பக்கங்கள்

Tuesday, February 18, 2014

தேர்தல் ஆணையத்தை கலைக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!!!

இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்குமாறு, நெல்லை மாவட்டம் ராதாபுரம் பெருங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர். தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக “தேர்தல் நீதிமன்றம” அமைக்க வேண்டும்

இந்த தேர்தல் நீதிமன்றத்தில் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளை தேர்தல் மன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்

வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது,வாக்காளர் பட்டியல் தயாரிப்பது புகாருக்கு ஆளாகும் எம்பி,எம்எல்ஏயை தகுதியிழப்பு செய்வதுடன் தேர்தலையும் “தேர்தல் நீதிமன்றம்”தான் நடத்த வேண்டும்.

இதற்க்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இடைத்தேர்தல் நடத்தாமல் அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை அந்தத் தொகுதியில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துவது. எம்எல்ஏ கட்சித் தாவல் செய்தாலோ,ராஜினாமா செய்தாலோ,பொதுத்தேர்தல் வரு்ம்வரை
தொகுதி பிரதிநிதியாக மாவட்ட ஆட்சியரே செயல்பட வேண்டும்.

ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க வேண்டும். சுயேச்சை எம்பி,எம்எல்ஏக்கள் அரசியல் கட்சியில் சேர அனுமதிக்ககூடாது. ராஜ்யசபா எம்பியை மெம்பர் ஆப் ராஜ்யசபா என்று அழைக்க வேண்டும்.

வோக்காளர் அடையாள அட்டையை குடும்பக் கார்டுடன் இணைக்க வேண்டும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறமோ அந்தச் சின்னம் தெரிய வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளை பதிவு செய்ய  குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்படியாக 16 ஆலோசனைகளை மத்திய மாநில அரசகளுக்கும், மத்திய-மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி உள்ளதாகவும், தான் அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

 இவரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் மத்திய-மாநில உள்துறை செயலர்களுக்கும் தேர்தல் ஆணையர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

தாக்கல் செய்த கிருஷ்ணன் மனுவானது  ஒலகத்திலே பெரிய்...........ய ஜனநாயக நாட்டிலே சாத்தியமான்னு....

நீதி அரசர்கள் இந்த நூற்றாண்டுக்குள் சட்டுபட்டுன்னு விசாரித்து சொல்வார்களா.?...அல்லது அரசின் கொள்ளை முடிவில் நாங்கள் தலையிட மாடடோம் என்று சொல்வார்களா.?......அல்லது கோடிக்கணக்கிலே வழக்குகள் தேங்கி கிடக்கயிலே........வேலைகெட்ட  வேலையிலே இது வேறையான்னு வழக்கே உகந்தது இல்லைன்னு தள்ளுபடி செய்வார்களா.?அல்லது மறு விசாரனை தேதி குறிப்பிடாமல் கிடப்பில் போட்டு விடுவார்களா?- ன்னு  மத்திய- மாநில உள்துறை செயலர்களும்,தேர்தல் ஆணையர்களும் எப்போ நோட்டீக்கு பதில்  அளிக்கிறார்களோ....அ துக்கு பின்னாடிதான் தெரியவரும்.

அதுவரைக்கும் அடுத்த வேலைக்கு ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com