படம் |
இந்திய பிரியாணி விருந்தைப்பற்றியும், மணமக்கள் இல்லா திருமணம் பற்றியும் இந்தீயாவின் தேர்தல் ஆணையத்தின் முன்னால் தலைமை ஆணையர் எஸ்.ஓய். குரோஷி என்பவர் ,தான் எழுதிய புத்தகத்தை இந்தியாவின் முன்னால் தலைநகரமான இலண்டனில் வெளியீட்டுஇந்திய தேர்தலின் போது தான் கண்டுபிடித்த அரியபெரிய கருத்துகளை கூறி சிறப்புரை ஆற்றினார்.
இந்தியத் தேர்தலில் வாக்காளர்களை கவர.பிரியாணி விருந்து கொடுப்பது மணமக்கள் இல்லாமல் திருமணவிழா நடத்துவது போன்றவற்றின் மூலம் கருப்பு பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்று வெளிப்படுத்தினார்.
அய்ரோப்பாவின் அனைத்து நாட்டு வாக்காளர்களைவிட, இந்தியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் அப்படி அதிகமான வாக்காளர்களை வாக்களிக்க வைப்பது பெரிய சவால் என்றும்
அத்தகைய சவாலை மிகப்பெரிய ஜனநாயக முகமாக விளங்கும் இந்தியாவில் நிறைவேற்றுவதை பெருமையாக குறிப்பிட்டுள்ளார்
மேலும், இந்தியாவின் ஜனநாயகத் தேர்தல் கொண்டாட்டத்தை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டதையும் சேர்த்து, தன் புத்தகத்தை படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் இருக்க நகைச்சுவையுடன் எழுதியுள்ளதாக தெளிவுபடுத்தினார்.
பிரியாணி விருந்து, மணமக்கள் இல்லா திருமணம் போன்றவற்றை நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் பிரச்சாரத்துக்கு , அரசாங்கமே செலவிடுவது தீர்வாக அமையாது என்றும், சட்டத்தை கடுமையாக்கி தேர்தல் ஆணையம் எடுத்து வருவதையும் மேலும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
ஆக....முன்னால் தேர்தல் ஆணையரின் கருத்துப்படி, இனி வரும்காலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களை முன் மாதிரியாகக்கொண்டு தேர்தல் நாளன்று அதாவது ஓட்டு போடும் நாளன்று 144 தடை உத்தரவு போட்டு, ஒரு பய வெளியே தல காட்டக்கூடாது என்பதற்க்காக கூடுதலாக ஊரடங்கு சட்டத்தையும் இன்னும் இது போன்ற கடுமையான சட்டத்தை அமுல்படுத்தி.........
மணமக்கள் இல்லாமல் நடக்கும் திருமணத்தைப்போல, வாக்களார்கள் இல்லாமல், திறமையாக,நேர்மையாக தேர்தலை நடத்தலாம் என்று இந்தியாவின் முன்னால் தலைநகரில் இருந்து கொண்டு பச்சை கொடி காட்டியுள்ளார்.முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி.............................
பதிலளிநீக்குவெவரமான ஆளுதான் அதான் லன்டன்லருந்து கொடியாட்டுறாரு....
வாக்காளர்களுக்கு ஆதரவாகவும் ,வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்டத்தைக் கடுமையாக்கினால்தான் நல்லது !
பதிலளிநீக்குத ம 1
அதுசரி...
பதிலளிநீக்கு"ஒலகநாயகன்" தொடங்கி அதிகாரி வரைக்கும் அத்தனை பேரும் இந்த பிரியாணி விருந்தை பத்தி பேசி சொந்த காசுல சூனியம் வச்சிக்கிறது ஏனுங்க ?
நன்றி
சாமானியன்
விவரம் இல்லேன்னா லண்டன்ல போயி கொடி ஆட்டமுடியாதுங்கலே...
பதிலளிநீக்குவாக்காளர்க்கு ஆதரவாகவும் வேட்பாளர்க்கு எதிராகவும் இந்தியாவின் ஜனநாயகத்தேர்தல்ல தலைகீழா நின்னாலும் இருக்க முடியாதுங்க..............
பதிலளிநீக்குசொந்த காசுல சூனியம் வச்சாதான் அடுத்து பொழைக்க முடியுமுன்னு யாராவது ஆல்ஓசனை சொல்லிருப்பாங்க அதனால இருக்கும்...
பதிலளிநீக்கு