பக்கங்கள்

Tuesday, February 24, 2015

எங்கே உள்ளது சாதி????

படம்-minikins10.rssing.com


சாதி-திண்டாமைபை் பற்றி
பேச வாயெடுத்தார்
தோழர்  ஒருவர்....

அதெல்லாம் அந்தக் காலம்
சார், இப்பெல்லாம் யாரும்
சாதி பார்ப்பதில்லை- என்றார்.
எதிர் பேச்சாளர்..........

தனிக் குடியிருப்பு, தனிச்சுடுகாடு
தனித் தேநீர்குவளை போன்ற
தீண்டாமை கொடுமைகள்
நீடிப்பதை எடுத்துரைத்தார்
தோழர்.........

இருக்கலாம் சார்,ஆனால்
முன்னைப்போல் அவ்வளவு
கடுமையாக இல்லை சார்
என்றார் இவர்.............

தமிழகத்தில் பல இடங்களில்
தாழ்த்தப்பட்ட மக்கள்
கொளுத்தப்பட்டதையும்
கொலை செய்யப்பட்டதையும்
ஆதாரத்துடன் பேசினார்
அவர்..................

அதுக்கெல்லாம் காரணம்
அரசியல் வாதிகள்தான் சார்
அவர்கள்தான் சாதி வெறியை
தூண்டிவிடுகிறார்கள் என்று
முழுப்பழியையும் அரசியல்
வாதிகள் மேல் போட்டு
தப்பிக்கப் பார்த்தார்
இவர்.......................

மக்களிடம் சாதி உணர்வும்
சாதி வெறியும் இருந்தால்தானே
அய்யா! தூண்ட முடியும் ! இல்லாத
ஒன்றை எப்படி தூண்ட முடியும்
என்று கேட்டார் அவர்...........

சாதியெல்லாம் அவ்வளவு
சீக்கிரத்தில் ஒழிக்க முடியாது
சார் என்று எரிச்சலாக பேசி
பேச்சை முடித்துக் கொண்டார்
இவர்................

எங்கே இருக்கிறது சாதி
என்று பேசத் தொடங்கி
இரண்டே நிமிடத்திற்குள்
“சாதியை ஒழிக்க முடியாது”
“சாதி கூடாது” என்று
 இப்படி முன்னுக்குப்பின்
முரனான  இரட்டை வேடமும்
பாசாங்குத்தனமும் நிறைந்தவர்களிடம்தான்
சாதி உள்ளது.  என்றார்
தோழர்...............
12 comments :

 1. வார்த்தைகள் அனைத்தும் 100/200 உண்மையே நண்பா...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. #“சாதியை ஒழிக்க முடியாது”
  “சாதி கூடாது” #
  இவர்கள்தான் சாதியைப் பற்றி இரட்டைவேடம் போடுபவர்கள் !

  ReplyDelete
 3. //மக்களிடம் சாதி உணர்வும்
  சாதி வெறியும் இருந்தால்தானே
  அய்யா! தூண்ட முடியும் !//

  முற்றிலும் உண்மை.

  ReplyDelete
 4. சாதி என்றால்
  ஆண் சாதி, பெண் சாதி
  என்பதற்கு
  அப்பால் சென்று
  நன்றாக அலசி உள்ளீர்கள்
  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 5. செம காட்டு அண்ணா ! எல்லாம் போலிப்புரட்சவாதிகள் . சாதியே இல்லனு சொல்லிட்டு தன்குடும்பத்துல இருக்க பையனுக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் பண்ணிவைக்க தன்னோட சாதி ஆளுங்கள தான் தேடிப்போவாய்ங்க

  தம+

  ReplyDelete
 6. உறுதி இல்லை என்பது உறுதி...

  சமாளிப்பு...!

  ReplyDelete
 7. 100க்கு 200 கணக்கு சரியா வருமா....? நண்பரே...!!!

  ReplyDelete
 8. இவர்கள் வாய்ச் சொல்லில் பறை சாற்றுபவர்கள் ஜி.....

  ReplyDelete
 9. இல்லாதவர்களிடம் சாதித்தீயை மூட்டினால்தானே இவர்கள் குளிர்காய முடியும். திரு. வேகநரி அவர்களே!!

  ReplyDelete
 10. ஆண்சாதி,பெண் சாதியிலும், ஆண்சாதி பெண் சாதியை ஒடுக்கிறதே திரு.யாழ்பாவணன் அவர்களே

  ReplyDelete
 11. இரட்டை நாக்கும் இரட்டை வேடமும் போடுபவர்கள் இவர்கள்தான் திரு. மேக்னேஷ் அவர்களே!!

  ReplyDelete
 12. சமாளிப்பதில்தானே..அவர்கள் வாய்ச் சொல்லில் வீரனாக உலா வரமுடிகிறது. திரு. பொன் தனபாலன் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com