படம்.. |
மதுரை மாவட்டத்துக்கு அருகே உள்ள ஒரு ஊரு. அந்த ஊரில் நடப்பு மாதத்தில் ஒவ்வொரு வாரமும் சரியாக ஒருவர் சாப்பாடு வேண்டாமென்று சொல்லாமல் போய் சேர்ந்து விடுகிறார்கள்.
என்னவென்று விளக்கமாக விசாரித்தால்.. வியப்பாகத்தான் இருக்கிறது.
முதல் வாரம் சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு நன்றாக இருந்த ஒரு பெருசு ..திடிரென்று சோறு வேண்டாமென்று போய்ச் சேர்ந்தார்.
அந்த பெரியவரின் மகன் வழி பேரன். பேராசிரியராக இருந்ததால் அதிக செலவு செய்து ஆட்ட பாட்டத்துடன் கொண்டு போய் அடக்கம் செய்தார்.
அடுத்தவாரம் அதே சனிக்கிழமை, அதே மூன்று மணிக்கு நடுத்தர வயதுள்ள ஒருவர் . அவரும் திடிரென்று சோறு வேண்டாமென்று போய்ச் சேர்ந்தார். அவருடைய குடும்பம் ஏழ்மையுடையதாக இருந்தாலும் சடங்கு, சாத்திரங்கள் எதையும் புறந்தள்ளாமல் செய்து அவரையும் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தனர்.
மூன்றாவது வாரம் அதே சனிக்கிழமை.அதே மூன்று மணிக்கு ஒரு வயதான பெண்மணி அவரும் தனக்கு சோறு வேண்டாமென்று அவரும் போய்ச் சேர்ந்தார்.அந்த ஊரில் உள்ள செத்தவர்களின் உற்றார் உறவினர்கள் பயபீதியில் உரைந்து போயினர்.
அதே சனிக்கிழமை, அதே மூன்று மணி மூன்றுபொணம் என்று அடுத்த சனிக்கிழமை யாருடா?? என்று பயம் கலந்த எதிர்பார்ப்புடன் சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
சனிப்பொணம் விழுந்தா தனியா போகதாம், துணைக்கு ஒரு பொணத்தை கூட்டிட்டு போகுமாம். அதுதான் அந்த ஊரில் நடந்திருக்கிறதாம்.
சனிக்கிழமை செத்த பொணத்துக்கு சடங்கு சம்பிராதயப்படி அடக்கம் செய்யும்போது துணைக்கு ஒரு பொணம் கேட்கக்கூடாதுன்னுதான் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை அதனோடடு சேர்த்து புதைப்பாங்க...........
அதையெல்லாம் மீறி... சடங்கு சம்பிராதயங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சனிப்பொணம். துணைக்கு ஒரு பொணத்த கேட்குதாம்.
ஒரே தெருவில ஒரே உறவினர்களில் ஒரே நட்பு வட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சாவு நடப்பது, அந்தந்த உறவுக்காரர்களின் மத்தியில் செய்முறை செலவுகளை அதிகப்படுத்தி கடன் கேட்டு அலையும் நிலையை ஏற்படுத்துகிறதாக புலம்புகிறார். செய்முறை செய்தே ஓஞ்சு போன ஒருத்தர்.
அடுத்த சனிக்கிழமை ஏதாவது நடந்தா நா... என்ன பன்றதுன்னு சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கார்.
பதிலளிநீக்குகுருவி உட்கார இளநீர் விழுந்த கதை போல இருக்குதய்யா....
துணைக்கு இவரும் போய் சேர்ந்திட வேண்டியதுதான் !
பதிலளிநீக்குத ம 1
துணைக்கு இவரும் போய் சேர்ந்திட வேண்டியதுதான் !
பதிலளிநீக்குத ம 1
காக்கா உட்கார பனம்பழம் விழந்த கதைன்னு சொல்லவாங்க.... நீங்க குருவி உடகார இளநீர் விழுந்த கதைன்னு சொல்றிங்க.....
பதிலளிநீக்குவர்ற சனிக்கிழமை யாரு துணைக்கு போறாங்களா .... இல்ல துணை போதுமுன்னு சனிக்கிழமை பொணம் சொல்லுதான்னு தெரிஞ்சு போயிரும்..
பதிலளிநீக்கு