பக்கங்கள்

Tuesday, January 27, 2015

தற்கொலைக்கு தூண்டிய நீதி மன்றம்......


படம்-www.akaramuthala.in


 15 வயதுள்ள சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக காரைக்கால் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமாரின் மனைவியும் சிறுமியின் வளர்ப்பு தாயாருமான அம்பிகா மற்றும்  சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக  இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி வள்ளி மற்றும் சிறுமியை திருமணம் செய்து கொண்ட சிவக்குமார் ஆகிய மூவரையும்  காவல்துறையினர்  கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

நீதி மன்றத்தின் உத்தரவுப்படி காரைக்காலில் மகளிர் சிறை இல்லாததால்  புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அம்பிகா, மற்றும் வள்ளியை அடைத்தனர்.

 நீதி மன்ற காவலில் இருந்த அம்பிகா தனக்கு ஜாமீன் வேண்டி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..கொள்ளை  அடித்து ஊழல்வாதி என்று தீர்ப்பு கூறப்பட்டவர்களுக்கு உடனே விடுதலையும், 25 அடிக்கு பதிலாக 25000 அடிக்கு தாதுமணல் கொள்ளை அடித்தவர்களுக்கு மு்ன்ஜாமீன் வழங்கி நீதியை நில நாட்டிய நிதிமன்றம்   அம்பிகாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இதனால் வெறுப்படைந்த அம்பிகா, நள்ளிரவில் சிறை வளாகத்தில் உள்ள கழிப்பறை ஜன்னல் கம்பியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரை தற்கொலைக்கு துாண்டியது  நீதிமன்றம் என்றால். அந்த நீதி மன்றத்தை,.   எந்த பீனல் கோட்டில் வழக்கு பதிவு செய்து எந்தச் சிறையில் அடைப்பார்கள்.

8 comments :


 1. இந்த மாதிரியான செயல்களால்தான் பாதிக்கப்பட்டவர்களால் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் முதலில் இவர்களே தண்டிக்கப்படவேண்டும்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகளாக உருவானாலும் அவர்களால் இவர்களுக்கு பேரும் புகழும்தான் ஏற்ப்படுகிறது. நண்பரே......

  ReplyDelete
 3. வேதனையாக உள்ளது. இதுதான் ஜனநாயகமோ?

  ReplyDelete
 4. இருப்பவனுக்கு ஒரு நீதி ,இல்லாதவனுக்கு ஒரு நீதி ,இதுதானே நம்ம நாட்டு சட்டத்தில் இருக்கும் ஓட்டை ?
  த ம 3

  ReplyDelete
 5. இதுதான். இந்திய ஜனநாயகம் ஐயா....!!

  ReplyDelete
 6. ஒட்டை எதுவும் இல்லை நண்பரே... கள்ளத் தனமாக பெறப்பட்ட இரவல் சட்டமே அப்படித்தான் நண்பரே.....

  ReplyDelete
 7. “அடப்பாவிகளா”...என்று நம்மால் திட்டத்தான் முடியும் நண்பரே....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com