படம்- வினவு.( சுந்தர பாண்டியன்) |
சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்த காலத்திலும், சரி, சினிமா தியேடடர்கள் குறைந்தவிட்ட இன்றும் சரி, சினிமா பார்க்காதவர்கள் யாருமே..இல்லை விதிவிலக்காக.. சகாமல் இருக்கும் பழையகாலத்து ஒன்றிரண்டு பெருசுகளைத்தவிர.....
தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தைப் பார்க்க ,தாய் சொன்ன சிறு வேலையை தட்டிவிட்டு சென்றார்கள் அந்தக் காலத்தில் இருந்த போது இந்தக் காலத்தில் எப்படி இருப்பார்கள்.
அப்படி ஆக்கிவிட்டது சினிமா....,சாராயக் கடையை திறந்து தமிழ்நாட்டு மானஸ்தர்களை ,மானம் கெட்டவர்களாக மாற்றிவிட்டது. இன்று ஆளும் கொமளவள்ளி அரசு.....
மக்களுக்காக ஆளுவதாக சொல்லிக் கொள்ளும் அரசே... மானங்கெட்டதனமாக நடந்து கொள்ளும்போது.... சினிமாவை இயக்கியவர்களும். அதில் நடித்தவர்களும், தயாரித்தவர்களும், கைகட்டி சும்மவா இருப்பார்கள்.
அவர்களும் தங்கள் பங்குக்கு மேலேயே போதையூட்டியுள்ளார்கள்... அவர்கள் ஊட்டியது சாராய போதை அல்ல.... சாதி வெறி என்னும் போதை... இந்த சாதிவெறி போதையிலிருந்து யாரும் தப்பியதாக இல்லை....
மலரும் நினைவுகளுக்கு ஒரு போட்டி வைத்தால், அதில் இளமை துடிப்புடன் பூத்துக் குழுங்கும் கல்லூரி வாழ்க்கைதான் பலருக்கு முதலில் வரும். அத்தகைய கல்லூரி பருவத்தை தமிழ் சினிமா எப்படி சித்தரிக்கிறது.
கலரு,ஃபிகரு,கெத்து,கேலி,பேருந்தில் ஹீரோயிசம்,அடிதடி, பெண்ணின் காதலுக்காக நோயாய் அலைவது சுற்றுவது, இதுதான் கல்லூரி மாணவர்களைப் பற்றி வெள்ளித்திரை உருவாக்கி இருக்கும் முத்துக்கள.
காசு உள்ளவனுக்கே கல்வி என்று சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளை அடிக்கிறது. அப்படியே படித்து வந்தாலும் வேலை இல்லை, பகுதி நேர வேலை செய்து கல்லூரி செல்லும் நிலை.. இதைக் குறித்தெல்லாம் எந்த சினிமா இயக்குநரும் பேசுவதில்லை...
ஆனால். இன்னொருபுறத்தில். இந்த சினிமா இயக்குநர்கள். இளம் பருவத்திலே எல்லோரையும் சாதி வெறியர்களாக மாற்றவும் செய்கிறார்கள்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வடிவழகன் என்ற பட்டி மன்ற பேச்சாளர் ஒருஉண்மையைச் சொன்னார். “ சாதி என்றால் என்னவென்றே தெரியாது, ஆனால் தமிழ் சமூகத்தில் எத்தனை சாதிகள் இருக்கிறது என்பதை, நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம் ” என்று கூறினார்.
உதாரணத்துக்கு, சில..
“சிங்கம.“ படத்தில் “என் சாதி,ஊர், குடும்பம், சொந்தம்தான் எனக்கு பலம்” என்று அதில் நடித்த நடிகன் சூர்யா சொல்வார். நல்ல கதையம்சம் படம்என்று சொல்பவர்கள், “நேர்மையும், சாதி பாராட்டாத என் ஊர் மக்களும்தான் என் பலம்” என்று ஏன்? பேசவில்லை... இயக்குநரும் ஏன் ?அந்த வசனத்தை சொல்லிவில்லை..
நட்புக்கு சாதி பார்ப்பதில்லை என்று சொல்லும் சினிமாதான். திருமணத்திற்கு சாதி வேண்டும் என்கிறது. அந்தச் தமிழ் சினிமா...“ சுந்தர பாண்டியன்” படத்தில் இப்படி ஒரு காட்சியில்..“ நானும் கள்ளன்தான், நீங்களும் கள்ளர்தான். அதனால் பெண்ணை கட்டிக் கொடுங்கோ” என்று ஒரு வசனம்..வரும், அதே கள்ளர் பெண்ணை வேறு சாதியை சேர்ந்தவர் காதலிக்கும் போது வெட்டுகிறார்களே.... அதை எந்த இயக்குநாராவது ஹீரோவாவது தட்டி கேட்டு படம் எடுத்து இருக்கிறார்களா..? கேட்டால் பல வசனங்களை அவர்கள் பேசுவார்கள்...
அதே சமயத்தில் அரிவாள், வெட்டுக்குத்து, பஞ்சாயத்து, ஏலம், ஊர்ப்பகை, சாதிப் பெருமிதம்,.... இப்படிபட்ட கேவலங்களை எல்லாம் தமிழர் வாழ்வியல் சிறப்புக்கள் என்று படம் பிடித்து க் காட்டுவார்கள்,
அந்த வரிசைகளில் தேவர் மகன், விருமாண்டி, தேவர் வீட்டுப் பொண்ணு, மறவன் மகள்-மகன், சின்னக்கவுண்டர், எஜமான், நாட்டாமை, சேரன்பாண்டியன், சண்டைக்கோழி, மதயானைக்கூட்டம்----இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... இப்படியான படங்களின் மூலம் சாதி வெறி போதையை கிளப்புகிறார்கள்.இதனால் கல்லூரிகளும், பள்ளிகளும் ,விடுதிகளும் சாதி ரீதியாக பிளவுப்படுத்தப் படுகின்றன.இதன் பயனாக ஒரு கபடி போட்டிகூட வெற்றி தோல்வியில் முடியாமல் வெட்டுக்குத்தில்தான் முடிகின்றன..
கொம்பன் படத்தில் வரும் ஆப்ப நாட்டு மறவர், செம்ம நாட்டு மறவர் மோதலை .காட்டி சாதி பெருமையை வீரப் பெருமையைாக . காட்டுகிறார்கள்,
மறவர் குல மணிப்பிள்ளை என்று ஆடிப்பாடிய அமரன் படத்தில் நடித்த கார்த்திக் சாதிக் கட்சி தொடங்கி..இன்று காமெடி பீசாக வலம் வருகிறார்.
உலகமெல்லாம் சினிமா காட்டும் அமெரிக்காவில் கூட கருப்பின மக்களையோ, செவ்விந்திய மக்களையோ சிறுமைப்படுத்தி படமெடுக்க முடியாது...ஆனால்.. கல் தோன்றா..மண் தோன்றா காலத்துக்கு முன்னே தோன்றிய தமிழ்நாட்டு தமிழ் இனம் வாழும் தமிழ்நாட்டில் மட்டும் சாதி வெறி ஊட்டி மற்ற சாதியை சிறுமைப்படுத்தி படம் எடுக்காமல் இருக்காமல் முடிவதில்லை..
கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி உதயக்குமார் போன்ற இயக்கு நார்கள் தங்கள் திரைப்படங்களில். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் கண்ணியமிக்க ஜமீன்தாரிகளகவும்.. அவர்கள் வீதி வழியாக வரும்போது தலித் சாதியைச் சேர்ந்த மக்கள் சட்டை போடாமல் தோளில் போட்டு இருந்த துண்டை எடுத்து கம்புக்கூட்டுக்குள் வைத்துகொண்டு கூனிக்குறகி கும்பிடு போடும் அடிமைகளாக சித்தரித்து இருக்கிறார்கள்.
“உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை” போன்ற படங்களை இயக்கிய செத்தப்போன பாலசந்தர்.அந்தப் படங்களில் உயர் சாதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடமில்லை என்று பொங்கி இருப்பார். அவரது வழியில் சாதிப் பாசத்துடன் சங்கர் என்ற இயக்கநாரும்.. “ஜென்டிமேன்” என்ற படத்தில்
இட ஒதுக்கீட்டை எதோ பிச்சை போலசித்தரித்து பொருமி இருப்பார். இவர்களை பார்த்தெல்லாம் இட ஒதுக்கிட்டில் மூலம் பயன. பெரும் வீரப் பெருமையை வெளிப்படுத்துவதற்க்காக மீசை வைத்துக் கொள்வதாக பீத்தும் மீசைகள் கொதித்து எழுவதில்லை...
தன் சாதிக்காரன் என்பதால். கல்லூரி நடத்தும் தன்.சாதிக்காரன் இலவச இடம் தருவதில்லை. தன் சாதிக்காரனின் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்ல முடிவதில்லை. ஒரே சாதியைச் சேர்ந்த ஏழையும் பணக்காரனும் கூடிக் குலாவ முடிவதில்லை, ஒரே சாதி என்றாலும் வசதி உள்ள பணக்காரன் வசதி இல்லா ஏழைக்கு பெண் கொடுத்து ஏற்றி விடுவதில்லை.
சாதிப் பெருமை பீத்திக் கொள்ளும் கிராமங்களில் பெரிய சாதி. சின்ன சாதி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் நாடோடி சாதியாகி நகரத்து டவுன் தெருக்களில் பிழைப்பு தேடி அலையும் போதும் கூட் , வெட்டி சாதி பெருமையால் எந்தப் பயனும் ஏற்ப்ப்ட்டதில்லை..
நாமெல்லாம் பிழைப்பு தேடும் ஏழை மனிதர்கள். என்றும் பள்ளி, கல்லூரிகளில் பயிலுபவர்கள் எல்லாம் மாணவர்கள் என்ற முறையில் ஒன்றிணைவதைக் குலைக்கும் வகையில்தான் சாதி வெறி போதையூட்டுகின்றது தமிழ்ச் சினிமா
மாணவப் பருவத்திலேயே கலை ஆர்வத்தை, சமூக அக்கறையை செதுக்கி சிற்மாக்கி கொண்டால்.. சாதி வெறியூட்டும் சினிமா போதையிலிருந்து நம்மை எளிதில் விடுவித்துக் கொள்ளலாம்....
வணக்கம்!! சாதியைப்பற்றி ஆணித்தரமான உங்கள் ஆதங்கம் புரிகிறது!! அய்யா சாதிகள் இல்லயடி பாப்பா னு சொல்லிதரும் பள்ளிகூடங்களில் சாதியை கூறாமல் பிள்ளையை சேர்க்கமுடியுமா?? அங்கு ஆரம்பித்த. இந்த சாதி சாகும்வரை கூடவருகிறது!! எங்களுக்கு வேலை வாய்ப்பு அந்தஸ்து இன்னும் கன்டது கடையதில் எல்லாம் சழுகை, இட ஒதுக்கீடு வேண்டும் என்பவர்கள் யார்??? மொத்த படித்தவர்கள் எவராவது வேறு சாதி பெண்ணை திருமனம் செய்ய முன்வருகிறார்களா?? அப்படிவந்தாலும் கவர்மண்டு வேலைக்குதான் அலைகிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா??? சினிமாவில்தான் சாதியை முழுக்க முழுக்க வளர்க்கிறார்கள் என்பது ஒரு சிறிய அளவுதான்!! எல்லா மாற்றங்களிலும் முன் வர மனித மனம் தாராளமாக இருக்கவேன்டும்! அது நம்மிடமிருந்துதான் தொடங்கவேன்டும்!!!! நன்றி இவை என் கருத்துதான்!! நான் தமிழ் சினிமாக்களை பார்ப்பது இல்லை!! நன்றி நண்பரே!!!
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும் உண்மைதான் பிறந்து சுடுகாடு போனபின்னும் மறைவதில்லை...சுடகாட்டிலும் சாதி பிரிவினை உள்ளது.
நீக்குஅருமை நண்பரே நல்லதொரு சவுக்கடி வரிகள் இசித்துப் படித்தேன் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ! நண்பரே......
நீக்குஇதையெல்லாம் ஏன் சென்சார் போர்டு கண்டு கொள்வதில்லை ?
பதிலளிநீக்குசென்சார்டு போர்டும் சாதிப் போர்டைத்தான் மாட்டி இருக்கிறது நண்பரே..........
நீக்குதிரைப்படம் மூலம் நல்லவற்றையும் சொல்லலாம். தீயவற்றையும் பரப்பலாம். காசுக்காக, பிழைப்புக்காக சினிமா எடுக்கிறார்கள். வேறென்ன செய்வார்கள்?
பதிலளிநீக்குநல்வற்றை சொல்லிய படங்கள் சொற்பமே.......சாதிவெறி.மத வெறி,காதல்வெறி, ஆபாசத்தை தூண்டிய படங்கள்தான் அதிகம்....
நீக்குநல்வற்றை சொல்லிய படங்கள் சொற்பமே.......சாதிவெறி.மத வெறி,காதல்வெறி, ஆபாசத்தை தூண்டிய படங்கள்தான் அதிகம்....
நீக்குசமூகச் சீரழிவிற்கான ஒரு காரணியைப் பற்றி ஆராய்ந்த விதம் நன்று.
பதிலளிநீக்குநன்றி! அய்யா.....
நீக்குஇளைஞர்கள் இடையில் சாதி வெறி கூடி வரும் இன்றைய சூழலில், முன் எப்பொழுதையும் விட சாதிப் பேய் மிகக் கூடுதலாகத் தலை விரித்தாடும் நிலைமையில் மிகச் சரியான ஒரு பதிவைத் தந்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி!
பதிலளிநீக்குஆம்! தமிழ்த் திரைப்படங்களில் சாதி மிகுதியாகவே உயர்த்திப் பிடிக்கப்படுகிறது என்பது உண்மையே! 'சின்னக் கவுண்டர்' போன்ற படங்களைப் பார்க்கும்பொழுது முன்பெல்லாம், அப்படிப்பட்ட ஊர்களின் நடைமுறையைப் படம் பிடிக்கும் முயற்சி அது என்றுதான் தோன்றியது. ஆனால், அப்படிப்பட்ட பதிவுகள் மூலம் உயர்ந்தோர்-தாழ்ந்தோர் எனும் அந்த இழிநிலையை, சாதிய அமைப்பை உயர்த்திப் பேசுகிற, நியாயப்படுத்துகிற முயற்சிகள் அவை என்பது மிகத் தாமதமாகத்தான் புரிந்தது.
ஆனால், 'தமிழ் ஈனம்' என்று ஓர் இடத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுதான் வலிக்கிறது. மொத்தத் தமிழினமும் இப்படி இல்லை. இந்தியாவின் பிற பகுதிகளோடு ஒப்பிடும்பொழுது தமிழ்நாட்டில் சாதி வெறி இன்றும் குறைவுதான். எனவே, ஒட்டுமொத்த இனத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அப்படிக் குறிப்பிட்டிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்!
தமிழ் ஈனம் என்று குறிப்பிட்டது.. ஒட்டு மொத்த தமிழினத்தை குறிப்பதாகாது என்றே நிணைக்கிறேன் ..எனது கணக்குப்படி சாதி வெறி மத வெறி இல்லாதவர்கள் மிக மிகக்குறைவு... குறைவாக இருப்பவர்களை குறிப்பிட வில்லை....தமிழகத்தை சாரய போதையில் தள்ளிய கோமளவல்லியை அதிக அளவில் ஒட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் எல்லாம் சாதிவெறி, மத வெறி இல்லாத நல்லவர்களா...????இல்லை ஓட்டுக்கு காசு வாங்காமல் ஒட்டு போட்ட உத்தமர்களா...?மொத்தச தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாண்மை மிக மிக மோசமானதாகத்தான்... அந்த மொசமானவர்களை குறிப்பதற்குத்தான் தமிழ் ஈனம் என்று குறிப்பிட்டேன். ஒட்டு மொத்த தமிழ்இனத்தை குறிப்பதாக கருதினால்.. தமிழ்நாட்டு என்பைதை சேர்த்துக் கொள்கிறேன். நன்றி!.
நீக்கு//சாதி வெறி மத வெறி இல்லாதவர்கள் மிக மிகக்குறைவு... குறைவாக இருப்பவர்களை குறிப்பிட வில்லை// - 'தமிழ் ஈனம்' என நீங்கள் மொத்தமாகக் குறிப்பிடும்பொழுது அந்தக் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களும் அதனுள்தான் வருகிறார்கள். :-(
நீக்கு//தமிழகத்தை சாரய போதையில் தள்ளிய கோமளவல்லியை அதிக அளவில் ஒட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் எல்லாம் சாதிவெறி, மத வெறி இல்லாத நல்லவர்களா// - தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஒருமுறை தி.மு.க, மறுமுறை அ.தி.மு.க எனும் இந்த சுழல் நாற்காலி விளையாட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்குக் காரணம், இந்த இரண்டு கட்சிகளை விட ஆளுமையாக மற்ற கட்சிகள் இல்லாதது, நல்ல கட்சிகள் தனித்து நில்லாமல் எப்பொழுதும் இந்த இரண்டு கட்சிகளுடனே கூட்டணி அமைப்பது, நல்லவர்கள் தேர்தல் அரசியலில் இறங்காமல் வெறுமே வெட்டி நியாயம் பேசித் திரிவது எனப் பல காரணங்கள் உள்ளன. எனவே, செயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றதை மட்டும் ஒரு காரணமாக வைத்து அவருக்கு வாக்களித்தவர்கள் எல்லாரும் சாதி - சமய வெறியர்கள் எனவும், வாக்கை விற்கும் கைக்கூலிகள் எனவும் நீங்கள் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவது சிறிதும் நியாயமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, ஒருபுறம் சமயவெறி பா.ச.க, இன்னொருபுறம் இனப்படுகொலைக் காங்கிரசு, மற்றொருபுறம் அதற்கு உடந்தையாயிருந்த தி.மு.க எனப் போட்டி இருந்த நிலையில், ஒப்பீட்டளவில் இவர்களை விட அ.தி.மு.க-வே மேல் என்று கூறி நானும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கும்படிதான் எழுதினேன். அப்படியானால் என்னையும் சாதி - சமய வெறியன், வாக்கை விற்கும் கைக்கூலி என்பீர்களா நண்பரே?
//ஒட்டு மொத்த தமிழ்இனத்தை குறிப்பதாக கருதினால்.. தமிழ்நாட்டு என்பைதை சேர்த்துக் கொள்கிறேன்// - அப்பொழுதும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரையும் மொத்தமாக இழிவுபடுத்துவதாகத்தானே ஆகிறது? :-(
ஒருவரை நான் திட்டினால்..என்னையும் சேர்த்து நானே என்னை திட்டிக் கொள்வதாக கூறுவதை தாங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...நண்பரே..... உதாரணத்துக்கு என்னை நீங்கள் திட்டுகிறீர்கள் .. அது எப்படி உங்களையும் சேர்த்துதான் திட்டுகிறிீர்கள் எடுத்துக் கொள்ள முடியுமா....????
நீக்குசரி விடுங்கள்!
நீக்குஎன் கருத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பராவாயில்லை..... கோபம் கொள்ளதீர்கள் நண்பரே......
நீக்குகோபம் ஏதும் இல்லை நண்பரே! வருத்தம் மட்டும்தான், வேறொன்றுமில்லை.
நீக்குஅப்புறம் ஏன் இவ்வளவு நாட்களாக வரவில்லை என நினைக்கிறீர்களா? உங்கள் தளத்துக்கு மட்டுமில்லை, கடந்த இரண்டு மூன்று நாட்களாக நான் யார் தளத்துக்கும் வரவில்லை. என் தளம் உட்பட! ;-) கொஞ்சம் வேலையாய் இருந்தேன், அவ்வளவுதான்.
நன்றி!!!! நண்பரே..........
நீக்குவேதனை...இந்நிலை மாற எந்த முயற்சியும் இல்லை.
பதிலளிநீக்குஅரசு மட்டுமே இதை சரி செய்ய முடியும்.. அதற்கு தானே அதிகாரம் கொடுக்க பட்டு உள்ளது.
இப்போதுள்ள அரசோ நன்றாக தூங்கி விட்டு பழைய திட்டங்களை புது பேர் கொடுத்து மீண்டும் தூங்குகிறது.
செய்து முடித்த திட்டங்களை இடிப்பது அல்லது வேறு காரணத்துக்குபயன் படுத்துவது... இந்நிலை மாற எவருக்கும் அக்கறை இல்லை.
தங்களின் கூற்று உண்மைதான் நண்பரே....
நீக்குஇப்படங்கள் இளைஞர்கள் மனதிலும் சாதி வெறியை ஊட்டி வளர்ப்பது தான் பெரும் வேதனை. டைரடக்கர்கள் எல்லாம் யோசிக்கவே மாட்டார்களா?
பதிலளிநீக்குஇப்படி சாதி வெறியூட்டும் படங்களை அந்த இயக்குநர்கள் யோசித்துதான் படைத்து உள்ளார்கள் அய்யா.....
நீக்குஉண்மை, சிறப்பான பதிவு! பார்வைக்காக Spa Lanka & மசாஜ் நிலையம்
பதிலளிநீக்கு