படம்- |
அவனின் சிறு வயது பருவத்தில்
காலை ஒன்பது மணிக்கு மேல்தான்
படுக்கையை விட்டு எழுவான்...
பேருக்கு பல் துலக்கி, வாய்
கொப்பளித்து மூடி வைத்திருக்கும்
பாத்திரத்தின் உணவை உண்டு
பத்துமணிவாக்கில் ஆரம்ப
பாடசாலையின் வாசலில் நிற்பான்.
இப்படியான பழக்கத்தால்
படிப்பில் தேறாதவனாக
மக்காக இருந்தான்.
தந்தையில்லா அவனை
அடிக்க மனமின்றி திட்டினாள்..
அவன் தாய்...........
டேய்..பயலே.......
எதிர் வீட்டுத் தனத்தை
பார்..அதிகாலை எழுவாள்,
குளித்து முடித்து நேரத்தில்
பள்ளிச் செல்வாள்......
வீட்டில் சொல்லும் வேலையை
தட்டாமல் செய்வாள். அவள்
பிள்ளையா...? நீ... பிள்ளையா...?
அவள் மூத்திரத்தை வாங்கி
குடி...அப்பவாவது உனக்கு
புத்தி வரும்....என்று ......
பின்குறிப்பு...
ஐம்பது வருடம் கழித்து அவன் “அந்த தனத்தை” பார்த்தபோது அவள் சொன்னார்
“.ஒனக்கு என்னப்பா.. புள்ளயைா..... குட்டியா...... எம்பாடு இன்னும் தீரல”... என்று.
பதிலளிநீக்குயார்த்தமான உண்மைகள் இப்படித்தான் பலருக்கும் அமைந்து விடுகிறது
நாட்டிலேயுள்ள பெருபாலான 'தனலட்சுமி'களின் நிலையும் இதுதான் !
பதிலளிநீக்குத ம 2
இப்படித்தான் பலருக்கும் அமைந்து விடுகிறது----உண்மைதான் நண்பரே....
பதிலளிநீக்கு“பெருபாலான 'தனலட்சுமி'களின் நிலையும் இதுதான்” !-----உண்மைதான் நண்பரே...........
பதிலளிநீக்குதனம்...
பதிலளிநீக்குதனத்திற்கு இன்னும் பாடு தீரவில்லை...
பதிலளிநீக்குஅந்த தனம் இறந்து விட்டாள்... அவள் பாடு தீர்ந்தது...
பதிலளிநீக்கு