படம் |
திருச்சுழி அருகே வீர சோழன் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருபவர் ஏட்டு கண்ணன்.
வீரசோழன்- அபிராமம் சாலை பகுதியில் திருட்டு தனமாக மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. இதன் பேரில் ஏட்டு கண்ணன் தனது டூவீலரில்
வீர சோழன் கிழக்கு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் அரசாங்க டாஸ்மாக் போதையுடன் சாலையில் செல்லும் டாஸ்மாக் போதையில்லாத நபர்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதைப் பார்த்த ஏட்டு கண்ணன் அந்த டாஸ்மாக் வீரர்களை தட்டிக் கேட்டார். டாஸ்மாக் போதையில் இருந்தவர்களை உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். ( உங்கள் வீட்டிற்கு போய் வீரத்தை காட்டுங்கள் என்று சொன்னதாக வீரர்கள் தப்பாக புரிந்து கொண்டார்களோ என்னவோ)
உடனே டாஸ்மாக் போதை விரர்களுக்கு கோபம் வந்துவிட்டது. இதனால் ஏட்டுவுக்கும் அவர்களுக்கும் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த மூன்று பேரும், ஏட்டு கண்ணனை சரமரியாக தாக்கினார்கள்.
மேலும் தங்கள் டாஸ்மாக் வீரத்தை காட்ட எண்ணிய வீரர்கள். ஏட்டு கண்ணனின் காதை கடித்துவிட்டு, அருகில் நின்றிருந்த ஆட்டோவில்
ஏறி தப்பி ஓடி விட்டனர்.
காயமடைந்த ஏட்டு கண்ணன் கொடுத்த புகாரில், “ஏட்டுவின் காதை கடித்து தப்பியோடிய மூன்று டாஸ்மாக வீர சோழன்களை” வலைவீசி தேடி வருகிறார்கள்.
நல்ல வேளை,காதைக் கடித்ததோடு விட்டார்களே !
பதிலளிநீக்குத ம 1
காதை கடித்த வீரர்களைத்தான் வலைவீசி தேடி வருகிறார்கள் அய்யா..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவாழ்க அரசாங்கம்,
வளர்க டாஸ்மார்க்.
ஒருத்தவுங்க வாழ்ந்தா, இன்னொருதங்க ஒழிக என்பதுதானே அர்த்தம் .
பதிலளிநீக்கு