பக்கங்கள்

Tuesday, November 03, 2015

சாராயம் விற்பது அரசின் உரிமை! வாங்கிக் குடிப்பது மக்களின் கடமை!

படம்-Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 2 பேர்ஆகியோருடன்
சாராயம் விற்பது அரசின்
உரிமை!
சப்புக்கொட்டி வாங்கிக் குடிப்பது
மக்களின் கடமை!

சாராயம் சத்துபானம் இல்லை என்பதும்
குடிமகன் குடல் வெந்து சாவான் என்பதும் தெரியும்

அரசு காய்ச்சாவிட்டால்
கள்ளச்சாராயம் ஆராய் ஓடும்
ஆகவே அரசே
தாயுள்ளத்தோடு
காய்ச்சி விற்கிறது

இதை மூடூ மூடூ என்றால்
எவ்வளவு பெரிய கேடு

அட பாணப்பத்திர ஓணான்டிகளா
இனிமேல் பாடினால் என்கவுண்டர்தான்

காந்தி உப்பு காய்ச்சினார்
நாங்கள் சாராயம் காய்ச்சுகிறோம்
இதில் என்ன தவறு?

பாடவேண்டுமென்றால்
நிலா காயுதுன்னு பாடு
விருது தருகிறோம்

மூடு ஏத்துற பாட்டப்பாடு தடையில்லை
மூடச்சொல்லி பாடினால்
என்ன கொழுப்பு?

14 comments :

 1. நல்லது நண்பரே நிலா தேயுதூ.......னு பாடல் எழுதுனா ? விருது தருவீங்களா ?

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் சொல்றாங்க.... எதுக்கும் சரக்கு குடிக்காம...பாடல் எழுதினீங்கன்னு சொல்லுவாங்கலான்னு உரசி பாத்துகுங்க..நண்பரே....

   Delete
 2. இதை மூடூ மூடூ என்றால்
  எவ்வளவு பெரிய கேடு//யாருக்கு ஒட்டுப் போட்டவங்களா? வாங்குனவங்களா? நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. ஒட்டு போட்டவங்கதானே ..சரக்கு வாங்குராங்க நண்பரே

   Delete
 3. மூடலாமா?
  மூட வேண்டாமா?
  டாஸ் போட்டு பார்த்து சொல்கிறேன்
  காசு கொடு என்றாராம்.

  பையில் துழவி எடுத்து கொடுத்த காசை,
  ஊறுகாய் வாங்கி கொண்டு,
  டாஸ் மார்க் கடை நோக்கி சென்றாராம்.

  என்ன கொடுமை வலிப்போக்கன் இது?

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. ஊறுகா கூட வாங்க வழியில்லாமஆக்கிபுட்டாங்க.....

   Delete
 4. காய்ச்சுவது தவறில்லை ,அதை செய்வது யார் என்பதே முக்கியம் :)

  ReplyDelete
  Replies
  1. தனியார் காய்ச்சுவதும் விற்பதும் தவறு என்றுதான்.. அரசாங்கமே காய்ச்சி விற்பனைசெய்யுது நண்பரே.....

   Delete
 5. //மூடு ஏத்துற பாட்டப்பாடு தடையில்லை
  மூடச்சொல்லி பாடினால்
  என்ன கொழுப்பு?//

  நல்ல வரிகள்!
  எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்கள். இப்படிதான் ஒருவர் பாட்டுப்பாடி அனுபச்சிக்கிட்டு இருக்கார்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. விடுதலைக் கவிஞன் அடிமையாக இருக்கமாட்டார் என்ற போது ..சிறைச்சாலைக்கெல்லாம் பயப்படமாட்டார். நண்பரே..

   Delete
 6. சரக்கு சூப்பர் சரக்கு......... இது அம்மாவோட சரக்கு......... சைடிஷ் இருக்கு முறுக்கு......... அடிச்சுபுட்டு மீசைய முறுக்கு..........
  விருது கிடைக்குமா நண்பரே?......

  ReplyDelete
  Replies
  1. அடுத்து தங்களுக்கு கிடைக்க சிபாரிசு செய்யப்படும் நண்பரே

   Delete
 7. சாட்டையடி வரிகள்.....இதற்குமேல் என்ன சொல்லி எழுதுவது......

  ReplyDelete
  Replies
  1. சாட்டையடி வரிகள்.. சம்பந்தபட்டவர்களுக்கு உரைத்தால் நல்லது... நண்பரே....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com