பக்கங்கள்

Wednesday, June 10, 2015

இனி.. வானிலை ஆய்வு மையத்தை மூடி விடலாம்...???

படம-tamil.oneindia.com


தந்தை பெரியார் பிறந்த
மண்ணில் பிழைப்பு வாதத்தின்
பிதாமகன் பெயரில் கட்சி
தொடங்கி அதன் பேரில்
ஆட்சி நடத்தி வரும்
அதிமுக தலைவர்கள் அமைச்சர்கள்
மற்றும் தொண்டர்களின் பக்தியின்
வேண்டுதல்களினால் புர்ர்ரச்சி தலைவி
விடுதலை ஆனதை அனுபவமாக
கொண்டு புர்ர்ரச்சி தலைவி
ஆளும் நாட்டில் நீர்வளத்
துறையின் தலைமைப் பொறியாளர்
தனது துறைக்கு மழை வேண்டி
வருண பகவானுக்கு சிறப்பு
பூஜை செய்து அதன் பலா
பலன்களை மின்னஞ்சலில்
தெரிவிக்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்ளப் பட்டதால்
இனி வானிலை ஆய்வு
மையம் தேவை இல்லை
தப்பும் தவறுமாக அறிக்கை
விடும் ஆய்வு மையத்தை
இனி மூடி விடலாம்..........

16 comments :

 1. நண்பரே... புர்ர்ரச்சி தலைவி இது வாயிலே நுழைய மாட்டுதே.... கொஞ்சம் மாத்தக்கூடாதா ?

  ReplyDelete
  Replies
  1. மாத்தினா...புர்ர்ர்ரச்சி தலைவர் கோபித்துக் கொள்வாரோ என்று பயமாக இருக்கிறது நண்பரே...

   Delete
  2. அவரு இன்னுமா கோவிக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருருருருருரு.........

   Delete
  3. அங்கியிருந்து..பாத்துகிட்டுதானே இருக்காரு...????

   Delete
 2. #தனது துறைக்கு மழை வேண்டி#
  அவர் துறையில்' மாமூல்' மழை கொட்டிக் கொண்டுதானே இருக்கும் இன்னுமா பெய்யணும் :)

  ReplyDelete
  Replies
  1. பெய் என்றால் பெய்யனும்ல... அதற்குத்தான்..

   Delete
 3. ஆனாலும் இவ்வளவு ர்ர்ர் கூடாது, ஆய்வு மையத்தை மூடி விடலாம். நல்ல சிந்தனை, நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஒருதடவைதான் ர் தட்டினேன்.. அது ஒருதடவை தட்டினா என்பது மாதிரி ர்னு வந்துவிட்டது.நன்றி!!!

   Delete
 4. மிக சரியா சொன்னீர்கள்.

  ReplyDelete
 5. ரமணன் அவர்கள் வேலைக்கு ஆப்பா...? ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. சே..சே...வேலை இல்லாட்டியும் பென்சன் வருமில்ல...

   Delete
 6. புர்ர்ச்சி தலைவி... மிகவும் ரசித்தேன் தோழரே ! இந்த அநாகரீக சமுதாய் அவமான செயல்களை சில படித்து தெளிந்தவர்கள்கூட ஆதரிப்பது மிகவும் வேதனை !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. நல்லவர்களின் மனது வேதனைதான் படமுடியும் நண்பரே...நன்றி!

   Delete
 7. சென்னையில் மேகமூட்டம் காணப்படும்

  ReplyDelete
  Replies
  1. மேக மூட்டத்தோடு பண மூட்டமும் காணப்படட்டும்...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com