பக்கங்கள்

Friday, February 06, 2015

புறாக்களை...காக்கைகளாக காட்டி ஏமாற்றியவர்கள்

படம்-https://mathimaran.wordpress.com/2010/01/04/artical-268/
சக்சஸ். இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன் என்று  சினிமாக்காரர்களின் உண்மையை முதல் வசனமாக பேசிய நடிப்புலக  மேதை, ஒலகத்தில் இந்த மேதை நடிக்காத நடிப்பே இல்லை என்று ஏற்றி வைத்து துதிபாடப்படும் நடிகர் ஒருவர் நடித்த முதல் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில்... காக்கைகளுக்கு பதிலாக  வீட்டில் வளர்க்கும் புறாக்களுக்கு வர்ணம் பூசி...  “ பட்சி சாதி  நீங்க ....எங்க பகுத்தறி வாளர்கள பாக்காதீங்கன்னு” என்று பாட வைதத்து,  வந்தது காக்காடா...என்று அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்..

இப்படித்தான் சினிமா , அன்றிலிருந்து  இன்றுவரை... நாயை நரி என்றும், பூனையை புலி என்றும் காட்டி சினிமா பார்த்தவர்களை எல்லாம் ஏமாற்றி வந்து இருக்கிறார்கள். 

திருந்துவதற்கே வாய்ப்பு இல்லாத ரசிக மடக் கொழுந்துகளும் இத்தகைய  பூனைகளையும் நாயை்களையும்  உண்மையான புலி,நரிகளாவும் பார் பூரித்து போயி, புரட்சி என்றால் என்னவென்றே தெரியாத நடிகர்களை புரட்சி நடிகர் என்றும்,  காரிய கிறுக்கரை எல்லாம் இரண்டாம்  பென்னிகுயிக் என்றும் கருப்பு, கேப்பு ..தல, தளபதி என்றுபலப்பல பட்டங்கள் பல கொடுத்தும் இந்த சினிமாக்காரர்களை ஆட்சிக் கட்டிலில்  (அமர்த்தி)அமர அழகு பார்த்தும்....தங்களுக்கு தாங்களே தங்கள் தலையில் மண்ணை  அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வைத்துதான் ஏகப்பட்ட சினிமாக்கள்

சினிமாவில் காட்டுவது புலியுமல்ல,நரியுமல்ல.... என்று  தெரிந்திருந்தும் பாசணம் பிடித்து கெட்டிதட்டிப்போன சிந்தனையை மாற்றமுடியாமல் பாழ்படுத்தப்பட்ட ஏமாறும் சிந்தனை நிலையிலே வீழ்ந்து கிடப்பதால்..

இந்த சினிமாக்காரர்கள் , தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி   முன்பு புறாக்களை காக்கைகளாக காட்டி ஏமாற்றியது மாதிரி பிரமாண்டம் என்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது என்றும் தத்துருபம் உள்ளதுஉள்ளபடி  என்று  வாய்பந்தலில் இன்னும் ஏமாற்றி வருகிறார்கள்.

“புறாக்களை ..காக்கைகளாய்” பற்றிய தகவல்.. திரு.கே.என். சிவராமன்.

10 comments :


 1. இந்த ரசிகர் மன்றங்கள் வைத்து நடத்துறவங்களை துபாய் விசா கொடுத்து கன்ஸ்ட்ரக்சன்ஸ் கம்பெனியிலே வேலை கொடுத்து என்னை சூபர்வைசராக போடனும் 6 மாசத்துல் வாழ்க்கை என்றால் என்ன 80தை புரிய வைத்து விடுவேன்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 2. மண்வெட்டி தொழிலாளிக்கு கஞ்சிக்கே வருமானம் பத்தலே,மண்வெட்டியை தூக்கிற மாதிரி நடிக்கும் நடிப்புலக மேதைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் :)

  ReplyDelete
 3. அதனால்தான் அவை திரைப்படங்கள்.

  ReplyDelete
 4. ஏமாந்த கோபம்தான்.....திரு. பொன் தனபாலன் அவர்களே!!

  ReplyDelete
 5. தாங்கள் புரிய வைத்துவிடுவீர்கள் என்று எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களுக்கு விசா கிடைக்காது என்பதும் உண்மை..

  ReplyDelete
 6. உதார்விடுபவர்களுக்கு கோடிக்கணக்கிலே சம்பளம் என்பதுான் கோபமாக இருக்கிறது.

  ReplyDelete
 7. திபை்படங்கள் திரைப்படங்களாகவே இருப்பதில்லை என்பதுான் பிரச்சினை..ஐயா....

  ReplyDelete
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!செல்வம்..காத்திகேயன் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com