சனி 11 2014

கருப்பு சட்டையின் நோக்கத்தை மாற்றிய கயவர்கள்..


untitled1


சுழற்சி முறையில் அன்று   நான்  அணிந்த சட்டை கருப்பு சட்டையாக அமைந்துவிட்டது.. நான் எதைப் பற்றியும்  நிணைக்காமல் கருப்பு சட்டையுடனே வெளியே சென்றேன.

வீதி வழியாக கடைக்கு சென்று கொண்டு இருந்த போது என்னைத் தெரிந்தவர்கள் என்ன கருப்பு சட்டை...“ அம்மா...கைதுக்கா.......” என்றார்கள்.

என்னைப் பார்த்தா ...அப்படியா...தெரியுது என்றேன்.

“பின்னே கருப்பு சட்டை போட்டு இருக்கிறது அதுக்குத்தான் என்றதானே காட்டுகிறது. என்றனர்.

அப்பொழுதுதான் அவர்கள் கருப்பு சட்டையை  எழவுக்கும் ,துக்கத்துக்குமான அடையாளம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்என்பது தெரிந்தது

கேட்ட..அனைவரையும் நகர விடாமல். கருப்பு சட்டையின் நோக்கத்தையும் கருப்பு சட்டையின் அடையாளம் எதுவென்று விளக்கினேன்

அட.. சாம்பிரானிகளா....... பெரியாரைத் தெரியுமா?? என்றேன்

தெரியும் என்றார்கள்.

 அவர் என்ன சட்டை அணிந்திருப்பார்” என்று கேட்டேன்..

கருப்பு சட்டை என்றார்கள்.

பெரியார் கருப்பு சட்டை அணிந்தது எழவுக்கும் துக்கத்திற்கும் இல்லப்பா....
 என்று விட்டு.. நான் கருப்பு சட்டை அணிந்திருப்பதற்கு , நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன், சுயமரியாதைக் காரன் என்பதற்கு அடையள.. மப்பா..
அந்த நோக்கத்தில் அந்த கருத்தில் தானப்பா... நான் கருப்பு சட்டை அணிந்திருக்கிறேன். என்றவுடன்..

நான் சொல்வதைக்  கேட்டுக் கொண்டு இருந்தவர் களில் ஒருவர் சொன்னர்

ராசபக்சே அய் நாவில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காரங்கெல்லாம் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்  செய்தார்கள் ...... இப்போது  ஆத்தாளை களி தின்ன வச்சுதுக்காக  அதிமுக காரர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!! என்று தகவலைச் சொல்லி கேள்வி கேட்டார்

உங்கள்  கருத்துப்படியே வைத்துக்கொண்டால் முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்கள் கருப்பு  நிறத்தில் பர்தா அணிவதும், நீதிமன்றங்களில் வக்கீல்கள் கருப்பு கோட்டு அணிவதும்  அய்யோ அப்பா கோவிலுக்கு செல்பவர்கள் கருப்பு சட்டை அணிவதும் எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காகவா அணிகிறார்கள் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றபோது...

அவர்கள் பேசாமல் இருந்தார்கள்...நானே தொடர்ந்தேன். ஒவ்வொரும் கருப்பு சட்டை அணிவதற்கு பல காரணங்கள் கூறினாலும். கருப்பு சட்டை அணிந்துள்ள எனக்கு ஒரு காரணம்தான் .

கருப்பு சட்டை அணிவது கடவுள் மறுப்பு கொள்கைக்காரன் என்பதையும் சுயமரியாதைக்காரன் என்பதையும் பறை சாற்றி தெரிவிப்பதற்க்கத்தான் ஒழிய நீங்கள் சொல்வது போல் எழவுக்கும் துக்கத்துக்கும் அணியும் ஆடை அல்ல.....

இது  தெரியாமல் அறியாமல் கருப்பு சட்டை அணிபவர்கள், கருப்பு சட்டையின் நோக்கத்தையும் கொள்கையையும் மாற்றிய கயவர்களாக இருப்பார்கள். என்றேன்.

அப்போது ..வேறு ஒருவர்.... அவ்வழியாக கருப்பு சாக்கெட் அணிந்து வந்த பெண்ணொருத்தியை காட்டி எண்ணை மடக்கினார்.

கூட்டத்தில் ஒருவர்  அந்தக் கருப்பு மேடசீங்.... அன்டு கவர்ச்சி என்றார்

இன்னொருத்தர்  பர்தா அணிந்த பெண்ணைப்பற்றிச்   சொன்னார்..............
வீதியில் கூட்டம் சேர்ந்தது ஆட்டோவும் டூவிலர்களும் ஒலி எழுப்பியதால் கூட்டம் கலைந்தது.

நானும் பாதியிலேயே பேச்சு பேச்சாக இருக்கட்டும்  என்றபடி  அவ்விடத்தை விட்டு வந்த வேலையை கவனிக்கத் நகர்ந்தேன்

6 கருத்துகள்:

  1. ஊர்ல என்ன நடக்குன்னு தெரிஞ்சிதான் வெளிய போகனும். :)) ஊர்ல அவனுக பண்ற அட்டூழியத்துக்குப் பதிலா உங்க மேல கை வைக்காம உட்டானுகளேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  2. ரவுடிகளும் அடிமைகளும்தான் கூட்டமா ஆள் சேர்ந்திருக்கிற தைரியத்தில் கை வைப்பார்கள்... மற்றவர்கள் அப்படி செய்தாக செய்தி இல்லை..

    பதிலளிநீக்கு
  3. எனக்கென்னவோ பெரியார் இந்த Black shirt ஐடியாவை நாசி(Nazi)களிடமிருந்து பெற்றிருப்பாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.ஏனென்றால் தமிழ்நாட்டின் அல்லது தமிழர்களின் வரலாற்றில் கறுப்புச்சட்டை அணிவது என்ற வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை,. ஆனால் ஹிட்லரின் நாசி படைகளில் ‘Brown Shirt’ என்ற தனியான Storm Trooper பிரிவு இருந்தது, அவர்களுக்கு மக்கள் மிகவும் பயந்தனர். யூதர்களுக்கும், ஜேர்மனியில் வாழ்ந்த சிறுபான்மை மக்களுக்கெதிரான கொடுமைகள் பல அவர்களால் தான் நடத்தப்பட்டன.

    பதிலளிநீக்கு
  4. பெரியார் யாரிடம் பெற்றார் எனபதாக இருந்தாலும் அவருடைய நோக்கமும் கொள்கையும்தான் நாம் பார்க்கவேண்டும்... திரு.வியாசன் அவர்களே!!.

    பதிலளிநீக்கு
  5. கருப்பு சட்டையின் மகத்துவம் அறியாதவர்களும் கருப்பு சட்டை அணிந்து கொள்பவர்கள் ..வாழ்ந்தானுக்கு மார் அடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  6. கருப்பு சட்டை அணிந்தவரெல்லாம் கருப்பு சட்டையின் மகத்துவம் அறிந்தவரல்ல....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...