செவ்வாய் 05 2015

“ஹலோ” என்றொரு சத்தம்............

படம்-www.kalachuvadu.com

“ஹலோ” என்று
சத்தம் கேட்டு
திரும்பி போது
எதிரில் ஒருவர்
என்னை தெரியுதா?
என்றார்................

சிறிது யோசித்து
தெரியலையே என்று
உண்மையைச் சொன்னதும்
“படா”றென்று  என்
கன்னத்தில் அறைந்தார்.

நீ.... என்ன...
லூசா.... எதிரில்
நிற்கும் என்னை
தெரிய வில்லை
என்று சொல்கிறாய்..
நீ   ..... குருடா...?
என்று கேட்டார்.

நான் என்னத்தைச்
சொல்வது.எதைச்
சொன்னாலும் அறை
விழும்.... என்று
தெரிந்தது  தப்பிக்க
ஒரு வழி.......
சொல்லுங்களேன்.


6 கருத்துகள்:

  1. அவர் எப்படி இருந்தார் ?நான் தப்பிக்கணுமே ,இப்படி எத்தனை கிளம்பி இருக்காங்களோ :)

    பதிலளிநீக்கு
  2. அய்யய்யோ... மாட்டிக்கிட்டீங்களா...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. வேறு வழி இல்லை, நீங்கள் அவராக மாறவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வழி கன்னத்தில் அறை வாங்குவதைவிட ரெம்பவும் கடினமாச்சே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...