புதன் 25 2014

பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும்















என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் தமிழ்ப்பதிவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

வலிப்போக்கன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அதோடு உங்கள் பதிவில் கருத்துரையிட்ட பதிவர்களின் பதிவுகளையும்  படித்து வருகிறேன்.

அப்படி படித்து வந்த பதிவுகளின் போது கில்லர்ஜீ பதிவுகளில் ”பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும்” பதிவை படித்தபோது, பத்து பதிவர்களில் உங்கள் தளத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.

நீங்களும், பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும்  தொடர் பதிவை நீங்களும் தொடர்வீர்கள் எதிர் பார்த்தேன் என்றும். நீங்கள்  ஏன்?தொடரவில்லை என்று என்னைக் கேட்டு இருந்தார்.

 நான் அவரிடம், நான் நிணைப்பதை. உள்ளது உள்ளபடி சொல்லவா? அல்லது சாந்து வச்சு, பூசி மொழுகி சொல்லவா? என்றபோது ..

நீங்கள் என்ன நிணைத்தீரோ... அதைத் சொல்லவும். உள்ளதை உள்ளபடி சொல்பவர் அல்லவா? அப்படியே சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன் என்றார்.

 அவருக்காக....நினைத்தது.... நிணைத்தபடி............


எனக்கு பத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தெரியாது. யோசித்தால் அம்புட்டு சீக்கிரமாக வந்து தொலையாது.. அதனால...தாங்கள்  எனக்கு கேள்விதான் கேடகத் தெரியும் என்று நிணைக்கக்கூடாது. எனக்கு கேள்வியும் கேட்கத் தெரியாது.

ஏதாவது. ஒரு கேள்விய கேட்டு, அந்தக் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியலன்னு சொல்லி,என்னைய பதில சொல்லு என்று கேட்டால்.. பதில் தெரியாமல் நான்  திண்டாட வேண்டியிருக்கும். அதனால்தான் கேள்வியும் கேட்பதில்லை..

பதிவர் மதுரைத்தமிழனால் தொடங்கி வைக்கப்பட்ட, பத்து கேள்விகளும் பத்து பதிவர்களும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.


அமெரிக்க வாழ் மக்களின் அமெரிக்க மொழியின் இணையதளத்தில் பதிவிடப்பட்ட பதிவை....மதுரைத் தமிழர், தற்போது அமெரிக்க வாழ்தமிழராகஇருப்பதால்..அங்கு படித்ததை, பார்த்ததை, தமிழ்படுத்தி. அவரின் படிப்பு திறனுக்கேற்ப சாந்து வச்சு,பூசி மொழுகி, தமிழர்களின் தமிழ் இணையதளத்தில்..................

பிள்ளையார் சுழி போட்டு, ”பத்து கேள்விகளும்.பத்து பதிவர்களும்” என்ற பதிவை பதிவிட்டு தொடங்கி வைத்துள்ளார்.

அந்தப் பதிவானது  , தமிழ்பதிவர்களால் தொடர் பதிவாக , “ஆம்வே”.எம்எல்எம், போன்ற ஜெயின்  மார்கெட்டிங் மாதிரி  போய்க்  கொண்டு   இருக்கிறது.

என் படிப்புக்கும் அறிவுக்கும்,  அது சாத்தியப்படாது... அதனால் நான் தொடரவில்லை...என்றேன். வலைசரத்தை பற்றி கேட்டபோது, இந்த ஒப்பீடு வலை சரத்துக்கு வராது என்றேன்.

இதற்குப்பிறகு அவர் பதிலேதும் சொல்லவில்லை..  கேள்வியும் கேட்கவில்லை.

அதனால்தான் கில்லர்ஜீக்குப் பிறகு, ”பத்து கேள்விகளும் பத்துபதிவர்களும்”பதிவை தொடரவில்லை என்பது அவர்க்கு புரிந்து இருக்கும் என்று நிணைக்கிறேன்.

எனக்கு.

வேலை இருக்கும் நாளெல்லாம் எனக்கு வேலை நாள்.
வேலை இல்லா நாட்களெல்லாம் விடுமுறை நாள்கள்.


10 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பதிவருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது ,இடதுசாரியான நீங்கள் உங்களின் பார்வையில் பத்து கேள்விகளுக்கு பதில் சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் .அது ஒன்றும் பெரிய காரியமில்லை ,உங்கள் எழுத்து ஆற்றலுக்கு !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. உள்ளதை உள்ளபடி காட்டும் மாயகண்ணாடியே...Sorry உள்ளபடி சொல்லும் வலிப்போக்கனே
    நீர் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. திரு. பகவான்ஜீ சொல்லலாம்தான். என்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் முன்னுரிமை.........

    பதிலளிநீக்கு
  4. வாழ்க! கில்லர்ஜீ ! உள்ளது உள்ளபடி.....

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கருத்தினை நீங்கள் தயக்கம் ஏதுமில்லாமல் சரியாகவே சொன்னீர்கள்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  6. நன்றி! திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு.......

    பதிலளிநீக்கு

  7. ///அங்கு படித்ததை, பார்த்ததை, தமிழ்படுத்தி.
    அவரின் படிப்பு திறனுக்கேற்ப சாந்து வச்சு,பூசி மொழுகி, தமிழர்களின்
    தமிழ் இணையதளத்தில்..................///

    சரியாக சொன்னீங்க... அப்புறம் நமக்கு படிப்பு திறன் எல்லாம் இல்லைங்க...

    பதிலளிநீக்கு
  8. தொடர் பதிவுக்கு உதாரணம் ஆம்வேயா..? இதுவரை கேட்டிராத ஒன்று. உங்களைப் பொறுத்தவரையிலான நியாயங்களை சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  9. வருக! வருக! மதுரைத்தமிழரே! அப்புறம் படிப்பு திறன் இல்லீங்க என்பது தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது எனறு எடுத்துக் கொள்ளலாமா?? பூரிக்கட்டை அடி வாங்குறது மாதிரி......!!!!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் முதல் வருகைக்கு நன்றி! திரு.பால கணேஷ் அவர்களே!!

    ஆம்வே, எம்எல்எம் போன்றவைகள் ஜெயின் மார்க்கெட் மாதிரி.தொடர் பதிவைப் பற்றி குறிப்பிடுவதற்குத்தான் உதாரணத்துக்கு குறிப்பிட்டேன். அதில் பொருளையும் விற்கனும் ஆட்களையும் கோர்த்து விடனும். பத்து கேள்விகள் தொடரில் பொருளை விற்கனும் என்ற சிரமமெல்லாம் இல்லை. பதிவர்களின் அனுபவத்தை சொல்லி பத்து பதிவர்களை கோர்த்து விடனும் அவ்வளவே. சில பதிவர்கள்தான் பத்து பதிவர்களை கோர்த்து விட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றிகள்!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....