தொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.
இந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தார். இந்திய, தமிழக மக்களுக்கும் அவரை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.
இன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட்,பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கி போன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 ) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட்திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
நினைவு கூர்வோம் நண்பரே...
பதிலளிநீக்குநன்றி! நண்பரே....
நீக்குசார்லி சாப்ளின் பிறந்த நாள் பரிசு
பதிலளிநீக்குநினைத்தாலே இனிக்கிறது!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி! நண்பரே...............
நீக்குஇவர் உண்மை கலைஞர், தொழில்நூட்பம் வளர்ச்சி இல்லா காலத்தே பன் முகம் காட்டியவர்.உலகையே தம் செயலால் சிரிக்க வைத்த ஒரு நல்ல உள்ளத்தை பதிவில் வைத்தது அருமை, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி! நண்பரே.....
நீக்குநான் போடுற வோட்டு மட்டும் சரியா விழுதே ,கமெண்ட் எங்கே போச்சுன்னு தெரியலியே :)
பதிலளிநீக்குசார்லி சாப்ளின் உண்மையான மக்கள் கலைஞன் !
எதோ சதி நடக்கிறது என்று தெரிகிறது ஜி
நீக்குசிரிப்பூட்டுபவன் வாழ்வில் சிரிக்கும் தருணங்கள் அரிதாகவே இருக்கின்றன என்பதற்கு வாழ்ந்த உதாரணம் அருமை வலிப்போக்கரே!
பதிலளிநீக்குத ம 4
உண்மைதான் திரு. உமைக்கனவுகள் அவர்களே!!
நீக்குசிரிப்பையும் சிந்திக்கும் வண்ணம் தந்த அருமையான கலைஞர் நினைவு கொள்வோம்!
பதிலளிநீக்குஅவரை நிணைவுபடுத்திக் கொள்வதற்குத்தான் இந்த பதிவு திரு. தனிமரம் அவர்களே!!
நீக்குவலிப்போக்கனின் பாராட்டை பிறந்த நாளில் பெற்ற இந்த நடிகர் அதிஷ்டசாலியே தான்.
பதிலளிநீக்குஅவரை பாராட்டுவதற்கு எனக்கு தகுதி இருப்பதாக நிணைக்கவில்லை திரு.வேகநரி அவர்களே!!!
நீக்குநகைச்சுவை, ரசனை, நேர்த்தி என்ற பன்முகக்குணங்களைக் கொண்ட இவர் வாழ்க்கையில் அதிகம் சந்தித்தது சோகங்களே. இவரது (Charles Chaplin: My Autobiography) வாழ்க்கை வரலாற்றினை நான் அண்மையில் படித்தேன். விரைவில் பகிர்வேன்.
பதிலளிநீக்குநல்லது.ஐயா..தங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன் ஐயா....
நீக்குமறக்க முடியுமா...?
பதிலளிநீக்குமறக்கவும் கூடாது... ஐயா....
நீக்கு