பக்கங்கள்

Tuesday, March 24, 2015

இல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா ????


படம்-mahalakshmivijayan.wordpress.comஇல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா...அண்ணே......

உண்டக் கட்டி கூட உருவாகாதுடா  தம்பி...........

இல்லாத கடவுளிடம்கூட வேண்டி நின்றால்“ ஏதாவது கிடைக்காதா அண்ணா

நன்றாக பல்லு வௌக்கி சம்மனமிட்டு யாசித்தாலும் ஒன்னும் கிடைக்காதுடா

ஏதாவது ஒன்று கிடைக்க... என்ன செய்ய  வேண்டும்ண் ணே....????

அட.வெண்ண..... வெண்ண வேண்டுமென்றால் பால் வேண்டும். பால் இல்லாமல் வெண்ணெய் கொண்டுவர முடியாதுடா.... அதுக்காக தண்ணியிலிருந்து வெண்ணெ தயாரிக்க முடியுமான்னு கேட்காதடா தம்பி


அந்தக் கடவுளால் கூட  தண்ணியில வெண்ணெய்  உருவாக்க முடியாதா அண்ணா....

இல்லாததை உள்ளதாக காட்ட முடியாதுப்பா.... உள்ளதை முற்றிலும் இல்லாதாக்க முடியாதுப்பா ..அதாவது எதையும் உற்பத்தி செய்யமுடியுமே தவிர... உருவாக்க முடியாதுபா.............


மந்திரத்தில் மாங்காய வரவழைக்க முடியாது... மரம் வளர்த்து மாங்காய் வர வழைக்க முடியுமுன்னு... சொல்றிங்க  அப்படிதானே தலைவரே.....

.......மாங்கா மடையன்னோ , அம்மா பக்தன் என்றோ இனி  ஒன்ன சொல்ல மாட்டேன்டா  தம்பி


22 comments :

 1. தொண்டனுக்கு புரிஞ்சு போச்சு ,தலைவர்கள் தீச்சட்டி தூக்குவதை விடுவார்களா :)

  ReplyDelete
  Replies
  1. தலைவர்களின் ..பொழப்பே.... அங்குத்தானே இருக்கிறது..

   Delete
 2. யாரைச்சொல்றீங்கனு தெரிஞ்சு போச்சு தோழரே...

  ReplyDelete
  Replies
  1. தெரிஞ்சுபோச்சுதா.... நல்லது..நாளய பின்னிக்கி உதவும்..

   Delete
 3. Replies
  1. கருத்துரைக்கு நன்றிங்க....

   Delete
 4. தல ! பிக் பேங் தியரிய கொஞ்சம் விளக்கமுடியுமா ? விஞ்ஞானிகள் சொல்ற காரணம் ஒரு பொட்டு மண் சைஸ் கூட இல்லாத துகள் ஒன்னு வெடிச்சுதான் இந்த பிரபஞ்சமும் கோடிக்கணக்கான சூரியனும் உரவாச்சுனு சொல்றாங்க . இந்த உலகில் தோன்றிய முதல் மனித உயிரி சைனோ பாக்டிரியா , நம்ம உடல்ல இருக்க முடியவிட மிகமிகச்சிறிது .. அதுல இருந்துதான் டைனோசர் முதற்கொண்டு நீலத்திமிங்கலம் வரை எல்லாமே உருவாச்சு . பரிணாம மாற்றத்தில் தண்ணியில் இருந்தும் வெண்ணெய் வரலாம் . கொஞ்சம் நல்லா ஆராஞ்சுப்பாத்திங்கணாஉண்மை புரியும் .

  தம+

  ReplyDelete
  Replies
  1. பால் விலைய ஏத்தினவுகளுக்கும் பால்வில ஏறிப்போச்சுன்னு புலம்புகிறவர்களுக்கும்.....“ பரிணாம மாற்றத்தில் தண்ணியில் இருந்தும் வெண்ணெய் வரலாம்”” என்ற உண்மைய நீங்களே புட்டு புட்டு வைங்க தல....

   Delete
 5. குருஜிக்கு வணக்கம்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. வணக்குமுங்க..... “குருஜி” பட்டம் வாங்குவதற்கெல்லாம் எமக்கு தகுதியில்லீங்கோ.............

   Delete
 6. உங்களுக்கு இது தேவையா?,,,,,,,,,,,,

  ReplyDelete
 7. எல்லோரும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் போது... தேவைக்கு கூட கிடைக்கமால் அவதிபடும்போது..அந்த தேவையினை கருதி.......திரு.mageswari balachandran அவர்களே!!

  ReplyDelete
 8. Replies
  1. ஏற்கனவே... உதை வாங்கிட்டேன் அய்யா....

   Delete
 9. முதல் வரி அருமையான தத்துவம்.

  ReplyDelete
  Replies
  1. முதல்வரி தத்துவமா..??...நிஜந்தானா அய்யா...!!!

   Delete
 10. ஏங்க நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன தேவை.......மாங்கா மடையன்னோ , அம்மா பக்தன் என்றோ இனி ஒன்ன சொல்ல மாட்டேன்டா தம்பி இது தேவையா?

  ReplyDelete
  Replies
  1. நான்தான் தவறுதலாக புரிந்துகொண்டேனா... அல்லது தாங்கள்தான் தற்போது சொன்ன கருத்துரை போல் சொல்ல மறந்துவிட்டிர்களா..? எனக்கு தெரியவில்லைங்க..திரு.mageswari balachandran அவர்களே

   Delete
 11. மந்திரத்தில் மாங்காய வரவழைக்க முடியாது.
  மரம் வளர்த்து மாங்காய் வர வழைக்க முடியும்!
  அறிவியல் உண்மையை சொன்னதற்கு தோழருக்கு
  தோரணம் கட்டி வாழ்த்து சொல்கிறேன்.
  ஆனால்?
  மாங்காய் மரம் நடுவதற்குரிய விதையை விதைக்கும்போது
  மந்திரம் போட்டு விதைக்கும் மாங்காய் மடையர்களுக்கு என்ன சொல்ல்ப் போகிறீர்கள் தோழரே?
  (சட்டம் என்னும் மாங்காய் மரம் கண்களுக்கு தெரிகிறதா?°
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 12. சட்டம் என்பது மரச்சட்டமா.... அல்லது அடக்கி ஒடுக்கும் அரசியல் சட்டமா..? எந்த சட்டமென்று தெரியவில்லை..நண்பரே

  ReplyDelete
 13. //இல்லாத கடவுளிடம்கூட வேண்டி நின்றால்“ ஏதாவது கிடைக்காதா அண்ணா//

  எனக்கு வேலை பறிபோனது. கடவுளின் தமிழ் பேசும் தொண்டர் ஒருவர் சொன்னார் நீங்க உங்களுக்கு கிடைத்த இந்த நல்ல வேலைக்கு கடவுளுக்கு நன்றி சொல்வதில்லை அது தான் இப்படி என்று அறிவுரை சொன்னார். உண்மை என்னென்ன நிறுவனமே இழுத்து மூடிதால் அனைவருக்குமே வேலை பறிபோனது.
  நன்றாக பல்லு வௌக்கி டிபன் சாப்பிட்டு, காப்பி சாப்பிட்டு விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு எழுதி அனுப்பி இன்னும் நல்ல வேலை பெற்று கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றாக பல்லு வௌக்கி டிபன் சாப்பிட்டு, காப்பி சாப்பிட்டு விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு எழுதி அனுப்பி இன்னும் நல்ல வேலை பெற்று கொண்டேன்---.இதுதான் எதார்த்தம் திரு.வேகநரி அவர்களே!!!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com