பக்கங்கள்

Friday, July 04, 2014

கொடுமை கொடுமைன்னு கோயி லுக்கு போனா.....

படம்musivagurunathan.blogspot.comதனியார் மயம்.தாராளமயம்,உலகமயத்தின் புண்ணியத்தால் வேல வெட்டி இல்லாத பக்தர்களும் அந்த மயங்களால் திடீர் பணக்காரான பக்தர்களும் சுற்றுலா பக்தர்களும் இப்படியான பல பக்தர்களும் மற்ற நாட்களைவிட சனி,ஞாயிறு கிழமைகளில் கூட்டம்கூட்டமாக கோயில்களில் அலை
மோதுகின்றனர்.

அப்படி கூட்டம்கூட்டமாக மோதும்  கோயில்களில் ,மதுரை அழகர் கோயில்  ஒன்று.

அந்தக் கோயிலில் பக்தர்களின் நிகழ்ச்சிகளில் ஒன்று கிடாவெட்டி விருந்து வைக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் பகதர்களும் முதிய பக்தர்களும்   தனித்தனியாக,தங்களின் சகாக்களுடன் சேர்ந்து.திறந்த வெளியை பார் ஆக்கி, அரசின் டாஸ்மாக்கை ஒரு பிடி பிடித்துவிட்டு அதாவது ஊத்திகிட்டு. போதையுடன் சென்று அழகர் கோயில் கள்ளழகரை தரிசிக்கின்றனர்.

இவர்கள் டாஸ்மாக் குடித்த பக்தி போதையுடன்  கள்ளழகரை தரிசனம் செய்வதோடு .டாஸ்மாக் போதை இல்லாத பெண் பக்தர்களையும் தரிசனம் செய்கிறார்கள்.

 இத்தோடு,டாஸ்மாக் பக்தர்கள் தங்களின் தரிசனத்தை நிறுத்திக் கொள்ளாமல்,ரோட்டு பகுதிக்கு வந்து  .ஒவ்வொருக்குள் தங்கள் பக்த மொழியில் பேசி, அடிதடியிலும் இறங்கி தங்கள் பக்தியை அனைவரும் காண வழி செய்கின்றனர்.

இதனால் டாஸ்மாக் போதை பக்தியில்லாத ஆண்,பெண் பக்தர்கள் எதற்க்கு வீண்வம்பு என்று பய பக்தியுடன் ஒதுங்கி சென்று விடுகின்றனர்.

அழகரின் போதை பக்தரிகளின் பக்தியைக் கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் காவலன் என்று பீத்தி திரிகிற காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தால்

இது எங்கள் காவல்நிலைய எல்லைக்கு வராது என்று விரட்டிஅடிக்கின்றனர்..அடுத்த காவல் நிலையத்துக்கு சென்றால்,அவர்களும் இது எங்கள் எல்லைக்குள் வராது என்று திருப்பிவிட்டு போதை பக்தர்களை பக்தி பரவசத்தோடு காவல் காக்கின்றனர்.

இந்த ஆண்டு  டாஸ்மாக் இலக்காக 28 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆக. கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனாலும். அங்கேயும் டாஸ்மாக் கொடுமை பக்தி பரவசத்துடன் ஆடிக்கிட்டு வரும்.

எங்கே போனாலும்.மக்களை பிடித்த பீடையும் சிந்திக்காமல் ஓட்டுபோட்டதால் ஏற்ப்பட்ட கொடுமையும் தீராது தீராது.

6 comments :

 1. இன்ப சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே !
  பள்ளு பாடுவோமே !
  த ம 1

  ReplyDelete

 2. இவங்களை திருத்தவே முடியாது பாஸூ.

  ReplyDelete
 3. எப்படி ஆன்டவரே!டாஸ்மாக குடி மகன் ஆகி விட்டோம் என்றா....

  ReplyDelete
 4. எப்படி பாஸ் ! அவ்வளவு நிச்சயமாக சொல்றீங்க! இவங்கள திருத்தவே முடியாதுன்னு.

  ReplyDelete
 5. உலகிலே குடித்து போதையில் தடுமாறுவோரின் பாதுகாப்புக்கு அறிவிப்பு பலகை வைத்து குடிக்க வைக்கும் நாடு நம்ம தமிழ்நாடே!
  வாழ்க, நம் அரசு..அவர்தம் குடிகாரர் மேல் அனுதாபமும்.

  ReplyDelete
 6. திரு.யோகன் அவர்களுக்கு குடி கெடுக்கும் அரசு நம் அரசு இல்லிங்க இது குடி அரசுங்க....

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!