திங்கள் 13 2014

ஒரு அனுவும் அசையவில்லையடி ஆத்தா.....



ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்: வரும் 17-ந் தேதி விசாரணை
படம்-http://mmimages.maalaimalar.com/Articles/2014/Oct/6b0e29f8-05f3-43e4-a1c1-841e8e030aba_S_secvpf.gif

பால்குடமென்ன........
விசேச பூசையென்ன............
மண்சோறு உண்டதென்ன
உன்னாவிரதம் இருந்ததென்ன
ஆயிரத்தாறு மொடடையென்ன
கடையடப்பென்ன..செய்த
அராஜகமென்ன- உருட்டலென்ன
மிரட்டலென்ன- திட்டிய வசவுகளென்ன

அடி ஆத்தா....நீ விடுதலை ஆக
வேண்டி பல தீங்கு இங்கு
நாங்க செய்தாலும் ஒரு
அனுவும் அசையவில்லையடி
ஆத்தா...........................

ஒரு ரூபா சம்பளத்தில்
அறுபத்தாறு கோடியே அறு
பத்தாறு லட்சம் நீ சம்பாதித்தாலும்

நிரந்தர முதலமைச்சர் நீதானென்று
எச்சில் ஒழுக நாங்க கூப்பாடு
போ்ட்டாலும்...................

உழலுக்கு பின்னே.......நீ
ரெண்டு முறை முதல்வராக
அமர்ந்திருந்த பாவத்தை விட
விகட கவியாய் பதினெட்டு
வருசமாய் நீதி அரசரயையே
நீ......     இழுத்தடித்த பாவம்
தாண்டி......ஆத்தா.....

நீ விடுதலை ஆக தடையாய்
இருக்குதடி.. ஆத்தா................

தெய்வம் நின்று கொல்லும்
(நீதி)அரசர் அன்றே கொல்வாரடி
ஆத்தா.................அதனால்தான்
 உன் மனு விசாரனையை
பதினேழுக்கு மா்ற்றி விட்டாரடி
ஆத்தா.......................

4 கருத்துகள்:

  1. இன்னும் எத்தனை எத்தனை நாடகமோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. //ஒரு ரூபா சம்பளத்தில்
    அறுபத்தாறு கோடியே அறு
    பத்தாறு லட்சம் நீ சம்பாதித்தாலும்

    நிரந்தர முதலமைச்சர் நீதானென்று
    எச்சில் ஒழுக நாங்க //
    எப்புடி எல்லாமிருக்கு நல்லாட்சி ஜனநாயகத்தை விரும்பும் ஆர்வம்!!!

    பதிலளிநீக்கு
  3. அத்துனை நாடகத்தையும் பார்க்கத்தானே போறோம்.....

    பதிலளிநீக்கு
  4. கொள்ளையடித்ததை பாதுகாத்து வாழ முடியாத நாடு ஒரு ஜனநாயக நாடான்னு ஒரு அடிமை கேட்டது உங்களுக்கு கேட்கவில்லையா....??

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....