பக்கங்கள்

Monday, May 12, 2014

இரண்டு கால் பிராணிகளுக்கு சேவை செய்ய வரும் கோடீஸ்வரர்களின் நாலு கால் பிராணிகளின் சொத்து மதிப்புகள்


படம் தினமணிஇரண்டு கால் பிராணிகளான இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்கு வருபவர்கள். தேர்தலில் போட்டியிடவேண்டும். போட்டியிடுவதற்கு தகுதியாக தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியலை  தரவேண்டும்

அப்படி.இரண்டு கால் பிராணிகளுக்கு சேவை செய்வதற்க்காகவே பிறப்பெடுத்து வந்து தேர்தலில் நின்று .இரண்டு கால் பிராணிகளின்  வாக்குகளை பெற்று  எம்பி மற்றும் அமைச்சர்களாகி அந்த சேவையின் மூலம் கோடீஸ்வரர்களான கேடிஸ்வரர்களின்  அசையும் சொத்துக்களின் வரிசையில் தங்களிடமுள்ள நாலுகால் பிராணிகளின்   மதிப்புகளை வெளியீட்டள்ளனர். அவற்றில் சில.......

1. பீகாரில் உள்ள லாலு பிரசாத் என்பவர். தன் மனைவி ராப்பரிதேவியை தேர்தலில் நிற்க வைத்து  .அசையும் சொத்துக்களாக 45 பசுக்களையும், 20 கன்றுகுட்டிகளையும்  சேர்த்து  இதனுடைய சொத்து மதிப்பு  19 இலட்சம் என்று காட்டியுள்ளார்.

2. ஜஸவந்த் (மு. பிஜேபி காரர்) என்பவர்.தன்னிடமுள்ள  அரபுக்குதிரையை 30 லட்சம் மதிப்புடையது என்றும். அதிகபால்தரும் தார்பார்கள் பசுக்களும் 3 லட்சம் மதிப்புள்ளது என்று காட்டியுள்ளார்.

3. டில்லியை ஆண்ட ஷீலாதிட்சித்ன்  மகன் ஷந்தீப்  என்பவர் நாலுகால் பிராணிகளின் மொத்த அசையும் சொத்தாக 38 லட்சம் மதிப்புள்ளது என்று சொத்து மதிப்பில் காட்டியுள்ளார்.

ஆக, மேற்கண்டவர்களை் தங்கள் வளர்த்து வரும் நாலுகால் பிராணிகளுக்கு சேவை செய்வதோடு நின்று விடாமல், மனிதர்களான இரண்டு கால் பிராணிகளுக்கும் சேவை செய்ய களமிறங்கியுள்ளனர்.

 மனிதர்களான ரெண்டுகால் பிராணிகளும்,  “வளர்க்கிறவனை நம்பாமல் அறுக்கிறவனை நம்பும் நாலு கால் பிராணிகளை போல்  நம்பி ஏமாந்து தவிக்கின்றனர்.


2 comments :

  1. தண்ணி சேர்க்காத பாலைக் குடித்து விட்டு மக்களுக்கு தண்ணி காட்டுபவர்கள் இப்படியும் கணக்கு காட்டுகிறார்களா ?
    த ம 1

    ReplyDelete
  2. இந்த கணக்குகூட கள்ளக் கணக்கா..? உண்மைக் கணக்கான்னு சந்தேகம்ஜீ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com