பக்கங்கள்

Monday, July 28, 2014

வருங்கால வசூல்ராஜக்கள்எம்பிபிஎஸ்களை பாதுகாக்க 13 கேமராக்கள்....

படம்--www.dinamani.com

அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரியில் வருங்கால வசூல்ராஜக்கள் எம்பிபிஎஸ்களை பாதுகாக்க 13 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு முதல் தேதியில் வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

புதிய தாக வரும் வருங்கால வசூல்ராஜக்களை நிகழ்கால வசூல்ராஜாக்கள் வர வேற்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரியில் உள்ள மூத்த வசூல்ராஜாக்களால் வருங்கால வசூல் ராஜாக்களுக்கு (ராகிங்) தீங்கு ஏற்படாமல் தடுக்க ஒரு விசிலென்ஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விஜிலென்ஸ் அதிகாரியின்  செல்போன் எண்கள் வருங்காலகால வசூல் ராஜாக் களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் எதிர்கால ராஜாக்கள் அந்த பொனில் பேசி விபரம் தெரிவிக்கலாம்.

மேலும், மருத்துவ கல்லூரி.விடுதி, பகுதியிலும் புகார்பெட்டிகள் வைக்கப் படு கின்றன. இதனுடன் முக்கியமாக 13 இடங்களில் அதி (அதாவது மருத்துவ மனையில்  இருக்கும் செயல்படாத கண்காணிப்பு கேமரா மாதிரி இல்லாமல்)   நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன

இந்தக் கேமராக்கள் மூலம் “ராகிங்் செய்யும் மூத்த வசூல்ராஜாக்களின் நட மாட்டம் முழுமையாக கண்காணிக்கப்படும்.

இதனால் எதிர்கால.வருங்கால வசூல் ராஜாக்கள்எம்பிபிஎஸ்கள் மூத்த வசூல்ராஜாக்கள் எம்பிபிஎஸகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்..

7 comments :


 1. வரவேற்கப்பட வேண்டிய விசயம்.

  ReplyDelete
 2. ராகிங் பண்ணவும் ,காதல் பண்ணவும் கேமரா இல்லா இடமாய் பார்த்துக் கொள்வார்களே !

  ReplyDelete
 3. ராகிங் கொடுமை பலதரப்பட்ட கல்லூரிகளிலும் உண்டென்றாலும் வசூல்ராஜா கல்லூரிகளில் அதிகம்தான் ! அங்கு " வசூலும் " அதிகம் என்பதால் ராகிங்கும் அதிகமாக உள்ளதோ என்னவோ ! வருங்காலத்துல இந்த ராஜாங்ககிட்டதான் ஒடம்பை காட்டனும்ன்னு நெனைச்சா நடுங்குதப்பூ !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete
 4. தங்களின் வரவேற்புக்கு நன்றி! கில்லர்ஜீ..

  ReplyDelete
 5. வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக பயன்படும்போது...ராகிங் பண்ணவும்,காதல் செய்யவும் இடம் இல்லாமலா போகும் பகவான்ஜீ!!

  ReplyDelete
 6. ரெளத்திரம் பழகு ! பதிவை படித்துவிட்டு கருத்துரையை பதிவிடுகிறேன் சாமானியன்.

  ReplyDelete
 7. இந்த ராகிங் கொடுமையை இப்படியாவது ஒழித்தால் நல்லது.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com