புதன் 15 2015

எதிரியின் உரிமையை அழிக்கும் உத்தமவில்லன்கள்

படம்-www.4tamilmedia.com


பசுவதை தடை.
மாட்டை வெட்டினால்
ஐந்து ஆண்டு சிறை
மகாராஷ்டிரத்தில்

போதாதென்றால்....
இரண்டு சேர்த்து
ஏழு ஆண்டு சிறை..
மத்திய பிரதேசத்தில்

இதுவும் போதாதென்றால்
மூன்று வருடம் 
சேர்த்து பத்து வருடம் 
சிறை அரியானாவில்..

யாருக்கெல்லாம்
பொருந்தும் இந்தச் 
 கடுங்காவல்சிறைத் 
தண்டனை .................

மாட்டை வளர்க்க 
முடியாமல் விற்பனை 
செய்யும் விவசாயிகள்

இரக்கப்பட்டு மாட்டை
வாங்கும் வியாபாரிகள்

ஓரிடத்திலிருந்து பிரி
தொரிடத்திற்கு கொண்டு
செல்ல உதவும் லாரி
டிரைவர்கள்

 அதை வெட்டுபவர்கள்
அதை வாங்கி சமைப்பவர்கள்
சமைத்ததை உண்பவர்கள்

இவர்கள்  அத்தனை
பேரும் தண்டனைக்
குரிய குற்றவாளிகள்.

இந்தக் குற்றவாளிகளை
ஒரு போலீசு சந்தேகப்பட்டால்
வீடு புகுந்து சோதனை 
செய்யலாம், வாயை
ஊதச் சொல்லாமல்
கைது செய்யலாம்.

இவர்கள் குற்றவாளிகள்
இல்லை என்று
இவர்களே நிருபிக்காதவரை
இவர்கள் குற்றவாளிகள்

இனி ,  
குஜராத்தை போன்றதொரு
ஊழிக்கூத்துக்கள் இந்தியா
முழுவதும் அரங்கேற்றுவார்கள்
உத்தமவில்லன்கள்.

12 கருத்துகள்:

  1. ஆடு,கோழி, கொக்கு, மீன்,நண்டு,,,,,,,,,,,,,,,,,,,,
    இது எல்லாம்,,,,,,,,,,,,,,,,
    உத்தமவில்லன்கள் என்ன சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் பெரிய அயிட்டங்களிலிருந்து தொடங்கி படிபடிப்யாக சிறிய அயிட்டங்களில் வருவார்கள்....

    பதிலளிநீக்கு
  3. கொசு, மூட்டைப்பூச்சியை நசுக்கி கொல்கிறவர்களுக்கு எத்தனை வருடம் தண்டனை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய உருவத்துக்கு பத்து வருடம் என்றால் சின்ன உருவத்துக்கு எத்தனை வருடம் என்று உத்தம வில்லன்கள் கணக்கு வச்சுருப்பாங்க..நண்பரே...

      நீக்கு
  4. உத்தம வில்லன்கள் பாலை,நெய்யை ,தயிரை மட்டும் சாப்பிடுவது எந்த வகையில் நியாயம் ?அவன் குடிச்சா பால் ,நான் குடிச்சா ரத்தமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் குடிச்சா பால், நீங்க குடிச்சா ரத்தமுன்னு சொல்லித்தானே பத்து வருடம் கம்பின்னு உத்தமவில்லன்கள் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் நண்பரே....

      நீக்கு
  5. தோழரே!
    இது
    மாட்டை பிடிச்சு
    'ஓட்டு' ல் அடைச்சு
    ஆட்சி அமைக்கும்
    உத்தம வில்லன்கள்
    நிறைந்த உலகம்!
    த ம +1

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டை பிடிச்ச உத்தம வில்லன்கள் ஆட்டை பிடிக்கமால் விட்டதன்ன.. நண்பரே..

      நீக்கு

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...