஸ்வெஸ்ட கம்பெனியைப்பற்றி விசாரித்தான். தன் பொன்டாட்டியின் நகைகளை விற்றான். ரெண்டு லட்சத்தை தேத்தியவுடன் தான் மட்டும் தனியாக “ரெண்டு லட்சம் கட்டினா அஞ்சு லட்சம்” கொடுக்கும்  இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனிக்கு புறப்பட்டான்.


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com