ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல அதுக்குள்ள காசு கேட்டு வார....
எல்லாம் செலவாகி போச்சுக்கா.....இரண்டாயிரம் தங்கச்சி மக பள்ளிகூட பீசு போயிருச்சு..இரண்டாயிரம் வீட்டு வாடகை கொடுத்திட்டேன். ஆயிரம் ரூபா. ரெண்டு வாரமா தவணை கட்டல அதக் கொடுத்திட்டேன்...க்கா...
தங்கச்சி வாங்கியிருப்பால்ல......
அவ மகன் வண்டி லோன் வாங்கியிருக்கான் ரெண்டு மாசம் டியு கட்டல.. அவளுக்கு வந்த மொத்த பணத்தையும் பைனான்ஸ் காரங்கே எடுத்துட்டாங்கேன்னு எங்கிட்ட வந்தா அதான்க்கா இரக்கப்பட்டேன்க்கா..
ஓங்கத என்னடி....
“ ஆஸ்பத்திரிக்கு போயிருச்சுக்கா.... பணம் வந்த முதல்நாளே உடம்புக்கு முடியல..காசு வந்ததும். ஒரு ஊசி போடாலாம்னு போனேன். பெட்ல சேர்த்து நாலு குலுக்கோஸ் ஏத்தினாங்க..குண்டில ரெண்டு ஊசி போட்டாங்க. மாத்திர நிறையா கொடுத்தாங்க . வந்த பணம் போயிருச்சுக்கா
ஆமா...நீ என்ன செலவழிச்ச......
ஆமா..எனக்கு என்ன செலவு இருக்கு.... நீங்க ரெண்டு பேரும் வந்து நிப்பிங்கன்னு தெரிஞ்சுதான் அரிசி வாங்கி வச்சுருக்கேன் கொண்டு போங்க..
அன்றையை வலிகள்..இன்றும் வலிகள் போகல
https://youtu.be/VOeAnFajdso?si=O0z_7g4SJV4ldh41
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை