பக்கங்கள்

Wednesday, January 28, 2015

கணவனை நம்பி..காதலனை கைவிட்ட கதை..

படம்-thamizhpparavai.blogspot.com
 எப்போதும் தூங்கியவுடன் விடிந்துவிடும்  அதிகாலை  பொழுது. இன்னும் கோகிலாவுக்கு விடியவில்லை... படிக்கையில் புரண்டவாறு விடியலை எதிர்ப்பார்த்து  காத்திருந்தால்.  கோகிலாவுக்கு ...அன்று நெடு நேரத்துக்குப் பிறகே  பொழுது புலர்ந்தது.

பொழுது புலர்ந்வதைக் கண்டதும் சட்டென்று படுக்கையை விட்டு எழுந்த கோகிலா..நேராக கழிவறைக்கு சென்று காலைக்கடன்களை முதல் வேலையாக முடித்தாள் ,பின்  அதிக கோல்கேட் பற்பசையை எடுத்து பிரஸ்ஸால் பல் துலக்கினாள் , அப்படியே குளித்தும் விட்டாள்.. தலையை துவட்டியபடி பீரோவில் முன் உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டபோதுதான். தன் பரபரப்பை குறைத்தாள். பின் பீரோவைத் திறந்து  ரெண்டு மூன்று சேலைகளை ஒதுக்கிவிட்டு பார்த்தவுடன் பரவசம் கொள்ளும் ஆடையை உடுத்திக் கொண்டவுடன்  ப்ரேன் லவ்லி பேஸ்டை கையில் பிதிக்கி எடுத்து தன் முகத்தில் தடவி பளிச்சிடும்படியாக தேய்த்துவிட்டு. மீண்டும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு தன் அழகை கண்டு பெருமிதம் கொண்டாள்.

பொழுதும் நன்றாக விடிந்து வெயிலும் தலையை காட்டிவிட்டது. தன் கனவனை எழுப்புவதற்க்காக சென்றபோது அவளின் கனவன் முன்பே எழுந்து தன் குழந்தைகள எழுப்பிக் கொண்டு இருந்தான். அவனிடம் சென்று விபரத்தை சொல்லி விடை பெற்றுவிட்டு  மெயின் ரோட்டுக்கு வந்தபோது. மினி பஸ் ஒன்று தயாராக இருந்தது. அதில் ஏறிக் கொண்டாள்.

மினி பஸ்ஸைவிட்டு இறங்கியபோது ஒன்பதுக்கு மேலாகயிருந்தது.. ரெண்டு மூன்று.நாண்கு தெருவைக் கடந்து அவள் பேரைச் சொல்லிக்  அவள் வீட்டைக் கேட்டபோது தெருவுக்கு கடைசியாக போகச் சொன்னார்கள்.  தெருவின்.  கடைசி பகுதிக்கு வந்தபோது குறுக்கால் ஒரு மினி தெரு ஒன்று சென்றது. எந்தப்பக்கம் செல்வது என்று தெரியாமல்,  மீண்டும் அவளின் பெயரையும் வீட்டு உரிமையாளரின் பெயரையும் சொல்லிக் கேட்டாள். அருகிலுள்ள ஒரு  காம்பவுண்டின் வீட்டின் மாடியை காட்டினார்கள்.

ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்த திருப்தியில் மாடி படிக்கட்டில் ஏறி கதவு அடைத்து இருந்த வீட்டின் கதவைத் தட்டினாள் 

சிறிது நேரத்துக்குப்பிறகு அவளைப்போன்ற பெண்ணோருத்தி கதவைத் திறந்தால். அவளுக்கு இவளைக் க்ண்டதும்  அவளின் முகம் சற்று மாறுபட்டது. அவள் இவளிடம் என்னவென்று கேட்பதற்கு முன்பே.. இவள் பதிலை சொல்லி விட்டாள். நான் பாஸ்கரனை பார்க்க வேண்டும் என்று..

கதவைத் திறந்தவள் எதற்கு என்பதற்கு ?? முன்பாக பாஸ்கரன் என்பவன் நந்தினி  என்று குரல் கொடுத்து நந்தினியின் கையைப்பிடித்து வீட்டிற்குள் சென்று அவளிடம் கிசு கிசுத்தான். பின்பு  வாசல் பக்கம் வந்து அதுவரை நின்று கொண்டு இருந்த கோகிலாவை வீட்டிற்குள் வருமாறு அழைத்தான்.

வீட்டிற்குள் வந்த கோகிலாவிற்கு அமர இருக்கையை போட்டுவிட்டு அவள் முன்னே தானும் ஒரு இருக்கையை போட்டு அமர்ந்தான். அந்த நேரம் நந்தினி ஒரு கூடைப் பையை கையில் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டு இருங்கள் கடைக்கு சென்று வருகிறேன் என்று கதவை  இலேசாக சாத்தியவண்ணம் பாஸ்கரனை பார்த்து கண்களால் சைகை காட்டிவிட்டு வெளியே சென்றாள்.

நந்தினி வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்த கோகிலா,  பாஸ்கரனை கட்டிப்பிடித்துக் கொண்டு “ஓ” வென் அழுது  புலம்ப ஆரம்பித்தாள்.

உன்னை நம்பி வந்த  என்னை, இப்படி மோசம்  செய்துவிட்டாயே..பாஸ்கரா...??

முதலில் அழுகையை நிறுத்து கோகிலா, சத்தம்போட்டு அழாதே.. என்று பாஸ்கரன் சொன்னபோது, அவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு. கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு  மீண்டும் பேசினாள்... பாஸ்கரா ஏன்? இப்படி, என்னை  கை விட்டு விட்டாய்...

“கோகிலா, அழுகையை நிறுத்திவிட்டு , நன்றாக யோசித்துப்பார், நானா மோசம் செய்துவிட்டேன., என்னை  மோசம் செய்துவிட்டவள் நீதான் கோகிலா....

இப்படி அபாண்டமாக பொய் பேசாதே பாஸ்கரா... “கட்டிய கனவன் எனக்கு துரோகம் செய்துவிட்டான்” என்று சொல்லி என்னை உன் வலையில் வீழ்த்தி, அவனைவிட நீ நன்றாக வாழ வைப்பேன் என்று சத்தியம் செய்து, பாச மழை பொழிந்த நீ...... கட்ந்த  மூன்று மாதங்களுக்கு மேலாக என்னை மறந்து நம் குழந்தைகளை மறந்து வீட்டை மறந்து, எனக்கு தெரியாமல் இவளுடன் குடித்தனம் நடத்துகிறாயே  !!! மோசம் செய்தது நீயா....நானா....பாஸ்கார.....

இதோ பார்.. கோகிலா.. பழைய கதைகளை பேசி என்னை மயக்காதே! இப்போது உனக்கு என்ன வேண்டும். அதைச் சொல்...

“நீ   எனக்கு வேண்டும்,  நீ வீட்டுக்கு வர வேண்டும்.” பாஸ்கார...

அது முடியாது கோகிலா....ஒனக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன் கோகிலா... “நீ உன் கனவனை வேவு பார்க்க என்னை நியமித்தாய்., அந்த பழக்கத்தைத பயன்படுத்தி சும்மா கிடந்த என்னை உன் மேல் மோகம் கொள்ள வைத்தாய், உன் கனவன் அடுத்தவன் மனைவியுடன் ஓடிப்போன பிறகு. நிர்க்கதியாய் நின்ற நீ ,உனக்கு துனையாக  நான் இருக்க வேண்டும் என்று அழுதாய், பெண் என்றால் பேயும் இறங்கும் என்பது போல் என் வீட்டாரின் எதிர்ப்பை எல்லாம் எதிர் கொண்டு.நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் முடிக்காமல் உன்னுடன் வந்துவிட்டேன். இதுநாள்வரை உனக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. நீயும் செய்யவில்லை   நீயே கதி என்று இருந்தேன். எப்பொழுது ஓடிப்போன உன் கனவன் உன்னிடம் வந்து தஞ்சம் அடைந்து பாவ மன்னிப்பு. கேட்டானோ.... நீயும் மறுதலிக்காமல்  அவனை ஏற்றுக் கொண்டாயோ, அன்றைய தினத்திலிருந்து இடையில் வந்தேறியான நான்  விலகி விடுவதுான் முறை, உன் கணவனுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் போதே என்னை நீ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை  அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கோகிலா. உன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை ..நீ உன் கனவனுடனே சேர்ந்து வாழு கோகிலா....

“அவன் பாவம் பாஸ்கரா.... அழுது புரண்டு என்னை கலங்க வைத்துவிட்டான். உன்னை என்னால் மறக்க முடியவில்லை பாஸ்கார.....உன் குழந்தைக்காகாவது என்னோடு வந்துவிடு பாஸ்கரா...???

அது என் குழந்தையல்ல...உன் கனவனின் குழந்தை......

கோபம் கொள்ளாதே..பாஸ்கரா.... மூத்ததுதான் அவன் குழந்தை..இளையது உன் குழந்தை பாஸ்கரா்.... ...

அவன் குழந்தையை நான் எப்படி என்குழந்தையாக பார்த்தேனோ... அதே போல் என் குழந்தையும் அவன் குழந்தையாக வளர்க்கட்டும். கோகிலா..

அவனுக்கு இரண்டாவது நம் குழந்தை என்று தெரியாது பாஸ்கரா........அவன் உன்னை பெருமையாக பேசுகிறான்.நீ என்னுடனே இருக்க வேண்டும் என்று கேட்டபோது , அவன் சம்மதித்துவிட்டான் பாஸ்கரா.... வா..பாஸ்கரா.....

கோகிலா... நான் சொல்வதை கேள்.. உன்னைத்தேடி உன் கனவன் வந்து விட்டான். என்னால் என் வீட்டாரிடம் திரும்பச் செல்ல முடியாது. அதோடு நானும் உன் கணவனுடன் சேர்ந்து உன்னுடன் வாழ முடியாது.  பையன் எனக்கு பிறந்தவன் என்று அவனிடம் எப்பவாது ஏற்படும் சண்டையின் போது கோபத்தில் கொட்டி விடாதே....கோகிலா.... என்னை மறக்க பழகிக் கொள்..நீ என்னை கைவிட்டது போல் இவளை நான் கைவிடக்கூடாது கோகிலா....என்னைப்போல் எல்லாவற்றையும் துறந்து வந்தவள்.

நந்தினியை பற்றித் தெரியும் பாஸ்கரா, நீ இருக்கும் இந்த இடத்தின் முகவரியை கொடுத்தது. நந்தினியின் உறவுக்கார்கள்தான் பாஸ்கரா........

 உன் மூலம் அவளை பழி வாங்குவதற்க்காக முகவரியை  கொடுத்திருப்பார்கள் .கோகிலா......“நீ கூப்பிட்டு நான் வந்தவன்.. , நந்தினயோ நான் கூப்பிட்டு வந்தவள்” என்னை பழி வாங்குவதாக நிணைத்து அவளை பழிவாங்கிவிடாதே...... உன் கனவனை மன்னித்து ஏற்றுக் கொண்டது போல், என்னையும் அவளையும் மன்னித்து ஏற்றுக் கொள் கோகிலா....


இவள் உன்னை ஏமாற்றி விட மாட்டாளா....??? பாஸ்கரா.....!!!!

நிச்சயமாக. ஏமாற்றமாட்டாள். ஏனெ்னறால் அவள் புருசன்  நிச்சயமாக திரும்பி வர மாட்டான். அவன் அவளின் காதலியுடன் தற்கொலை செய்து கொண்டுவிட்டான்.

.நான் தவித்த தவிப்பை உணர்ந்தவள். என்னில் எல்லாமும் உணர்ந்தவள். உன்னால்தான் எனக்கு அவள் கிடைத்தாள்.உன் கனவனுடன் சந்தோசமாக இருந்த போது என்னால் இடையூறு ஏறப்பட்டுவிடக்கூடாது என்று வீட்டை விட்டு வெளியே வந்து தவித்தபோது, என் தவிப்பை கண்டு,என்னை காப்பாற்றியவள், கோபப்பட்டு அவளிடம் வார்த்தயை கொட்டி விடாதே.... கோகிலா......என் மேல் உண்மையாகவே அன்பும் பாசமும் இருந்தால்.... என்னை அவளுக்கு சொந்தமாக்கு விடு கோகிலா....எப்பொழுதும் நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் கோகிலா...

கடைக்குச் சென்ற நந்தினி  முக மலர உள்ளே வந்தாள். கோகிலாவின் காலில் விழுந்தாள். எனக்கும் யாருமில்லை. பாஸ்கரனைத்தவிர..என்றாள்., வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, இருவரிடமும் விடை பெற்று பாஸ்கரனை இழந்துவிட்ட சோகத்துடன.வெளியே வந்தாள். கோகிலா...


9 comments :

 1. கோகிலாவின் தியாகத்தைப் போற்றி ,முச்சந்தியில் சிலை வைப்பதை தவிர வேற வழியே இல்லை !
  த ம ??

  ReplyDelete
 2. யார் யாருக்கோ..சிலை வைக்கும்போது கனவனை நம்பி காதலனை கைவிட்ட கோகிலாவுக்கு சிலை வைப்பதில் தவறே இல்லை..

  ReplyDelete
 3. உணர்வின் கொந்தளிப்புகள் சொற்களாகவும், சொற்றொடர்களாகவும் வெளிவந்த விதம் மனதில் பதியும்படி உள்ளது.

  ReplyDelete
 4. செய்த தவறுக்கு (ஆசைக்கு) தண்டனை சரி தான்...!

  ReplyDelete
 5. உணர்வின் கொந்தளிப்புகள் கொலை.பழிவாங்கள் போன்ற வழிகளில் செல்லாமல் இருந்ததே நல்லது ஐயா....

  ReplyDelete
 6. இந்தத் தண்டனை எல்லோருக்கும் கிடைப்பதில்லையே.. ஐயா...

  ReplyDelete

 7. என்ன நண்பா முக்கோணக்காதல் கதையெல்லாம் ஸூப்பரா எழுதுறீங்க நல்லாத்தான் இருக்கு அதுவும் தெய்வீக காதலர் கூட்டமாகவும் இருக்கு....
  கதைப்போட்டிக்கு அனுப்புங்களேன்...
  இந்த வெற்றியை சரித்திரம் சொல்லட்டும்.
  தமிழ் மணம் 2

  ReplyDelete

 8. நண்பரே கவனம் இதை மட்டு்ம் நீக்கவும்
  அதாவது....

  கணவன் சரி கனவன் தவறு

  நினைவு சரி நிணைவு தவறு

  உண்மை சரி உன்மை தவறு

  தவறுகளை சுட்டிக்காட்டியதற்க்காக கோபம் இல்லையே....

  ReplyDelete
 9. தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி! நண்பரே....... இந்தத் அதய்வீகக்காதல்பற்றி சலூன் கடையில் மூத்த குடி(டாஸ்மாக்) மக்கள் அந்தக் காலத்து கதையாக பேசிக் கொண்டது. நான் (ஒட்டுக்) கேட்டது..நண்பரே.. இப்படியான கதைகளை போட்டிக்கு அனுப்பினால் கில்லர்ஜீ நண்பர் கதையப்பாருன்னு என் தோல உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவாங்கன்னு பயம் நண்பரே...

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!