செவ்வாய் 06 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(3)

இரவு  ஏழு மணிக்கு பொலீஸ் ஸ்டேசன் சென்ற பொழுது... போலீசு ஸ்டேசனுக்கு அருகில் உள்ள டீகடையில் தெரு நாட்டாமையின் மூத்த மகனும் விடுதலை சிறுத்தைகட்சியின் முகாம் பொருளாருமான செல்ல மணியும், ராணியன் ஒன்றவிட்ட அக்காவும் தெருவின் பொம்பள நாட்டாமையின் கடைசி மகனும்  .வி.சியின தெருவின் முகாம் அமைப்பாளருமான அழகமணியும் இரண்டு  போலீஸ்காரர்களுடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அவர்களைக் கண்டதும் இனி என்னத்த நடவடிக்கை எடுக்க போறாங்கே என்ற மனநிலை வந்தது. ஸ்டேசனுகக்குள் உள்ளே சென்றபோது ஏழரையும் அவன் மனைவி ராணியும் . சண்டையிட்ட வளவனும்  நின்று கொண்டு இருந்தனர். ராணி என்பவள். சிறப்பு எஸ்ஐயிடம தன் தரப்பை சொல்லிக் கொண்டு இருந்தாள்.

கணேசன் ரைட்டருக்கும் சிறப்பு எஸ்ஐக்கும் மரியாதை க்கு வணக்கம் சொல்லிவிட்டு சிறப்பு எஸ்ஐக்கு அருகில் நின்றார்.

சிறப்பு எஸ்ஐ ராணி யின் தரப்பை கேட்டக்கொண்டே கணெசனின் புகார் மனுவை படித்துப்பார்த்தார். இடையிடையே  வளவன் தான் அடிக்கவில்லை என்றும் கணெசன்தான் தன்னை அடித்து காயப்படுத்திவிட்டதாக கூறி கையில் கட்டு போட்டதை காண்பித்தான்.

கணேசனுக்கு பகீர் என்றது. “என்னடாது நாலு மணிவாக்கில் தெருவில் பார்த்தபோது கையில் கட்டு இல்லாமல் மீண்டும் தன்னை அடப்புல போட்டு விடுவதாக மிரட்டியவன் இப்போ கையில் கட்டுடன் வந்திருக்கான் என்று திகைத்தார்.

சிறப்பு எஸ்ஐ கணேசனைப்பார்த்தார். “அவுங்க  பேசி முடித்ததும் நான் சொல்றேன் சார் என்றுவிட்டு ராணி சொல்வதை கவனித்தார் கணேசன்.

இதற்கிடையில் செல்ல மணியும் அழகுமணியும் வளவன் சார்பாக கணேசன் மீதுதான புகாரை சிறப்பு எஸ்ஐயிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்ட சிறப்பு எஸ்ஐ அதையும் படித்துப்பார்த்தார். .

கணேசன் சொன்னார். சார் எனக்கும் செல்லமணியை சுட்டிக்காட்டி இவருடைய அப்பாவுக்கும் இடத்து பிரச்சினை இருக்கிறது. இவன் அந்த ஆளுக்கு ஆதரவாக என்னுடன் சண்டையிட்டு ,என்னை அடித்ததோடு இல்லாமல் அடப்புல போட்டுத் தளளப்போவதாக மிரட்டுகிறான்.  இங்கிருந்து வீட்டுக்கு சென்றபோது கையில் கட்டு இல்லாமல் திரும்பவும் என்னை மிரட்டியவன் இப்போ கையில் கட்டுடன் வந்திருக்கிறான் அது என்னால் ஏற்ப்பட்டதில்லை. அவனால் எனக்கு ஏற்ப்பட்ட காயத்தை பாருங்கள் என்று தன் உடலில் இருந்த காயத்தை காட்டினார். அந்தக் கட்ட அவித்து பாருங்க அது உண்மையா...பொய்யான்னு தெரிஞ்சு போகும் என்றார் கணேசன்.

உடனே, ஏழரை ஆஸ்பத்திரியிலதான் கட்டு போட்டு வந்திருக்கோம் சார், என்று ஆஸ்பத்திரி சீட்டை காண்பித்தான். ராணியோ கணேசனின் காலில் எற்ப்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி அது என் மகனால் ஏற்ப்பட்ட காயம்.அல்ல  கல் தடுக்கி விட்டதனால் வந்த காயம் என்றாள்.

சிறப்பு எஸ்ஐ ரைட்டரைப் பார்த்தார். ரெண்டு பேரும் சொந்தக்காரங்க ஒரே தெருவுல இருங்காங்க.. எழுதி வாங்கிட்டு அனுப்பிடலாம் என்றார். செல்லமணி அழகுமணியை பார்த்துவாறு.........

கணேசன் குறுக்கிட்டார். சொந்தக்காரங்க எல்லாம் இல்ல சார், ஒரே தெருவுக்காரங்கன்னு சொல்லலாம் என்றார். அவரிடம் பிரச்சினையின் விபரத்தை சொன்னார். ரைட்டர் தன் வேலையில் முழ்கினார்.

சிறப்பு எஸ்ஐ கணேசனிடம் சொன்னார். அவுகளும் உன் பேர்ல புகார் கொடுத்து இருக்காங்க..என்றார்.

“ரெண்டு புகாரைிலும் நீங்க முடிவு பண்ணி வழக்கு போடுங்க என்றார் கணெசன்.

செல்ல மணிஎன்பவன் சிறப்பு எஸ்யைிடம் பேசினான். கணேசன் தம்பி வேனும் வளவனும் தம்பி வேனும் இவன் அய்டியில கடைசி வருடம் படிக்கிறான். ரெண்டு பேரும் சண்டை போட்டு இருக்காங்க   அதனால ரெண்டு பேரையும் எச்சரிக்கை பண்ணி மன்னித்துவிடுங்க சார்” என்றான்.

கணெசனுக்கு சற்று கோபம் வந்துவிட்டது. ஏப்பா...நா....உனக்கு தம்பியா...நீ எனக்கு சொந்தக்காரனா இல்லாத உறவு முறையை சொல்லாத.....

சார், இவிங்கே சொந்தக்காரனுங்களே கிடையாது சார்.  ஒரே சாதிக்காரன் கூட கிடையாது ஒரே தெருவுல இருக்கேன் சார், நீங்க மன்னிக்க வேணாம்  என்னையும் சேத்து ரெண்டு பேத்து லேயும் வழக்கு போடுங்க என்றார் கணேசன்.

இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக சொன்னதும் புகார் பேப்பர்களை மேஜையிலே வைத்து விட்டு தொப்பியை மாட்டியபடி இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்றார்


வேறு ஒரு எஸ்ஐ என்னவென்று விசாரித்தார். செல்லமணி என்பவன் அவன் பக்க சார்பை  சொன்னான்.கணேசன்  பதிலுக்கு எதுவும் சொல்லாமல் நின்றார்.

திரும்பி வந்த சிறப்பு எஸ்ஐ  உங்க ஏரியாவுக்கு பக்கத்துல பிரச்சனை நீங்க போயிட்டு காலை பத்து மணிக்கு வாங்க என்றார். வளவனைப் பார்த்து ” டேய் வாயை மூடி..சும்மா இருக்கனும் இல்ல படிக்கிற பையனும் பார்க்க மாட்டேன்னு ஒரு எச்சரிக்கை விட்டு, கணேசன் காலையில வாங்க முடிச்சு விட்டுலாம் என்றபடி நாலைந்து போலீஸ உடன்வர வெளியே கிளம்பினார்.

அவரின் பின்னாடி செல்லமணியும் அழுகுமணியும் பேசியவாறே சென்றனர். கணெசனுக்கு புரிந்து விட்டது  இனி அம்புட்டுத்தான் எனபது. சிறப்பு எஸ்ஐக்கு வணக்கம் சொல்லிவிட்டு ஸ்டேசனைவிட்டு வெளியேறினார்.


தொடரும்...................




2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...