பக்கங்கள்

Tuesday, November 10, 2015

இப்படிக்கு அனைத்து பறவைகள் கூட்டமைப்பு


படம்-uyiri.wordpress.comஅடப்......பாவிகளா....!!!!

பகுத்தறிவு  அற்ற
உங்களின்  ஒரு
நாள் கூத்துக்காக
பாடிப் பறந்த
எங்களை  எல்லாம்
தெருவ விட்டு
நகரத்த விட்டு
ஊரை  விட்டே
விரட்டி  அடிக்கிறேங்களடா..
நீங்கள்  எல்லாம்
மனிதப் பிறவிகளடா....???


                     இப்படிக்கு
வெடிச் சத்தத்தை எதிர்க்கும்
அனைத்து பறவைகள் கூட்டமைப்பு...

18 comments :

 1. இந்த ஒரு நாள் கூத்துக்கு ஐயாயிரம் கோடிக்கு மேல் செலவும் செய்கிறார்கள் ,வளர்ந்து வரும் நாட்டுக்கு இது தேவையா :)

  ReplyDelete
  Replies
  1. வளர்ச்சி....வளர்ச்சின்னு ஒரு ஆளு நாடு நாடாக தட்டேந்தி போரது... ஒங்களுக்கு தெரியாது போலிருக்கு.....

   Delete
 2. உண்மை நண்பரே... இன்றைய நாள் என் வாழ்வின் மோசமான நாள்...சென்னையில் தீபாவளி...அடைமழை...மாலையில் தொடங்கிய வெடிகளின் ஓசை இன்னும் செவிகளில்...நம் காதுகளுக்கே இப்படி யெனில்...பாவம் அந்த பறவைகளுக்கு...ஆதியில்.வெடிக்கச்சொன்னவன் கிடைத்தால் ...ஆயிரம் நம்மாழ்வார்களும்..வள்ளலார்களும் வந்தாலும் முடியாது போல்தான் இருக்கிறது...மக்கள் மிகவும் மதிப்பவர்கள் இதைப்பற்றி பேசவேண்டும்....நல்லவேளை. என் பிள்ளைகள் புரிந்து கொண்டார்கள்...நாங்கள் தொலைகாட்சி பெட்டியை தூக்கிப்போட்டு பதினைந்து வருடங்களும்.பட்டாசுகள் மறந்து அதற்கு மேலும் ஆகிவிட்டது....
  நல்ல தூண்டலுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் தங்கள் பிிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்!! நண்பரே....நல்ல பண்புகளை தொடர்ந்து கடைபிடிப்போம்..

   Delete
 3. "வெடி சத்தத்தை வேடிக்கை பார்க்க வந்த பறவைகள் கூட்டம் இது"
  மேடையில் யாரோ கூப்பாடு போடுவது கேட்கிறதா தோழரே!

  உண்மையை உணர செய்தமைக்கு நன்றி!

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. கூப்பாடு போடுவதைக் கேட்டுத்தான்..நண்பரே.... இந்தப் பதிவு...

   Delete
 4. கூட்டமைப்பின் கவிதை அருமை

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. Replies
  1. வெடி போட்டவர்கள்தான்..... அய்யா...

   Delete
 6. வருசத்தில் ஒரு நாள் தானென்று நேற்று வெடிவிட்டு ஒரே புகைமண்டலமாக்கிட்டாங்கையா..

  ReplyDelete
  Replies
  1. நாசமா போறவர்கள் நாசமாக்கிவிட்டார்கள் அய்யா...

   Delete
 7. நண்பரே! அருமை அருமை. நாங்களும் இவைகளுக்கு எல்லாம் எதிரியான பட்டாசுகளைச் சின்ன வயதிலே வெடிப்பதில்லை..

  நல்ல கருத்தை முதன்மையாக வைத்து இங்கு சொல்லியதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. .... நல்ல பழக்கம்...தங்களின் பாராட்டுக்கு நன்றி! நண்பரே....

   Delete
 8. உணமைதான். எங்கள் தெருவில் காலையும் மாலையும் ஓயாமல் பறவைகள் சத்தம் கேட்கும். இன்று காலை கேக்கவேயில்லை. எங்கு போயின என்று தெரியவில்லை. சிந்திக்க வைத்த பதிவு.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. அதான் ஊரை விட்டே விரட்டி விட்டார்களே...பாவிகள்...

   Delete
 9. அருமையான உண்மை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயம்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com