செவ்வாய் 03 2015

சந்திக்க அழைத்தவரை..சந்திக்க சென்ற கதை....

யாழ்பாவாணனின் எழுத்துகள்
படம்-யாழ்பாவணன்.


வழக்கம்போல் வலிப்போக்கன் தனது பிளாக்கர் தளத்தை திறந்து “ அட கொக்கா..மக்கா” -பதிவுக்கு கருத்துரை பதிவிட்ட பதிவர்களுக்கு மறு மொழி பகிர்வதற்க்காக பார்த்தபோது கடைசியாக யாழ்பாவணன் கருத்துரை பதிவிட்டு இருந்தார்.

யாழ்பாவணின்  கருத்துரை பதிவைப்படித்த போது, தாம்  தமிழகத்தில் .கடலூர் வடலூர் வருவதாகவும். அவ்வமயம் வரும்போது மதுரையில் விமானம் மாறும் போது இருக்கும்  இடைப்பட்ட நேரத்தில் தன்னை சந்திக்கலாம் என்று பதிவு செய்து அழைப்பு விட்டு இருந்தார். அதோடு நேரத்தையும் தொடர்பு எண்ணையும் பதிவு இட்டு இருந்தார்.

 வலிப்போக்கன் அவருடைய பதிவை படித்துவிட்டு, இது பெரிய வி.ஐ.பி. களுக்கு அழைப்பு விட்டு இருப்பார். வி.ஐ.பி.யில் தன்னையும்  தெரியாமல் கோர்த்துவிட்டுருப்பார் என்று நிணைத்து விட்டு அவருடைய பதிவில் கருத்துரை பதிவு செய்தவர்களின் கருத்துக்களை  படித்தார்.

அந்த கருத்துரையில் முதலாவதாக மதுரை வி.ஐ.பி.யும் தமிழ் மணத்தில்  முன்னணி வலைப் பதிவில் முதலிடத்தில் இருக்கும் “ஜோக்காளி” வலைப்பதிவின் பதிவர் திரு. பகவான்ஜி   அவர்கள் தகவலுக்கு நன்றி! தான் சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

அதை படித்துவிட்ட விலிப்போக்கன்,   தனது தளத்தில் வந்து,சந்திக்க அழைப்பு விட்டும்.. சந்திக்காமல் இருப்பது தமிழ் பண்பாக இருக்காது. என்பதாக நிணைத்தக் கொண்டு, அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் ..மதுரை .வி.ஐ.பி.யான பகவான்ஜீ யுடன்  ஒட்டிக் கொண்டு. அறிமுகமாகி சந்தித்து வரலாம் என்று முடிவெடித்து,.. பகவான்ஜி யைப் போலவே  தகவலக்கு நன்றி மறு மொழியிட்டார்.

 பிற்பாடு யாழ்பாவணன் தெரிவித்துள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டபோது..“ தங்களின் தொடர்பு எண்ணை சரி பார்க்கவும்” என்று பதில் வந்தது. வலிப்போக்கனும் சொன்னதை சரி பார்க்காமல்.திரும்ப திரும்ப தொடர்பு கொண்டபோது   மீண்டும் மீண்டும் “ தொடர்பு எண்ணை சரி பார்க்கவும் ” கோபப்படாமல் பதில் வந்தது. வலிப்போக்கனும் கோபப்படமால் சற்று சலித்துக் கொண்டு தொடர்பு எண்ணை சரி பார்த்தார்.தொடர்பு எண் தப்பாக இருந்தது.( சுஷ்ரூவா-09087 54979451 ) 

சரி, சந்திக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்று இருமாந்து இருந்தபோது..வலிப்போக்கன் மூளைக்குள் தாமதமாக ஒரு யோசனை தோன்றியது.

வலிப்போக்கனின் பூர்வீகம் மதுரையாக இருந்து, பிறந்து வளர்ந்து மதுரையையே சுற்றி சுற்றி வந்தாலும் மதுரையின் முக்கியமான இடங்களை பார்த்தது கிடையாது. பார்ப்பதற்க்கான வாய்ப்பும் வசதியும் கிடைக்கவில்லை.. அப்படியான மதுரையின் முக்கியமான இடமான் விமான நிலையத்தை பார்த்தது கிடையாது.

அப்படி பார்க்காத அந்த  மதுரை விமான நிலையத்துக்கு “ சாதிவெறி குல தெய்வமான முத்துராமலிங்க பெயரை சூட்டுக” என்று சாதிவெறி கூட்டமும்

மதுரை விமானநிலையத்துக்கு “சாதிவெறி எதிர்ப்பு போராளி, இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்டுக” என்று இவர்களும் அவர்களும் மாறி மாறி கோரிக்கை வைப்பதும்,

இதோடு மதுரையில் உள்ள  “பெரும் தொழில் அதிபர்கள். மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துக”என்று வேண்டுவதும் வந்து தொலைத்தது.

அப்பேர்பட்ட மதுரை விமான நிலையத்தை யாழ்பாவணன் சந்திப்பின் மூலமாக பார்த்துவிட வேண்டும் என்றும் ஆசை வந்துவிட்டது.

வலிப்போக்கனால் விமானத்தில் பறக்க  முடியாது போனாலும். பறந்து செல்லும் விமானத்தையும். விமான நிலையத்தையாவது பார்த்துவிடலாம் என்று நிணப்பு வந்தது.  கூடவே.. நிணப்பு தாண்டி பொழப்ப கெடுக்குது என்று ஒரு பழ மொழியும் குதித்தது.

அந்த பழமொழியை சாந்தப் படுத்தும்விதமாக வலிப்போக்கன் இப்படி நிணைத்துக் கொண்டார். சினிமாவில் காட்டப்படும் விமான நிலையத்தகூட... நடிகனையும் நடிகையுமா பார்த்துகிட்டு இருந்ததால.. சரியாக பார்க்க முடியலப்பா.....  பாழ்பாவணன் மூலமா...  நேரடியாக...பார்த்துவிடலாம்..என சாந்தப்படுத்திக் கொண்டார்.

நேரம் கடந்து கொண்டு இருந்தது. கடைசியாக மதுரை வி.ஐ.பி.யான பகவான்ஜிக்கு போன் செய்தார். எதிர் முனையில் ஒரு அம்மா பேசினார்கள்.

“ வலிப்போக்கனாம்.. என்றபடி  பகவான்ஜீயிடம் கொடுத்தார்.

“வணக்கம் ஜீ சொல்லுங்க”... என்றார் பகவான்ஜீ

பதிலுக்கு வலிப்போக்கன் “ வணக்கம் ஜீ” என்று சொல்லிவிட்டு தாங்கள் யாழ்பாவணன் அவர்களை சந்திக்க செல்வதாக தங்கள் கருத்துரையில் பார்த்தேன் ஜீ, தாங்கள் செல்வதாக இருந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள் தங்களுடன் இணைந்து சந்திக்க வருகிறேன் ஜி என்றார்.

“சரி, ஜி செல்வதாக இருந்தால் தகவல் சொல்கிறேன்” என்று பதிலுரைத்தார் பகவான்.

 மறுநாள் காலை. வலிப்போக்கனுக்கு, “வேலை இருக்கும் நாட்கள் எல்லாம் வேலை நாட்கள்,” , “ வேலை இல்லா நாட்கள் எல்லாம் விடுமுறை நாட்கள்தான். இருந்தாலும் வேலை நாட்களைவிட, வேலை இல்லா நாட்கள்தான் அதிகமாக இருந்தது.

அன்று வேலை நாட்களாக அமைந்துவிட்டது. பகல் ஒரு மணிவரை பகவான்ஜி யிடமிருந்து  தகவல் வரவில்லை. ”நிணப்புதாண்டி பொழப்ப கெடுக்குது” என்ற பழமொழி அப்பப்ப  அவருக்கு வந்து தொலைத்து.

அவர் தன்  கைப்பேசியை தேடிய பொழுது .  ரிங், ஒலித்தது. “ பகவான்ஜீதான் பேசினார்.
“ அவரை பார்க்கச் செல்கிறேன் ஜி வாங்க” டூ வீலரா...என்றார்.

“இல்லங்க ஜி .நான் பஸ்ஸில் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்”. என்று பதில் உரைத்துவிட்ட வலிப்போக்கன் செய்து கொண்டிருந்த வேலையை பத்திரமாக ஒதுங்க வைத்துவிட்டு புறப்பட்டார்.

காரியாபட்டி பஸ்ஸில் வரும் போதே வலிப்போக்கன், பைக்கில் வந்து கொண்டு இருந்த பகவான்ஜீ யை பார்த்துவிட்டார். தான் பஸ்ஸில் வந்து கொண்டு இருப்பதை தெரிவிக்க தன் கைகளை வெளியே நீட்டிகாட்டிக் கொண்டார். பஸ் மண்டேலா நிறுத்தத்தில் நின்றபோதுஇ முதல் ஆளாக இறங்கி,பின்னால் வந்து கொண்டு இருந்த பகவான்ஜீ க்கு வணக்கம் சொல்லி பின் இருக்கையில் அமர்ந்து விமான நிலையத்திற்கு பயணமானார்.

அவர்கள்  பைக் விமான நிலைய  சாலையில்  சென்று கொண்டு இருக்கும் பொழுது வழிப்பறியர்களால் வழி மறிக்கப்பட்டது. பகவான்ஜீ ஒரு இருபது ரூபாயை கொடுத்ததும் ஒரு சீட்டை கொடுத்து வழி விட்டார்கள்.. 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு விமான பயணிகள் வரும் வாயிலை அடைந்தபோது. விமாணப் பயணிகளை வரவேற்கவும், அழைத்துச் செல்லவுமாக கூட்டம் இருந்தது.

யாழ்பாவணன் குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்தும் கடைசிவரை “ “யாழ்பாவணன் அவர்களை சந்திக்கவில்லை”, “அவர்களும் யாழ்பாவணனை சந்திக்கவில்லை..


சந்திக்க சென்ற இருவருக்கும் யாழ்பாவணன் எப்படி இருப்பாரென்று தெரியவில்லை, அவரின் தொடர்பு எண்ணும் இல்லை.

சந்திக்க அழைப்புவிட்ட யாழ்பாவணனிடம் சந்திக்க வருபவர்களின் பெயரும்,தொடர்பு எண்ணும் இல்லை..

படம்- மதுரை விமானநிலையம்.










14 கருத்துகள்:


  1. பொருங்க நண்பா நண்பர் யாழ்பாவாணணன் வந்து பதில் தருவார்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. என்னது ! யாழ்பாவணன் அண்ணா வரலையா ? இதற்கு சரியான விளக்கம் அவர் அளிப்பார் என்று நினைக்கிறேன் .

    பதிலளிநீக்கு


  3. வணக்கம் வலைப் பூ நண்பரே!
    எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
    'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
    பாடலை கேட்டு மகிழ வாருங்கள் நண்பரே!

    இணைப்பு:

    http://youtu.be/KBsMu1m2xaE

    .www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. மதுரை ஜிகர்தண்டாவை குடிக்கும் பாக்கியம் யாழ்பாவாணன் அவர்களுக்கு கிடைக்காமல் செய்து விட்ட தடை எதுவென்று ,அவர் சொன்னால்தான் நமக்கு தெரியும் தோழரே :)

    பதிலளிநீக்கு
  5. பொருத்தார் வலைப்பதிவை ஆள்வாரே்..அப்படித்தானே நண்பரே...

    பதிலளிநீக்கு
  6. சுப்பு தாத்தாவை பார்த்துவிடுகிறேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  7. மதுரை ஜிகர்தண்டாவை குடிக்கும் பாக்கியம் கிடைக்காமலா போய்விடும்.

    பதிலளிநீக்கு
  8. நீங்க எழுதியவிதம் நன்றாகவும் ரசிக்கதக்கதாகவும் இருந்தது. நீங்க பார்க்கபோன இலங்கை கவிஞரை சந்திக்க முடியவில்லையெனினும் மதுரை வி.ஐ.பியின் டூ வீலரில் அவருடன் பின்னால் இருந்து பயணிக்கும் அதிஷ்டத்தை பெற்றுள்ளீங்க.

    பதிலளிநீக்கு
  9. உங்களுடைய பதிவினையும் உங்கள் இருவருடைய அலைச்சலையும் பற்றி படித்துவிட்டு அவர் அவசியம் தொடர்புகொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நேரமின்மை, பிற சூழல் என்ற நிலையில் எதிர்பாராத சூழலில் அவர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு அல்லவா? அவ்வாறே திட்டமிடும்போதுசில விடுதல்கள் இருக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  10. யாழ்பாவணன் மூலமாக..மதுரை வி.ஐ.பியின் டூ வீலரில் அவருடன் பின்னால் இருந்து பயணிக்கும் அதிஷ்டத்தை பெற்றுள்ளது உண்மைதான் திரு. வேக நரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  11. தங்கள் கருத்துப்படியே...திட்டமிடும்போதுசில விடுதல்கள் இருக்க வாய்ப்புண்டு...ஐயா....

    பதிலளிநீக்கு
  12. திட்டமிடுதலில் சில விடுதல்கள் வந்துவிட்டதால் இப்படி ஆகிவிட்டது. திரு. பொன் தனபாலன் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....