புதன் 19 2014

ஏழு பேர் விடுதலை... பரிகாரமும் புன்னியமும்......

பக்தர்கள்  வல்லமை பொருந்தியதாக கருதும்  தெய்வத்திடம், தாமும் தன் குடும்பமும் நோய்நொடி இல்லாமல் எந்தவித கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்று வேண்டுவார்கள். வேண்டுதல் நிறைவேற இன்னது செய்வதாக நேர்ந்து கொள்வார்கள்.

பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி விட்டால், தாங்கள் ஒப்புக் கொண்ட நேர்த்திக்கடனை மொடடை போடடோ,தீ மிதித்தோ, தேங்காய் உடைத்தோ, உண்டியலில் காணிக்கை செலுத்தியோ இப்படி தங்களின் பொருளாதார வசதிக்கேற்ப நிறை வேற்றுவார்கள்.

 இந்த வேண்டுதலிலே இன்னொரு முறை யும்உண்டு அது .கொலை , .கொள்ளை,ஊழல் அதிகார துஷ்பிரயோகம், பொய்யும் புரட்டுமாய் பேசுவது, நம்பியவர்களை ஏமாற்றுவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது  அடுத்தவன் சொத்தை அபகரிப்பது  -இப்படியான ஏகப்பட்ட காரியங்களை செய்தவர்கள் .தாங்கள் செய்த இந்த பாவங்களினால் உண்டாகும் தீமைகளிலிருந்து தம்மையும் தம் குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்வதற்க்காக பரிகாரம் செய்வது.......

இந்த பரிகார முறையானது. அன்னதானம் செய்வது, கோயில் கட்டுவது, தெய்வத்துக்கு தங்கம் வெண்கல மணி அணிவிப்பது.எடைக்கு எடை கொடுப்பது இப்படியான பல வழிமுறைகள்.

இத்தகைய பரிகாரத்தை செய்தால் செய்த தீமைகளின் கொடுமையிலிருந்து பாவங்களிலிருந்து தப்பித்து,  செய்த பாவங்கள் மறைந்து பேரும்புகழோடு புன்னியமும் கிட்டும். இது பெருவாரியான மக்களின் நம்பிக்கையாக செயல் பட்டு வரும் முறைகள்.

 இதே போலத்தான்  சமூகத்தில் உலாவி வரும் பெரிய மனிதர்களில் சிலர்.  புன்னியம் தேடிக் கொள்வதற்க்காக பரிகாரம் செய்கிறார்கள்.அந்த பரிகாரத்தில்  ஒன்று தான்  “மூவர் தூக்கு ரத்து” என்ற பரிகாரம்.

இந்த பரிகாரம் செய்து  பெற்ற புன்னியத்திலும் பங்கு கேட்டு.சிலர் இடைசொருகலாக சேர்கிறார்கள். சிலர் செய்த பாவத்தை போக்காமல்
மேலும் பாவங்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிலர்  செய்த பாவத்துக்கு பரிகாரத்தை நிறைவேற்றுவதாக
அறிவிக்கிறார்கள் அவர்களின் அறிவிப்பில்.தெய்வங்களைவிட பகதர்கள்தான் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து மகிழ்ச்சிக கடலில் மிதக்கிறார்கள்.

அந்த பக்தர்களின் மகிழ்ச்சிகள்  மூன்று நாட்கள் கழித்து “ஏழு பேர்கள் விடுதலை” என்ற உண்மையான பரிகாரத்தில்தான்  இருக்கும். அப்பொழுதுதான் பரிகாரம் செய்தவர்களுக்கு பேரும் புகழும் அடங்கிய புன்னியமும் கிடைக்கும். பக்தர்களின்  மகிழ்ச்சியும் நீடிக்கும்.


2 கருத்துகள்:

  1. உண்மையான பரிகாரம்...ஏழு பேர் விடுதலை நடக்கிறதா காத்திருந்து பார்ப்போம் !
    த ம 1
    இன்றைய ஜோக்காளியில் ... மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை !http://www.jokkaali.in/2014/02/blog-post_6341.html கருத்து கூற வாங்க !

    பதிலளிநீக்கு
  2. பரிகாரத்துக்கும்,மகிழ்ச்சிக்கும் ஆப்பு வச்சுட்டார்கள் பெரியமனிதர்கள்.....பகவான்ஜி..

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....