படம்- |
தீர்ப்புகளை மட்டுமே சொல்ல
வேண்டிய நீதிமன்றங்கள் சட்டங்களை
உருவாக்குகின்றன....
சட்டங்களை உருவாக்கும்
ஆட்சி மன்றங்களோ...தீர்ப்பை
எழுதுகின்றன...
மேற்கண்ட இரண்டையும் அம்பல
படுத்த வேண்டிய பத்திரிக்கைகளோ
ஒரு பக்க சார்பாய் அம்மனமாக
நின்று ஜால்ரா தட்டுகின்றன.
இவற்றின் எல்லாவற்றுக்கும் மரண
அடி கொடுக்க வேண்டிய உழைக்கும்
மக்களோ அடிமையைாய் உருவாக்கப்பட்டு
கிடக்கின்றனர்.........
ஆக...இந்தியா அடிமைகளை உருவாக்கும் தேசம்.!!!!
அடி எப்போதும் மக்களுக்கு...
பதிலளிநீக்குஎப்போதும் அடியை தாங்குபவர்களும் அவர்களே!!
நீக்குநாம் நம்மையே அடிமையாக ஆக்கிக்கொண்டோம் என்று சொல்லலாமா? வலிப்போக்கரே, தங்கள் பதிவு அருமை.
பதிலளிநீக்குதங்கள் கருத்துப்படி அப்படியும் சொல்லலாம்....
நீக்குத ம 4
பதிலளிநீக்குநன்றி!!
நீக்குதற்போதைய ஹெல்மெட் பிரச்சினைக்கு காரணம் நீதிமன்றம்தான் .வாகன ஓட்டிகளின் உயிர்மீது காட்டும் அக்கறையை புகையிலை ,மது பானங்கள் குடிப்பவர்களின் மீதும் காட்டலாமே :)
பதிலளிநீக்குபுலியானது மானின் உயிர் மீது இரக்கம் காட்டுமா...???
நீக்குமிக அருமையாக சொல்லி இருக்கின்றூர்கள் நண்பரே.... நச்சென்று செருப்பால் அடித்தது போல...
பதிலளிநீக்குநன்றி!!!
நீக்குஇந்த தேசத்தில் சுயமரியாதை என்பதே யாருக்கும் இல்லை
பதிலளிநீக்கு1. நீதித்துறையிலே உச்சத்தில் இருப்பவர்க்கு, தன தகுதிக்கு ஏற்ற சுயமரியாதை என்ற உணர்வு இல்லை.
2. ஆட்சி மன்றத்தில் இருப்பவர்க்கு, போட்ட முதலை வட்டியுடன் எப்படி எடுப்பதென்ற கவலையில், " கருவாடு விற்ற காசு நாறாது " என்று, சுயமரியாதையை இண்டநெட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,
3.நமது தேசத்திலே, பத்திரிகைகளே கிடையாது, இருந்தால் அல்லவோ பத்திரிகை தர்மம் என்று ஒன்றிருக்கும். இருப்பவர் எல்லாம் " ரீடர்ஷிப் " என்ற எண்ணிக்கையை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதையெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ்வதெப்படி என்று கேட்டு சுயமரியாதையை கடாசி விட்டவர்கள்.
4. சர்வசக்தி படைத்தவனுக்கு, அப்பப்ப இலவசத்தை வீசும் போது, அதைஎடுக்க ஓட்டுச்சீட்டை கீழே வைத்து திருடு கொடுக்கிறான், நினைவு வந்து தேட தொடங்குங்போது கண்ணெதிரே தெரிகிறது மதுக்கடை. இன்னும் அடிமையாக வில்லை அய்யா, தூங்க வைக்கப்படுகிறான்.
அய்யா " வலி போக்கரே " எனக்கும் வலிக்கிதையா, வலிப்பதை மட்டும் சொல்லாமல் வலிக்கு மருந்து சொல்வீரா?
வலிக்கு மருந்து இருக்கிறது அதிரை அவர்களே!! அந்த மருந்தை கொடுக்கும் முறையைத்தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையாக சொல்கிறார்கள் திரு. அதிரை அவர்களே!!
நீக்குமக்களை யார் மதிக்கிறார்கள்?
பதிலளிநீக்குத ம 8
அந்த மதியாதாரை மக்கள் மிதித்தால் மதிப்பார்கள்.
நீக்கு