படம்-Prpc Chennai |
தனியார் பள்ளியில் தம்
பிள்ளை படித்தால் டஷ்
புஷ்னு ஆங்கிலம் பேசும்
அப்படி பேசினால் அறிவு
வளரும்.அந்த அறிவு
வளர்ந்தால் டாக்டர் அல்லது
இஞ்சீனியர் ஆகும் நம்மைப்
போல் கஷ்டப்பட மாட்டாது
அதிக பணம் சம்பாதிக்கும்
கவலை இல்லாமல் அதன்
வாழ்க்கை நிம்மதியாக ஓடும்.
இப்படியான நவ நாகரீக மூட நம்பிக்கையால் அவரவர் வசதிக்கு ஏற்றார் போல் ஓடுகிறார்கள் தனியார் மெட்ரிக்பள்ளியை நோக்கி ஓடுகிறார்கள் .
ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் பெற்றோர்கள்
நவ நாகரீக மூடநம்பிக்கை பீடித்த பெற்றோர்களே..நீங்கள் சேர்க்கும் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்களுக்கோ ஓழுக்கமோ நேர்மையோ எதுவும்
கிடையாது. கட்டண கொள்ளை அடிப்பது பணம் கட்டாத மாணவர்களை துன்பு உறுத்துவது அந்த மாணவர்களின் பெற்றோர்களை அவமானப்படுத்துவது 10 வகுப்புபாடத்தை ஒன்பதாம் வகுப்பிலே நடத்துவது 12ம் வகுப்பு பாடத்தை12 வகுப்பில் படிக்கச் சொல்வது
அர்த்தம் புரியாத இந்திய தேசிய கீதத்தைப் போல.. பாயசத்தின் சுவைஅறியாத கரண்டியைப்போல மாணவர்களிடம் பதிய வைக்கிறார்கள்....
கருப்பு பணமாக கல்விககட்டணம் வினா தாள்களைமுன்கூட்டியே சொல்லுவதுகாப்பி அடிக்க செய்வதுதேர்வு கண்காணிப்பாளரை பிக்ஸ பன்னுவது இந்த முறைகேடுகளை தவறு இல்லை என்று சொல்லுவது அதையே திறமை என்று கூறுவது இதனாலே பள்ளி பருவத்திலேயே வாழ்க்கை பற்றிய சிந்தனையை புகுத்தி மாணவர்களை ஊழல் படுத்துகிறார்கள்.
தனியார் பள்ளியில் பணிபுரியும்ஆசிரியர்களை கொத்தடிமைகளாக,குறைந்த சம்பளத்தில் ஓய்வு இன்றி வேலை வாங்குகிறார்கள்.அவர்களை பள்ளிக்கு மாணவர்களை பிடிக்கும் புரோக்கர்களாக மாற்றுகிறார்கள்.
அரசுப்பள்ளியில் உள்ள குறைகளை பெற்றோர்கள் , பெற்றோர்கள் சங்கத்தில் அணிதிரண்டு கண்காணித்து போராடினால் சரி செய்ய முடியும் என்ற உண்மையை மறைத்து, மக்களுக்கு எதிராக பஞ்சமா பாதகங்களை அமுல் படுத்தும் அரசையும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் நம்பி நவ நாகரீக மூடநம்பிக்கையினால் ஆட்பட்டு ஓடுகிறார்கள்.
இத்தகைய நவ நாகரீக மூட நம்பிக்கையை ஒழிப்பதற்க்காக... “மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்”, “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்” இணைந்து “ கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள்...
பார்க்க.....
நல்ல விடிவு வரட்டும் !
பதிலளிநீக்குநல்லது நல்ல விடிவு வரட்டும்..
நீக்குவிடிந்தால் சரிதான் விடியுமா ?
பதிலளிநீக்குதானாக விடியாது நண்பரே..... நல்லவர்களான தேசபக்தர்கள்தான் விடிய வைக்க வேண்டும்..
நீக்குஉண்மை சுடட்டும்.
பதிலளிநீக்குநன்றி.
கண்டிப்பாக....சுடும்
நீக்கு"பாயசத்தின் சுவைஅறியாத கரண்டியைப்போல மாணவர்களிடம் பதிய வைக்கிறார்கள்"
பதிலளிநீக்குஇந்த வரிகளைவிட இன்றைய ஆங்கில மோக கல்வி முறையை விமர்சனம் செய்ய எதுவும் இல்லை!
வரவேற்க வேண்டும் வேண்டியபடி இதுபோன்ற நவின பெரியாரிச" நவ நாகரீக மூடநம்பிக்கை"யினை!..
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
இது போன்ற நவ நாகரீக மூடநம்பிக்கைகள ஒழிக்கத்தான் வேண்டும்
நீக்குமக்கள் மனம் மாறுவதுதான் நல்ல விடிவுக்கான காலம்... காலங்காலமாய் சிந்திக்க முடியாத அளவில் பழக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திடம் சட்டென மாற்றம் வருமா... ?!!
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
சட்டென மாற்றம் வந்துவிடாதுதான். அதற்காக சும்மாவும் இருக்கக்கூடாதல்லவா...
நீக்குமிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குபள்ளி பருவத்திலேயே பெற்றோர்களால் மாணவர்கள் ஊழல் மயமாகிப்போகிறார்கள்.
அம்மா உணவகம் போல் அம்மா அம்மா ஸ்கூல் வேண்டும் என்று எழுதி, மாணவனிடம் கொடுத்து பிடிக்வைப்பதிலேயே பெற்றோரின் சிந்தனை சீரழிவு தெரிகிறதே.
பெற்றோர்களால் மாணவர்கள் ஊழல் மயமாகிப்போகிறார்கள். ஆளும் அரசியல்கட்சிகளால் மக்களும் ஊழல் மயமாகி வருகிறார்கள்.
நீக்குஎங்கும் நடந்து, நல்லது நடந்தால் சரி...
பதிலளிநீக்குநல்லது நடக்க வேண்டும் என்றுதானே..கல்வி தனியார் ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள்.
நீக்குஇந்த அவலம் மாறவேண்டும்
பதிலளிநீக்குத ம 8
தங்கள் எண்ணம் போல் இந்த அவலம் மாறட்டும்...
நீக்குதங்கள் எண்ணம் போல் இந்த அவலம் மாறட்டும்...
நீக்குதனியார் மயமான கல்வி ஒழிந்தால் தான் இம்முறை ஓழியும், மாறட்டும். வாழ்த்துக்கள்.நன்றி
பதிலளிநீக்குதனியார் மயத்தை ஒழிக்கதான் மாநாடு நடத்துகிறார்கள் நண்பரே...
நீக்குதற்போதிய சூழ் நிலையை தங்கள் பதிவு உணர்த்துகிறதது!
பதிலளிநீக்குநன்றி! அய்யா...
நீக்கு