பக்கங்கள்

Monday, November 09, 2015

“குடி” மக்களுக்கோர் எச்சரிக்கை...!!!


படம்-https://ta.wiktionary.org/s/1hfm


டம.....டம......டம.....டம்
டமட...டம.....டம....டம்

இதனால் சகல
குடி மக்களுக்கும்
தெரிவிக்கும் எச்சரிக்கை
என்ன..வென்றால்...

வரும் தீபா...வலி
கொண்டா..ஆட்டத்தை
முன்னிட்டு அரசாங்கத்தின்
குடி வருவாய்
375 கோடிக்கு
இள வரசியார்
இலக்கு நிர்ணயித்து
இருப்பதால் குடி
மக்கள் எல்லோரும்
சென்றாண்டு தீபா..வலியைப்
போல் இந்த
தீபா வலியில்
குடும்ப சகிதமாய்
 குடித்து அரசின்
குடி வருவாயை
எட்ட வேண்டும்

அப்படி இல்லாமல்
குடிக்கு எதிராய்
பாடிய கோவனின்
பாடலைக் கேட்டு
குடிக்காமல் இருந்தாலோ
குடிக்க மறந்தாலோ
காசு..பணம்
இல்லை என்று
பொய்ச் சொல்லி
குடிக்க  மறுத்தாலோ
குடிப்பவரை தடுத்தாலோ

அரசியாரை கேவலப்
படுத்தியாகக் கருதி
தேசிய பாதுகாப்பு
சட்டத்தில் கைது
செய்து சிறையில்
அடைக்கப் படுவார்கள்
எச்சரிக்கை..! எச்சரிக்கை!
எச்சரிக்கை..! எச்சரிக்கை!

டம்....டம....டம.....டம்..டம்
டம்....டம.....டம.....டம்..டம்

18 comments :

 1. என்ன நண்பரே இங்கே குடிச்சா குற்றம் அங்கே குடிக்கலைனா குற்றம் நான் என்னதான் செய்யிறது.....

  ReplyDelete
  Replies
  1. சற்றுப் பொருங்கள் கண்டு ....பிடித்து சொல்கிறேன்.ம்..ம்.ம்...இங்கே ...குடிக்காமலும், அங்கே குடித்தும் ..இருங்கள்.....எப்படி.......நண்பரே.... அய்....டீயா...

   Delete
 2. அருமையான...தீபாவலி(?)பாட்டு....ஆனாலும் என்ன நண்பரே அது நடக்கத்தான் செய்யும் போல் இருக்கிறது...கட்டி ஏறும் கூட்டம் இன்று முழுசும் அங்கே தான் இருக்கும்...இந்தியாவிலேயே பீகார்ப்பக்கம் தான் முன்னேற்றம் கொஞ்சம் குறைவென்றிருந்தோம்..ஆஹா. எவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்கார்கள்....இந்த புத்தி இங்கும் வந்தால்...நமக்கு இப்படி பதிவிருக்காது......பார்க்கலாம் அடுத்த தீபாவளியில்....தீபாவளி வாழ்த்துகள் நண்பரெ

  ReplyDelete
  Replies
  1. வரும் தேர்தலில் பாரக்கலாம் நண்பரே.....

   Delete
 3. ஹா ஹா ,இது ஒண்ணுதான் பாக்கி :)

  ReplyDelete
  Replies
  1. அந்த பாக்கியையும் ஏன்? விடுவானேன்....

   Delete
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. நான் உண்மை தோழராக மாறியதிலிருந்து..தீபாவளி கொண்டாடியது இல்லை.. நண்பரே... தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நண்பரே....

   Delete
 5. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி ஒரு பகுத்திறிவில்லாத கூத்து என்பதே எனது பார்வை நண்பரே... தங்களின் வாழ்த்துக்கு நன்றி!நண்பரே...

   Delete
 6. வணக்கம் தோழரே!
  இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
  தம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 7. நல்ல கவிதை,
  இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நண்பரே....

   Delete
 8. எதுக்கு வம்பு ஒரு குவார்ட்டராவது
  வாக்கிக் குடித்து விடுகிறோம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தாங்கள்தான் நல்ல குடிமகன் அய்யா..... தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! அய்யா....

   Delete
 9. அரசியாரின் சொல்லைக்கேட்டு குடும்பமே குடித்தால் நாடு நல்லா வெளங்கும்.. எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியாலங்க..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com