பக்கங்கள்

Friday, January 30, 2015

குடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.....?????


விடாமல் செல் போன் ஒலித்தபோது..  நேத்து சாப்பிட்ட அயிட்டங்களினால் முத்து ,கழிப்பறையில் அவஸ்தை பட்டுக் கொண்டு இருந்தான். அதனால் போன் அடித்தவனை சபித்தபடி முக்கி முனகிக் கொண்டு இருந்தான். சிறிது கழித்து,  கழிப்பறை அவஸ்தையில் சற்று ரிலீசாயி வெளியே  வந்து செல்போனை எடுத்து பார்த்தான்...

ஆன் செய்து... பேசினான் “ என்னடா..மாப்பிள்ள..... என்னடா...”....

“......................”????


“பாத்ரூம்ல இருந்தேன்டா.....,.”.

.“....................””

சரி, அத விடுடா..... நீ  இப்ப எங்கடா..... இருக்க.....”???

”...........................................”....

என்னடா..காலங்காத்லா.... மூனாம் நம்பர் கடையில இருக்க..... என்னடா  நடந்தது.

“.........................”

சரி, நீ அங்கேயே  இரு... இதோ வந்துடுறேன்டா...மாப்ளே....ஃஃஃஃஃ

 மூனாம் நம்பர். அரசு மதுபானக்கடை.....அதன் அருகில் இருந்த அருந்தகத்தில் இருளாண்டி ஒரு  முழுப்பாட்டிலுடன் அமர்திருந்திருந்தான்.  மதுபான அருந்தகத்தின் வாசற்படியை முத்துவை எதிர்பார்த்து அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

மதுபான  அருந்தகத்தில் நுழைந்த முத்து, “ இருளாண்டி உட்கார்ந்து இருக்கும் இடத்தை நோக்கிப் போனான்.

முத்துவைப் பார்த்ததும் இருளாண்டி...கத்தினான்..“ மாப்ள.... செய்தி தெரியுமா.??.. அவளுக்கு கல்யாணம் நிச்சயமாயிருச்சு மாப்ள..... “என்னய அவ மோசம் பன்னிட்ட...டா மாப்ள....” வருங்கால கனவனுடன் சேர்ந்து என்னப்பார்த்து சிரிக்கிறடா... ,அந்த ஏமாற்றத்த என்னால   தாங்க முடியல.டா... அதனாலத்தான் காலையில... இங்க வந்திட்டேன்டா.... மாப்ளே.....


 நிஜமாவாடா.. மாப்ள.... ஒனக்கு எப்படிடா... தெரிஞ்ச்சு - முத்து கேட்டவுடன், இருளாண்டி  படத்துடன்  வந்த  செய்தி பேப்பரை காண்பித்தான்.. 

 டேய்...ஆமாடா  மாப்ள.... உன்ன ஏமாத்திட்டா..டா..மாப்ள.........  அவ ளால புன்பட்ட  இதயத்தை ஊத்தி ஆத்துவோம்..மாப்ள.....  ஊத்துடா மாப்ள...... என்றான் முத்து.


பக்கத்து இருக்கையில் அமர்திருந்த... குடிமகன்.... பங்காளி..” காதல் தோல்வியா...? பங்காளி... இந்த பொம்பளிங்கலே  இப்படித்தான் பங்காளி நானும் உங்கள் துக்கத்தில பங்கு கொள்கிறேன் பங்காளி  ... அவனும் இவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.

நாண்காவதாக இருளாண்டி, முத்துவின் நண்பன்  மொட்டையனும் இவர்களோடு சேர்ந்து கொண்டான். நாலு பேரும்  முழுப் போதையில் புலம்பிக் கொண்டு இருந்தனர். 

பேப்பரில்  வருங்கால கனவனுடன் படத்தில் இருந்தவளை பார்த்து திட்டிக் கொண்டு இருந்தனர்.  இருளாண்டி இப்படி புலம்பினான்

“ அடி சண்டாளி. ஒன்னயே மானசீகமாக காதலித்து வந்த என்னய இப்படி ஏமாத்திட்டியேடி....என்னய ஏமாத்தினது இல்லாம  சிரிக்கவும் செய்யிறீய்யா....!!!!.................

“மாபள.... அவள மறக்கக்கூடாதுன்னு அவ படத்த செல் முகப்புல வச்சு பூஜித்து வந்த ஒன்ன இப்படி அநியாமா... ஏமாத்தி தவிக்க விட்டுட்டாளே........ மாப்ளே....அவ பேர்ல..இருக்கிறத எல்லாத்தையும் கலச்சிடுவோம் மாப்ள........

அங்கு வந்திருந்த மற்ற குடிமகன்கள்... இவர்களின் புலம்பலைக்கண்டு ஒருவித ஆதங்கத்தோடு... இருளாண்டி. கையில் வைத்திருந்த  பேப்பரில் இருளாண்டியை ஏமாற்றிய காதலியை ஆவலுடன்  பார்த்தனர்.

அந்தப் பேப்பரில்” இருளாண்டி மானசீகமாய் காதலித்த காதலி ,வருங்கால கனவனுடன்  சேர்ந்து இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள..
படம்- https://plus.google.com/photos/11576333028435120614010 comments :


 1. இதென்ன காலக்கொடுமையடா கந்தசாமி.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. குத்துங்க எஜமான்!
  குத்துங்க!
  இந்த பெண்களே(பொம்பளைங்களே) இப்படித்தான் குத்துங்க!
  "சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் வசனத்தை வைத்து,
  இப்படி ஒரு சிச்சுவேஷன் கதை எப்படி தோழரே!
  அரசியல் வாடை வீசாத,
  சினிமா கடை! சாரி கதை!
  சூப்பர் ஹிட் ஸ்டோரி!

  புதுவை வேலு

  (எனது இன்றைய பதிவு "இலவசம் இனி வேண்டாம்" பதிவினைக் காண வாரீர்!)

  ReplyDelete
 3. ஹா... ஹா... முடித்தவிதம்...! ஹா... ஹா...

  ReplyDelete
 4. டாஸ்மாக் வருமானம் இரண்டு மடங்கு கூட வாய்ப்பிருக்கு :)
  த ம 3

  ReplyDelete
 5. இந்தக்காலமென்ன..அந்தக்காலத்திலே இருந்து கொண்டு இருக்கிற காலக் கொடுமைதானுங்க.... சாமி..!!!

  ReplyDelete
 6. அதே சினிமா கவர்ச்சி கதாநாயகியை ஒரதலையாய் மானசீகமாய் காதலித்த சினிமா பொறுக்கி ரசிகனின் கதைதானுங்கோ..........

  ReplyDelete
 7. படத்தப் பார்த்த எல்லா குடி மகன்களும் சிரிக்கவே...இல்லீங்க.....

  ReplyDelete
 8. பொறவு.... டாஸ்மாக் வருமாணம் கூடித்தான் போச்சு..... இவர்களின் ரகளையும் பெருகிப்போச்சு......

  ReplyDelete
 9. கடைசிவரை ஜிவ்வென்று இருந்தது.

  ReplyDelete
 10. “டாஸ்மாக்” ல.... சும்மவா.....இருக்கும்........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com