பக்கங்கள்

Thursday, August 27, 2015

வாங்க..மது குடிக்க வாங்க ! ஆளும் அரசின் கல்லாபெட்டிய நிரப்பிட்டு போதையிலே போங்க...


அய்யா... வாங்க..
அம்மா...வாங்க..
அண்ணே.. வாங்க...
அக்கா ... வாங்க..
தம்பி  ...வாங்க...
தங்கச்சி...வாங்க...
பொடிப்பய்யா..வாங்க
ஆளும் அரசின்
மதுவை குடித்துவிட்டு
காலியா இருக்கும்
அரசின் கல்லாவை
நிரப்பி விட்டு ...
போதையிலே போங்க
அப்பத்தான் இலவசமா
கோவணத் துணியும்
இடுப்புத் துணியும்
கிடைக்கும் முங்க...
வாங்க....வாங்க..... வாங்க.....கோவை NDLF (4)


கோவை NDLF (5)
மேலும் படங்கள் பார்க்க.. செய்திகள் படிக்க..நன்றி வுினவு..16 comments :

 1. இப்பவே 28ஆயிரம் கோடி வருதாம்!! இன்னும்இவங்களும் வந்தால்??,? கணக்கு போடவே கால்குலேட்ரே கன்புயுஸ் ஆகிடும்!! வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஐயா!!!
  அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!?!

  ReplyDelete
  Replies
  1. நன்றி! திரு. கருர்பூபகீதன் அவர்களே!!

   Delete
 2. வேதனையான தங்களது கவிதையைப் படித்து (குடி)மகன்கள் யாராவது திருந்தினார் சரி.

  ReplyDelete
  Replies
  1. குடி மகன்கள் திருந்தினால் அவர்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது அய்யா.....

   Delete
 3. நம்மாளுங்க
  எப்ப தான்
  இதைப் பற்றிச் சிந்திக்கப் போறாங்க

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்கிற வழியை எல்லாம் பெரிய பூட்டு அடைத்துவிட்டார்கள் அய்யா...! எப்படி அவர்கள் சிந்திப்பார்கள்... சிந்திக்க சொல்பவர்களை குடி கெடுக்கும் அரசு..அடக்கு முறையை ஏவுதய்யா.....

   Delete
 4. இதோ வந்து கிட்டே இருக்கோம் நண்பா..இறுத்து ஊத்துங்க 200

  ReplyDelete
  Replies
  1. வாங்க.... வாங்க......வாங்க....நண்பா.....

   Delete
 5. கஜானாவுக்கே இவ்வளவு என்றால் யார் யார் பைக்கு எவ்வளவு போகுதோ :)

  ReplyDelete
  Replies
  1. அந்தப் புள்ளி விபரமும் பெரிய புத்தகம் நண்பரே......

   Delete
 6. அன்புள்ள அய்யா,

  வாங்க..மது குடிக்க வாங்க !
  கு(ட்)டி கவிதை...
  அரசாங்கத்திற்குச் சாட்டையடி...!

  அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய
  கல்வி...தனியாரிடம்
  தனியாரிடம்... இருக்க வேண்டிய சாராயம்
  அரசாங்கத்திடம்...!
  கேட்க நாதியில்லை...
  கோவை போல சில இடங்களில் குமுறல்கள்...
  எதையும் கண்டுகொள்ளாத அரசு...!
  கண்டும்... கொல்லும் அரசு...!
  ‘அரசு அன்று கொல்லும்’ அல்ல அல்ல
  அன்று அன்று ... இன்று இன்று கொல்லும்.
  நன்று அன்று!


  நன்றி.
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. தெய்வம் நின்று கொல்லும்.. அதாவது வயதான பிறகு கொல்லும்... அரசு அன்றே கொல்லும் என்பது மூக்குக்கு சாராயக் கடையை திறந்துவிட்டு..கொஞ்ச வயதிலே கொல்லும் அய்யா....

   Delete
 7. ஹஹஹ் கவிதை நல்லாத்தான் இருக்கு..

  என்னது கஜானா நிரம்பலையா..ஆச்சரியம்...நக்கல்??? புள்ளிவிவரம் அப்படிச் சொல்லையே

  ReplyDelete
  Replies
  1. புல்லு விபரமே தெரியாதபோது....புள்ளிி விபரத்தை தெரிஞ்சு என்ன ஆகப்போகிறது குடிமக்களுக்கு....

   Delete
 8. உண்மையில் மதுவிலக்கு கொண்டுவரும் நோக்கம் யாருக்கும் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. குடிகார தேசத்தில் எல்லோரும் குடி மக்களாக இருக்கும்போது ..யாருக்குத்தான் குடிவிலக்கு நோக்கம் இருக்கும்....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com