பக்கங்கள்

Tuesday, April 21, 2015

மகிழ்ச்சி.....!!!


மகிழ்ச்சி.................


அமைதி நிறைந்த ஸிம்பீர்ஸ்க் நகருக்கு மேலே மகிழ்வுடன் இசைத்தன வானம்பாடிகள். வோல்கா ஆற்றக்கு உயரே அவை பண் பொழிந்தன. நகரின் அருகாமையில் ஆறு சட்டெனத் திரும்பியத. பனிக்கட்டிப் பாளங்கள் அண்மையில்தான் உருகிப் போயிருந்தன.தடையின்றிப் பெருகிய ஆற்றில் சென்றது நீராவிக்கப்பல்.

“வெள்ளைக் கப்பலே, எங்கே போகிறாய்? “

ஸிம்பீர்ஸ்க் நகரில் வசந்தம்

விதிகளும் தோட்டங்களும் பட்சிகளின் கீச்சொலிகளால் நிறைந்திருந்தன. காற்று பிர்ச் மரக் கிளைகளை ஆட்டி உலுக்கியது. தெருக்களில் இளவேனிலின் ஆட்சி புரிந்தது.

உல்யானவ் குடும்பத்தாரின் இல்லத்திலும் மகிழ்ச்சி நிலவியது. அவர்கள் வீடு வோல்கா அற்றுக்குப் பக்கத்திலேயே இருந்தது. ஜன்னல் வழியே சுள்ளென்று வெயில் அடித்தது. நீராவிக் கப்பல்களின் சங்கொலிகள் கேட்டன.

அம்மா தொட்டில் மீது குனிந்தாள்.  தொட்டிலில் கிடந்தான் மகன். தாயார் அவனை உற்று நோக்கினாள்.

“நீ எப்படிப்பட்டவனாக வளர்வாய்? எந்த மாதரி வாழ்க்கை உனக்கு கிட்டும்?” என்று அம்மா சிந்தித்தாள்.

தகப்பனார்  இல்யா நிக்கலாயெவிச் அறைக்குள் வந்தார்.

“மரியார. கண்ணே!” என்று அழைத்து, “நற்பகல், மரியா என்றார்.

தகப்பனாருடன் கூடவே மூத்த குழந்தைகள் ஆண்ணாவும்அலெக்ஸாந்தரும் தாயாரிம் வந்தார்கள். கருவிழிகளும் சுருண்ட கேசமும் கொண்ட ஆண்ணாவுக்கு ஆறு வயது. அலெக்சாந்தருக்கு நான்கு வயது. ஆவல் பொங்க அவர்கள் தொட்டிலை நெருங்கினார்கள்..

“ குழந்தைகளே! உங்களுக்குத் தம்பி பிறந்திருக்கிறான்“ என்றார் இல்யாநிக்கலாயெவிச்.

“ எவ்வளவு சின்னூண்டுப் பயல்! ” என்று வியந்தாள் ஆண்ணா...

“ வளர்ந்ததும் பெரியவன் ஆகிவிடுவான்” என்று பதில் அளித்தார் தந்தை.

“ இவன் பெயர் என்ன?“ என்று தம்பியை நன்றாக பார்ப்பதற்க்காக நுனிக் கால்களில் எம்பி நின்றபடியே கேட்டான் அலெக்சாந்தர்.

“ விளாதீமிர் என்று கூப்பிடுவோமே” என்றார் தாயார்.

இவ்வாறு,வோல்கா நதிக்கரையில் உள்ள ஸிம்பீர்ஸ்க் நகரில், 1870 ஆண்டு ஏப்ரல் மாதம் 22ந்தேதி பிறந்தார்  விளாதீமிர் உல்யானவ் என்னும் புதிய மனிதர்.. பிற்காலத்தில் இவரே மாபெரும் லெனின் ஆகப் புகழ் பெற்றார்.

'மரீயா பிரிலெழாயெவா-" அவர்கள் எழுதிய “ லெனினின் வாழ்க்கைக் கதை என்ற பிரதான நூலிருந்து...

11 comments :

 1. உலக அரசியலை புரட்டி போட்ட உண்மையான புரட்சித் தலைவர் :)

  ReplyDelete
 2. வலிப்போக்கரே....

  சில வரிகளைப் படிக்கும் போதே. ...........இது வலிப்போக்கரின் நடையில்லையே எனத் தோன்றியது.

  பகிர்வு லெனின் பற்றிய செய்திகளை அறியத் துணை புரிந்தது.

  தொடருங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 3. விளாதீமிர் - புதிய தகவல் ஜி...

  ReplyDelete
 4. நல்லவர்களை பதிவில் வைத்தது நலமே,
  விளாதீமிர் என்பது தான் அவர் பெயரா?
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையான பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!