பக்கங்கள்

Monday, November 17, 2014

மருந்து கடையிடம் வெட்டு வாங்கிய செருப்புக்கடை..!!!!

படம்-தந்தி

இங்கலீஸ். மருந்து கடை வைத்திருப்பவரும். செருப்பு கடை வைத்திருப் பவரும் அருகருகே  கடை வைத்து தங்கள் தொழிலை செய்து கொண்டு இருந்துள்ளனர்

 இதில் மருந்துகடையை,  அவ்வப்போது வந்து கவனித்து கொள்வார் மருந்துக்கடைக்காரரின் மனைவி .

மருந்து கடைக்காரரின் மனைவி, மருந்துகடைக்கு வந்தவுடன். செருப்புக் கடை வந்து  மருந்துகடையின் மனைவியுடன்  நகைச்சுவை சொல்லி சிரித்து பேசிக் கொண்டு இருக்கும்.

இப்படி தினமும் வந்து தன் மனைவியிடம் வந்து கடலை போட்டுக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருப்பது பற்றி மருந்துக்கடைக்கு சந்தேகம் வந்து மருந்துகடைக்கு வரக்கூடாதுன்னு செருப்பு கடையை ...பலமுறை கண்டித்துள்ளது மருந்துகடை..

இதை காதில் போட்டுக் கொள்ளாத செருப்புக்கடை. மருந்து கடை இல்லாத நேரமா பார்த்து தொடர்ந்து  மருந்துகடை மனைவிடம்  மீண்டும் கடலை போட்டு வந்துள்ளது. பொருத்து பொருத்து பார்த்த மருந்துகடை. ஒருநாள்

தன் மனைவியுடன் கடலை போட்டு சிரித்து கொண்டு இருந்த செருப்புக்கடையை அரிவாளால் ஒரே போடாக போட்டது. அம்புட்டுதான்

மருந்து கடை வெட்டியதில்  பலத்த காயமடைந்த செருப்புக்கடை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

 மருந்துக்கடையோ.. செருப்பு கடையை வெட்டியதால் போலீசுக்கு பயந்து  தலைமறைவாய் திரியுது.

 நீதி----  நொம்பளம் எந்தெந்த வழியில் எல்லாம் வரும் என்பது யாருக்கு தெரியும்

6 comments :

 1. இந்தப் பதிவிற்கு பகவான் உரை படித்துத்தான் பொருள் விளக்கமாகும் போல்!
  எப்பொழுதும் எனக்கு முன்னால் வந்திருப்பார்..
  இப்பப் பாத்து காணலையே.

  பகவானே பகவானே...

  த ம 1

  ReplyDelete

 2. உங்க கண்ணுக்கு எப்படி நண்பா இதெல்லாம் அம்புடுது

  ReplyDelete
 3. மருந்துக் கடைக் காரருக்குமா வயாக்கிரா வேலை செய்யலே :)
  த ம 1

  ReplyDelete
 4. ..... பதிவுலகை பார்வையிட்டு ஒவ்வொருத்தருக்கும் தன் திருக்கரத்தால் அருளாசி அளித்து வாழ்த்தியரும் பகவானுக்கு கொஞ்சம் ஓ்ய்வு வேண்டாமா...??? திரு ஊமைக்கனவுகள் அவர்களே!!.எப்பொழுதும் பகவானை எதிர்பார்க்க கூடாது .மற்றொரு பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று கணக்கிட்டுதான் தங்களை முன்னால் அனுப்பி இருக்கிறார். இதுவும் பகவானின் திருவியைடால்களில் ஒன்று..

  ReplyDelete
 5. உங்களுக்கு ஸ்ரீபூவு ஞானி இருக்கிறார். எனக்கு அப்படியெல்லாம் ஞானி இல்லை.. நண்பா...... நான் பட்சி ஒன்னு சொல்லுச்சு என்றால்..நீங்கள் நம்பவா போகிறீர்கள்......!!!!!

  ReplyDelete
 6. போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன் இருப்பான். வாத்தியார் வீட்டுலதான் மக்கு இருப்பான் என்பது மாதிரி... மருந்து கடைகாரர்க்கு வயக்கிரா வேலை செய்யாது.........ஜி

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!