பக்கங்கள்

Saturday, April 11, 2015

அவர்கள் வரிசையில் நிற்கத் தயார்.......

படம்-tamil.thehindu.com


இலவச பொருட்கள்
கொடுக்கிறார்களா..?
அவர்கள் வரிசையில்
நிற்கத்தயார்,...............

அப்பன் ஏழுமலையானை
தரிசிக்க வரிசையில்
நிற்க வேண்டுமா......??
அவர்கள் வரிசையில்
நிற்கத் தயார்...

இது மாதிரி பல
வரிசையில் நின்று
களம் பல கண்டவர்கள்

தமிழகத்தில் சட்டசபை
தேர்தல் நடத்த
தேர்தல் ஆணையம்
தயார் என்றால்
அவர்கள் வரிசையில்
நிற்கத் தயார்....தயார்......!!!!!!!!!!!!!!!

22 comments :

 1. சவுக்கடியால் அடித்து இருக்கிறீர்கள் வலிக்க வேண்டும் இனியெனும்.

  ReplyDelete
  Replies
  1. அடி வாங்கி மரத்துபோன உடம்புக்கு எப்படித்தான் அடித்தாலும், வலிக்காது நண்பரே.....

   Delete
 2. அவர்கள் வரிசையில் நிற்க தயார்.என்றால் அடுத்த சுற்றிலும் கொள்ளையடிக்க அவர்களும் தயார்

  ReplyDelete
  Replies
  1. அவர்களே வரிசையில் தயாராய் நிற்கிறப்போ....... ஒவ்வொரு நிமிடமும் கொள்ளையடிப்பதற்கே வந்தவர்கள் தயாரில்லாமலா இருப்பார்கள் திரு. பெயரில்லா அவர்களே!!

   Delete
 3. தயார்தானய்யா.. என்ன செய்வது? பழகிப்போய்விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும் என்ற பழமொழி இவர்களுக்குத்தான் பொருந்தும் அய்யா...

   Delete
 4. அருமையா சொன்னீர்கள். தீய பழக்கமா வந்துவிட்டது.
  குறைந்தது தேர்தலில் வாக்களிக்க வரிசையில் அவர்கள் நிற்கும் போதாவது நாட்டிற்கு நல்லதை செய்வோம் என்று அவர்கள் நினைக்கலாமே!

  ReplyDelete
 5. நிணப்பு பொழப்ப கெடுத்து விட்டால் என்ன செய்வது என்று நிணைத்துவிட்டார்கள் திரு. வேகநரி அவர்களே

  ReplyDelete
 6. அதுக்குப் பேர் ,ஜனநாயக கடமையாமே :)

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கடமையை ஆற்றத்தான் தயார் என்கிறார்கள். ஜி..

   Delete
 7. அவர்கள் வரிசையில்
  நிற்கத்தயார் - ஆனால்
  எதற்கென்று எண்ணி
  நிற்கப் பார் - இல்லையேல்
  உன்
  நிலைமை
  என்னாவாகும்?

  ReplyDelete
  Replies
  1. நிலைமை
   என்னவானால் என்ற நிந்தனையில்தானே இந்த வரிசைக்கு தயார் என்பதும்.

   Delete
 8. Replies
  1. அந்த பழக்கம்தான்.... தொட்டில் பழக்கம்..........

   Delete
 9. அவர்கள் வரிசையில் நிற்கத் தயார்.......

  ஆனால்-

  இவர்கள் வாரிசை நிறுத்தத் தயார்...

  இலவசங்களே போதும்...!

  அற்ப சந்தோஷத்திற்காக...

  தோஷத்தை விலைக்கு வாங்கி

  விலங்கை மாட்டிக் கொள்ளத்தயார்...!

  நன்றி.
  த.ம. 5.

  ReplyDelete
  Replies
  1. அற்ப சந்தோஷத்திற்காக...

   தோஷத்தை விலைக்கு வாங்கி

   விலங்கை மாட்டிக் கொள்ளத்தயார்...!-----
   நன்றி ! அய்யா...

   Delete

 10. பால.சாராகெஜலெட்சுமி
  கவிதை
  காணட்டும் சிறப்பு
  பூணட்டும் பூரிப்பு
  வாழ்க! வளர்க!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாழ்க! வளர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு அவர்களே!!

   Delete
 11. வரிசையில் நிற்பதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்ட பிறகு...
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. வரிசையில் நிற்பதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்ட பிறகு.....நன்றி! திரு.ஊமைக்கனவுகள்

   Delete
 12. வலிப் போக்கரே!
  வரிசையில் நின்றுதான் வந்தேன் கருத்தினை பதிவு செய்ய!
  ஆனால் "கருத்தோ" வரிசையில் நிற்காமல் மாறி வந்து விட்டது
  விதி மீறல் குற்றத்துக்குரிய தண்டனை ஏற்க தயார்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம +1

  ReplyDelete
 13. நன்றி! திரு.நட்புடன்,
  புதுவை வேலு அவர்களுக்கு...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com