படம்- |
பெரியதும் சின்னதுமாய் ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செய்து வந்த பல சமஸ்தானங்களை நைச்சியமாக பேசியும், மடக்கியும், மசியாதவர்களை மிரட்டியும், எதிர்த்தவர்களை படை கொண்டு அடக்கியும் இந்தியா என்ற பேரரசை நிறுவியவர் குஜராத்திகாரர் .
இந்தியாவின் சுதந்திரத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும். பசியாலும்.பட்னியாலும். உடுத்திய அரை ஆடையுடனும், ஆயிரம் ஓட்டைகள் உடைய ஓலைக் குடிசையில் தங்கி. ஏழைக்களுக்காகவும், அரியின் புதல்வர்களுக்காகவும், தன் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயரை எதிர்த்து வாழ்வா? சாவா? என்று அகிம்சை வழியில் நின்று போராடிக் கொண்டு இருந்தவர் குஜராத்திக்காரர்.
இப்படி... இந்திய சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் குஜராத்திகாரர்க்கு தினம் பத்து பேரிச்சம் பழங்களை ஊற வைத்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.
ஒரு நாள். போராடிக் கொண்டிருக்கும் குஜராத்திகாரரை மரியாதை நிமித்தமாக காணச சென்றார் . இந்திய பேரரசை நிறுவிய குஜராத்திக்காரர். அப்போது அந்த குஜராத்திக்காரர் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டுக் கொண்டு இருப்பதைக் கண்ட இந்த குஜராத்திக்காரர். . மேலும் ஐந்து பழங்களை தந்து இதையும் சேர்த்து சாப்பிடுங்கள் என்று கொடுத்துவிட்டு,..பத்துக்கும் பதிணைந்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்.
உடனே, பேரிச்சம்பழம் சாப்பிடும் பழக்கமுள்ள குஜராத்திக்காரர், கூடுதலாக பேரிச்சம் பழங்கள் கொடுத்த குஜராத்திக்காரரைப் பார்த்து ,“நீ.என் ஞானக் கண்ணை. திறந்துவிட்டாய்”
பத்துக்கும் பதிணைந்துக்கும் வித்தியாசம் இல்லையென்றால், பத்துக்கும்,ஐந்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. “இனி எனக்கு பத்தோ,பதிணைந்தோ பேரிச்சம் பழங்கள் வேண்டாம். ஐந்து பேரிச்சம் பழங்களே போதும் என்று சொல்லி விட்டார். அந்தக் குஜராத்திக்காரர்..
.
.
சிக்கனம்தான்.
பதிலளிநீக்குஐந்துக்கும் பத்துக்கும் விலை வித்தியாசம் இருக்கத்தானே செய்யும் ?இதில் ஞானக்கண் திறக்க என்ன இருக்கிறது ?
பதிலளிநீக்கு(ஏனென்று தெரியலே ,வாக்களிக்க முடியலே )
இவர் சிக்னமாக இருந்தது பெற்ற பிள்ளைகளக்கு கூட பய்ன்பட்டதா என்பது தெரியவில்லை.....
பதிலளிநீக்குசிக்னமாக இருப்பதை்தான் அப்படிச் சொல்கிறார் ஞான்கண்ணு திறந்து விட்டாய் என்று......
பதிலளிநீக்கு//இனி எனக்கு பத்தோ,பதிணைந்தோ பேரிச்சம் பழங்கள் வேண்டாம். ஐந்து பேரிச்சம் பழங்களே போதும் என்று சொல்லி விட்டார். அந்தக் குஜராத்திக்காரர்.//
பதிலளிநீக்குபேரிச்சம் பழத்தை சாப்பிட்டுவதால் மட்டும் உடம்புக்கு தேவையான வைட்டமின் கிடைத்துவிடாது மூட நம்பிக்கைகளை துறந்தாலே நல்லவை கிடைக்கும்.
எனக்கு ஐந்து பேரிச்சம் பழம்கூட வேண்டாம். பேரிச்சம் பழத்திற்க்காக மூடநம்பிக்கையை துறக்காத தியாகி..ங்க அவரு....
பதிலளிநீக்கு