சனி 13 2014

சப்- கோர்ட்டிடம் கேள்வி கேட்டு, பதிலை தானே சொன்ன அய்- கோர்ட்..

சென்னை உயர் அற மன்றம்


கோவை சார்பு நீதி மன்றத்தில் நடந்த சிவில் வழக்கில் அளித்த தீர்ப்பை  எதிர்த்து மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அப்பீல் செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதி மன்றம் , ஜெ.யின் சொத்து குவிப்பு வழக்கு போட்டியில் கலந்து கொள்ளவதற்கு என்னவோ.. 89 தடவை வாய்தா போட்டு தள்ளி வைக்கப்பட்டது. அதில் ஓரிரு முறை மட்டுமே நீதிபதி இட மாற்றம் என்று காரணம் கூறப்பட்டது.

இந்த 89 முறை வழக்கு தள்ளி வைக்கப்பட்ட கால அளவு ஐந்து வருடங்கள் 4மாதம் ஆனது. இந்த தாமத்தை எதிர்த்தும் வழக்கை விரைந்து முடிக்கவும் உத்தரவிடக்கோரி அய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அய் கோர்ட்டு , சார்பு நீதி மன்றமும். மாவட்ட நீதி மன்றமும் ஒரே வளாகத்தில் இருந்தும், வழக்கின் ஆவணங்களை கொண்டு செல்ல ஐந்து ஆண்டுகள் ஆகுமா...என்று கேள்வி கேட்டது.

பிறகு இந்தக் கேள்விக்கு, பத்து ஆண்டுகள்  கழித்து பதில் வந்தால் என்ன செய்வது என்று நிணைத்ததோ என்னவோ... கேள்வி கேட்ட அய் கோர்டடே தான் கேட்ட கேள்விக்கான பதிலை தானே சொல்லியது.

ஆவணங்கள் கம்யூட்டர் மயமாக்காமல் இருப்பதுதான் காரணம் என்று பதில் சொல்லிவிட்டு ,வழக்கு ஆவணங்களை கம்யூட்டர் மயமாக்க அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துவிட்டு..

சார்பு நீதிமன்றம், விசாரித்த அப்பீல் வழக்கை, விசாரிக்கும் மாவட்ட நீதி மன்றத்துக்கு  ,வழக்கின் ஆவணங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென்றும், மாவட்ட நீதி மன்றம் வழக்கை ஒரு மாதத்திற்க்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உத்தரவு போட்டு அய் கோர்ட்டு வழக்கை முடித்துவிட்டது. இனி என்ன  வழக்கின் ஆவணங்களை அனுப்பவதற்குள்ளும்,  வழக்கை விசாரிப்பதற்குள்ளும் வழக்கு தொடுத்தவன் சாக, வழக்கை நடத்தியவன் இல்லாமல் போக, வழக்கு தொடுத்தவனின் வாரிசும் டாஸ்மாக் போதையில் போய்ச்சேர... வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வதற்குள் ஆண்டுகள் கடந்து போகும்..


6 கருத்துகள்:

  1. நல்ல வேளை,அய் கோர்ட் நீதியின் வேகம் அறிந்து இந்த முடிவுக்காவது வந்துள்ளதே !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இந்த வார தமிழ் மண முன்னணி வலைப் பதிவுகளில் இரண்டாம் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கவும் ,மூன்றாம் இடம் பிடித்துள்ளீர்கள் !

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் தகவலுக்கும், கருத்துரைக்கும் தொடர்ந்து எனக்கு வாக்களித்து வருவதற்கும் எல்லாவற்றுக்கும் மொத்தமாக நன்றி! நன்றி!! நன்றி!!!

    பதிலளிநீக்கு

  5. ‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு

  6. சிறந்த பகிர்வு
    இனிதே தொடருங்கள்

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...