.அவர்கள் இருவரும் அந்தத் தெருவுக்குள் நுழைந்தவுடன் வரிசையாக நான்கு நாய்கள் படுத்திருந்தன. அந்த நான்கு நாய்களை பார்த்ததும் இருவரும் பயத்தில் சற்று பின்வாங்கி நின்று எப்படிச் செல்வது என்ற யோசனையில் நின்றனர்.
பாம்புக்கு படையே நடுங்கும் போது... தாங்கள் இருவரும் நாய்களுக்கு பயந்து
நிற்பதை அவர்கள் இழிவாகக் கருதவில்லை.. இப்படி இருவர் நாயைக்கண்டு பயந்துகொண்டு
நிற்பதை கண்டு...“ சும்மா போங்கள்”..அதுகள் ஒன்றும் செய்யாது என்றார் அந்தத் தெரு வழியே வந்த ஒருவர்.
சும்மா..போங்கள்..அதுகள் ஒன்றும் செய்யாது என்று சொல்லிவிட்டு போனவரின் வார்த்தையை
நம்பி அவர்கள் செல்ல தயாராக இல்லை. மாற்று
வழி எதுவும் இருக்கிறதா,? என்பதை தெரிந்து கொள்வதற்க்காக.. மீண்டும் அந்தத்
தெருவழியே யாராவது வருகிறார்களா??? என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்....
இருவரைக் கடந்து டூவீலரில் ஒருவர் வேகமாய் சென்றார். படுத்திருந்த நாய்களும் சத்தம் கேட்டு பதறியடித்து டூவீலரில் சென்றவரை நான்கும் நான்முந்தி நீ முந்தி என்றாவாறு விரட்டிக் கொண்டு
சென்றன....
டூவீலரில் சென்றவரை கடித்து குதறியதோ... அல்லது அவர் அதுகளிடமிருந்து தப்பித்து விட்டாரோ என்று தெரியாத நிலையில் விரட்டிச் சென்ற நாய்கள்
உருமியபடி மீண்டும் தங்கள் பழைய இடத்துக்கே வந்து சேர்ந்தன...
இருவரில் ஒருவர் தன் செல்போனில் ஒரு நம்பரைத் தொடர்பு கொண்டார்.. அந்தத்
தொடர்புக்காரர்.. தொடர்பு எல்லைக்குள் வெளியில் இருப்பதாக அந்தச் செல்போன் பதில்
கூறியது. உதட்டைப் பிதுக்கிய வண்ணம் யோசனையில் இருந்தனர்...
அந்தத் தெருவிலிருந்து ஒரு மாணவன் வந்தான்.கையில் சாமி பக்தியின் பெருமையைப்
பறைசாற்றும் பெரிய கயிறு கட்டியிருந்தான். அவனிடம் அந்தத் தெருவுக்கு செல்வதற்கு மாற்று
வழியைக் கேட்டபோது... ரெண்டு மூன்று தெருவை சுற்றி வர வேண்டியதிருக்கும்
என்று விட்டு..அப்படிச் சுற்றி வந்தாலும் அங்கேயும் நாய்கள் இருக்குமே?.... என்று பயமுறுத்தினான்.....
எதுக்கும் போய் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவன் சொன்ன தெருவைச்
சுற்றி வந்த போது.. தெருவின் மூலையில் ஊன்றியிருந்த தெருப் போர்டை பாத்ததும். இருவரில்
ஒருவர் தயங்கி நின்றார்.
தெருவில் உள்ள போர்டில் குடியானவர் தெரு என்று இருந்தது. குடியானவர்
என்றால் விவசாயிகள் என்றுதான் அர்த்தம் என்றார் ஒருவர். அடுத்தவர் அது ஏட்டிலும்,
புத்தகத்திலும்தான்.. நடப்பில் குடியானவர்
தெரு என்றால் மேல் சாதியினர் வசிக்கும் தெரு என்றுதான் அர்த்தம், பொருள். அப்படித்தான்
அவர்கள் புரிய வைத்திருக்கிறார்கள். புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையினால்..தாங்கள் மட்டும் சென்று வாருங்கள்...பிரச்சினை வேண்டாம்.
தாங்கள் திரும்பி வரும்வரை நான் இங்கேயே காத்திருக்கிறேன் என்றார். மறுப்பு தெரிவித்து இருவரும் பேசிக் கொண்டு இருப்பதைப்
பார்த்து அந்தத் தெருவைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் அருகில் வந்து நின்றார்.
நீங்க யார்..? என்ன சாதி??? கண்டவர்கள் எல்லாம். இந்தத் தெருவுக்குள் நுழைய முடியாது. தெரியுமா?? உயர் வகுப்பைச்
சேர்ந்தவரகளாகவோ... இந்தத் தெருவில் இருப்போரின் உறவினர்காளக இருந்தால்தான் செல்ல
முடியும் என்றுவிட்டு ஒருவரிடம் உன் சாதி என்ன என்று கேட்டார்.
நாங்கள் மனிதர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் சாதிமுறைகளை
பயன்படுத்துவதில்லை , சாதியையும் சொல்வதில்லை.. எங்கள் இருவரின் உறவுக்காரரை பார்ப்பதற்க்காக
இங்கு வந்தோம் என்றபோது.. வந்தவரை தொடர்ந்து மேலும் மூன்று பேர்கள் வந்து
இருவரையும் சுற்றி நின்றார்கள்.
சாதியைச் சொல்லத் தயங்குபவர்களும், சாதியை மறைப்பவர்களும். சாதியை சொல்லாதவர்களும்
கீழ்ச் சாதியை சேர்ந்தவர்கள்தான். இந்தத் தெருவுக்குள் இருவரும் போக முடியாது என்றார்கள் இருந்த நால்வரில் இருவர்.
நால்வரிடம் பேசிப் பயனில்லை என்று தெளிவாகத் தெரிந்த பின் அந்தத் தெருவில் பார்க்க
வந்தவரின் பெயரைச் சொன்னார்கள் ம்ம்...ம் அவனா...என்றபடி. சரி. அவனை எங்களிடம் சொல்லச் சொல்? என்றார்கள்.
இருவரில் ஒருவர் தன் செல்போனில் தொடர்பு கொண்டு அதை தன் காதில் வைத்த வண்ணம், வழி மறைத்து
நின்ற நால்வர்களுக்குப் பின்னால் தன் பார்வையை செலுத்தி அந்தத் தெருவைப் பார்த்தார். நாய்கள் இருப்பதாக தெரியவில்லை. ..ஆனால் அங்கும் நாய்கள் இருக்குமே என்று மாணவன் சொன்னது நிணைவுக்கு வந்தது.
நெடு நேரமாக ரிங் செய்தும் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின்
செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றே செல்போனில் அமைதியாக பதில் வந்தது.. இருவரும் நாலுகால் நாய்களை கண்டு பயந்ததுபோல் இரண்டுகால் நாய்களுக்கும் பயந்து சத்தமில்லாமல் நகர்ந்தனர்.
குடியானவர்கள் என்றால் விவசாயிகள் என்றுதான் அர்த்தம்!! அது ஏட்டிலும் நடப்பிலும்தான் இருக்கு!!
பதிலளிநீக்குஅத்தனையும் உண்மை! அனைத்தும் அருமை! வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றி!!
அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!
தங்களின் கருத்துரைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி!
நீக்குயதார்த்தத்தின் அருமையான வெளிப்பாடு.
பதிலளிநீக்குநன்றி! அய்யா.....
நீக்குநல்லதொரு பதிவு நண்பரே.... அருமை
பதிலளிநீக்குநன்றி! நண்பரே......
நீக்குசாதி வெறி பிடித்த நாய்கள் :)
பதிலளிநீக்குநாய்கள் ஒழிந்தாலும் சாதி வெறி ஒழிய மாட்டேன்கிறதே...நண்பரே.....
நீக்குப்ளீஸ் நாலுகால்கள் சாதிகள் பார்ப்பதில்லை....அவர்களுக்குள் எந்த பேதமும் இல்லை....நாலுகால்கள் இரண்டு கால்களைவிட மேலானவை....6 அறிவு படைத்த இரண்டுகால்கள்தான் சிந்திக்கத் தெரியாதவர்கள் 6வது அறிவு எதற்கு?
பதிலளிநீக்குஅய்யா.... நாய்கள் சாதி பார்ப்பதாக---பார்த்ததாக எங்கும் சொல்லவில்லையே....
பதிலளிநீக்கு