பக்கங்கள்

Tuesday, May 13, 2014

உதவியது ஹோமியோபதியின் முதல் உதவி மருந்து..!!!!

www.nhm.in


ஈழத்தமிழரின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்சியின் கொடும்பாவி எரித்த வழக்கின் வாய்தா ஏப்ரல் 7ந்தேதி என்று 7ந்தேதி காலையில்தான் நிணைவுக்கு வந்தது.

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்தபோதும் பெய்யும் அடை மழையின் காரணமாக எழுந்தவுடன் நாலு கிளாஸ் தண்ணிரை குடித்துவிட்டு அமர்ந்திருந்த போதுதான் 7ந்தேதி ராஜபட்சியின் கொடும்பாவி எரிப்பு வழக்கின் வாய்தா என்று  8 மணி வாக்கில்தான் நிணைவுக்கு வந்தது.

நிணைவுக்கு வந்தவுடனே..உடனே எழுந்து பல்லை விளக்கி மழையோடு மழையாக குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டு இருந்த நேரம்.

துண்டை பிழிந்து உதறியபோது சுவற்றின் ஒரமாக சாய்த்து வைக்கப்பட்டு இருந்த பீஸ்போன நாலு டியூப்லைட்டில்  துண்டு பட்டு.டியூப்லைட்டுகள்
 கீழே விழுந்தன.

கீழே விழுந்த டியூப்லைட்டை பிடிப்பதற்க்காக குனிந்தபோது. ஒருடியூப்லைட் தவறி கீழே  விழுந்து “டப்” பென்று வெடித்து சிதறியது.

நான் கீழே குனிந்ததால் வெடித்த டியூப்லைட்டின் சிதறல்கள். எனது வலது கண்களில் புகுந்து பதம் பார்த்தன.

வலது கண்ணை மூடியபடியே மற்ற டியூப்லைட்களை சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு குளித்த வட்டையில் தண்ணீரை நிரப்பி .பதற்றப்படாமல் கண்களை கசக்காமல் தேய்க்காமல் தண்ணீரில் நிதனமாக  கண்களை முழித்துவிட்டேன்.

அப்படிச் செய்ததின் பயனாக கண்களில் இருந்த முக்கால்வாசி டியூப்லைட் துறும்புகள் வெளிவந்துவிட்டாலும் . தொடர்ந்து கண்கள் உறுத்திக் கொண்டே இருந்தன . அப்போது தோழர் ஒருவர் அறிமுகப்படுத்தி.அன்பளிப்பாக கொடுத்துதவிய ஹோமியபதியில் முதல் உதவி மருந்துகள் என்ற குறிப்பேடு  நிணைவுக்கு வந்தது.

குறிப்பேட்டை படித்து பார்த்தபோது மணல்,துரும்பு.பூச்சிகள் கண்களில் சிக்கிக் கொண்டால் கண்களை கசக்காமல் ஒரு வேளை அகோனைட் உட்கொண்டால் மணல்,துறும்பு,.பூச்சிகள் வெளியே வந்தவிடும். கண்களை உறுத்தாது என்று இருந்தது.

இதற்க்கிடையில் தோழர் ஒருவரிடம் மழை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது .எனக்கு வாய்தா வாங்க முடியுமா என்று கேட்டபோது. “இன்னிக்கு புது நீதிபதி மாற்றலாகி வந்து இருக்காரு...அதனால எல்லோரும் தவறாமல் வர வேண்டும். மழையில் நணைந்து கொண்டே வந்து சேருங்கள் என்று பதிலுரைத்தார்.

உடனே,நான் வைத்திருந்த ஹோமியபதி மாத்திரைகள் அடங்கிய முதல் உதவி பெட்டியை பார்த்தபோது அதில் அகோனைட்30  என்ற மாத்திரைகள் இருந்தன.

அதில் அயந்து உருண்டையை வாயில் போட்டு சுவைத்தப்படி மேலும் ஒரு டோஸ் மருந்தை பேப்பரில் மடித்து எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்

நான் புறப்பட்டபோது மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. மழையில் நணைந்தபடி பஸ் நிறுத்ததுக்கு வந்து கிடைத்த பஸ்ஸில் ஏறி. இரண்டு பஸ் மாறி பத்தே முக்கால் மணிக்கு ஆஜர் ஆகிவிட்டேன.

கோர்ட்டிலும் புதிய நீதிபதியிடம்  உள்ளேன் அய்யா என்றும் சொல்லி விட்டேன. வாய்தா போட்டு வீட்டுக்கு வந்த பிறகும் கண்களைப் பற்றிய சிந்தனையோ.கண்களில் உறுத்தல்களோ.தொந்தரவுகளோ எதுவுமில்லை.

அன்று இரவு கணனியில்  பதிவிட அமர்ந்தபோதுதான் கண்களில் டியூப்லைட் துகள்கள் விழுந்த சம்பவமே நிணைவுக்கு வந்தது.

நல்ல வேளையாக.நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ்களிடமிருந்து தப்பித்து விட்டேன்.

எற்கனவே, இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய என் மூத்த மருமகனின் சிகிச்சைக்காக அவனின் திருமணத்திற்க்காக சேமித்து வைத்திருந்த மூன்று லட்சமும் பத்தாதிற்கு இரண்டு லட்சம் கடனும் வாங்கி  தொடர் சிகிச்சை செய்தும் புண் ஆறமாட்டாமல் இன்னும் ஆஸ்பத்தரிக்கு செலவழித்துக் கொண்டு இருக்கிறேன்.

கையில் காசில்லாமல்  தேர்தல்களினால் வேலையுமில்லாமல்  வருமானமும் இல்லாமல் தவித்த எனக்கு அப்போது உதவியது ஹோமியோபதியின் முதல் உதவி மருந்துதான்.

இதில் யாருக்கு முதல் நன்றியை சொல்வது..
4 comments :

 1. ஹோமியோபதி மருத்துவம் ஏழைகளுக்கு ஏற்ற சிறந்த மருத்துவம் ..அதுவும் இப்போது செயின் கிளினிக் ஆக மாறி வருவது வருத்தக்குரியது !
  த ம 1

  ReplyDelete
 2. அதையும் வசூல் ராஜாக்கள் விட்டுவைக்கவில்லை ஜீ

  ReplyDelete
 3. இதுவரைக்கும் எந்த தொந்தரவும் இல்லை..hameedu jaman சார்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com