பக்கங்கள்

Thursday, January 14, 2016

புழுதி பறக்குது! மாடு பிடிப்பது தமிழர் கலாச்சாரமென்றுImage result for மாடு பிடிப்பது தமிழர் கலாச்சாரம்
தமிழறிவு!

பொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !

யல் வெடிப்பெங்கும்
ரியல் எஸ்டேட்
முளைக்குது.
கால்நடைகளின்
பட்டுப்போன வாயில்
பாலித்தீன் நுரைக்குது!
பொட்டுத் தண்ணியும்
தட்டுப்படாமல்
சிட்டுக்குருவிகள்
கண்கள் எரியுது!
அரிசி களைந்தெறியும்
ஈரம்
தேடித்தேடி ஏமாந்து
கோழி குஞ்சுகளுடன்
நெஞ்சு வேகுது
ஊற்றுக் கண்ணை
இழந்த துயரில்
ஆற்று மணல்
காற்றில் அழுவுது
துத்திப்பூவின் முகத்தில்
மணல் லாரிச்சக்கரம்
ஏறிக் கிடக்குது
அத்தனைக் கட்சிகள்
கொள்ளைக்கு சாட்சியாய்
காட்டாமணக்கு
மண்டிக் கிடக்குது
மீனவர் இரத்தம்
கலந்து
கலந்து
கடல்
தன் நிறத்தை இழக்குது!
புத்தம் புதிதாய்
ஊருக்கே விளைவித்துக் கொடுத்த கைகளில்
ரேசன் அரிசியின்
வீச்சம் அடிக்குது
பையப் பைய
விவசாயத்தையே
ஒழித்துக் கட்டும்
கார்ப்பரேட் கொள்கை
பொங்கல் பரிசாய்
ரேசன் பையில் தெரியுது
ஆதாரவிலை போதாமல்
கணுக் கணுவாய்
கரும்பு விவசாயி
வாழ்க்கை கருகுது!
பூந்தாது
ஒன்று கிடைக்காமல்
வண்ணத்துப் பூச்சி
பாழுங்கிணற்றில்
வீழுது
களிமண் ஈரம்
காணாமல்
கைத்தொழில்
சக்கரத் திருகைச் சுற்றாமல்
கடனில் சுழன்று சுழன்று
குயவர் கைகள்
காய்ந்து இருகுது
மாடு பிடிப்பது
தமிழர் கலாச்சாரமென்று
ஊரே புழுதி பறக்குது!
மணி பிடிக்க
கோயில் கருவறைக்குள்
போனால்
சாதி கொம்பு முட்டுது
மனுதர்மம் அடக்க
முடியாதவன் ‘வீரத்தை’
மாடு
ஏற இறங்கப் பார்க்குது
அய்வகை நிலமும்
அருந்தமிழ் வாழ்வும்
தரிசாய் கிடக்குது
அநியாயமாய்
எரிசாராயத்தில்
ஒரு இனமே எரிந்து கிடக்குது
உற்றுப் பார்த்தால்
வட்டி பொங்குது
ஆன்லைன் கரும்பில்
சீழ் வடியுது
எட்டிப் பார்த்தால்
எல்லா வீட்டிலும்
கலர் கலராய்
டி.வி. பொங்குது
தமிழரை இழந்த
தமிழர் திருநாள்,
உழவரை இழந்த
உழவர் திருநாள்
எனும்
உண்மைகள் விரியுது!
ஒருபோகமும் வழியில்லா
தமிழர் தெருக்களில்
முப்போகமும்
டாஸ்மாக் பொங்குது!
உள்ளூர் சோடா, கலரை
ஒழித்த வேகத்தில்
பெப்சி, கோக்
பீறிட்டு பொங்குது.
சில்லறை வணிகம்
புதைத்த இடத்தில்
டாடா, ரிலையன்சு
ஊற்று பொங்குது!
கடைசியில்,
உள்ளதை எல்லாம்
இழந்து
உதிரம் சுண்டும்
கடின உழைப்பில்
காண்ட்ராக்ட் தொழிலாளிகள்
கண்களில்
தனியார்மயத்தால்
எரிந்த இரவுகள்
தகித்து, கொதித்து பொங்குது!
நல்ல சோறில்லை…
நாட்டில் மதிப்பில்லை…
விவசாயி வாழ்க்கை
அலங்கோலமாகிக் கிடக்குது!
ஒரு நாளைக்கு மட்டும்
வேட்டியைக் கட்டி
புடவையைச் சுற்றி
காசுள்ள வர்க்கம்
கலர் கோலங்கள் காட்டுது.
விவசாய வர்க்கமோ
மங்கலோ… மங்கல்
அவர்கள்
வேண்டும் மாற்றத்திற்கு
சேர்ந்து குரல் கொடுக்காமல்
பானையை பார்த்து மட்டும்
போதுமா?
பொங்கலோ… பொங்கல்!
காணும்
அநீதிகளுக்கு எதிராக
களத்தில் பொங்குவோம்
மகிழும் மாநிலம்!
– துரை சண்முகம்

29 comments :

 1. சிந்திக்க வைத்த வரிகள் அருமை

  ReplyDelete
 2. அனைவரும் ஒற்றுமையாக பொங்க வேண்டும் தோழர்...

  ReplyDelete
  Replies
  1. வலை சித்தர்க்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

   Delete
 3. அருமையான வரிகள். விவசாய வர்க்கமோ
  மங்கலோ… மங்கல்
  அவர்கள்
  வேண்டும் மாற்றத்திற்கு
  சேர்ந்து குரல் கொடுக்காமல்
  பானையை பார்த்து மட்டும்
  போதுமா?
  பொங்கலோ… பொங்கல்!// செம!!!!

  இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தில்லை யகத்து நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

   Delete
 4. மாடு பிடிப்பது தமிழர் கலாச்சாரமென்று

  அப்படி தான் அனைத்து கட்சிகளும், மற்றும் பலரும் முழங்குகிறார்கள். உயிரையே கொடுப்போம் என்று நிற்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிய பொங்கலை விழுங்கிவிட்டு உயிரை கொடுக்கட்டும் நண்பரே... வேகநரியாருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

   Delete
  2. உங்களுக்கும் அது போல் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
   மாட்டை அடக்குவது நடைபெறாம உண்மையான இனிய பொங்கல் இது.

   Delete
  3. நடை பெற்றாலும் நடை பெறவிட்டாலும் கவலைப்படாமல் வீட்டில் கொடுத்த பொங்கலை விழுங்கிவிட்டு அமர்ந்திருக்கிறேன் நண்பரே.....

   Delete
 5. #காணும்
  அநீதிகளுக்கு எதிராக
  களத்தில் பொங்குவோம்#
  ஆகா,இதுவல்லவோ உண்மையான பொங்கல்:)

  ReplyDelete
  Replies
  1. அநீதிகளுக்கு எதிராக
   களத்தில் பொங்குவோம்# நண்பரே....பகவான்ஜி அவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

   Delete
 6. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. யார்பாவணன் அவர்களுக்கு இனியபொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே.....

   Delete
 7. இப்போதே இப்படி இருக்கிறதே... இனி வரும் காலங்கள் இன்னும் எப்படி எப்படி மாறுமோ..

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மாறுவதுதானே இயற்கை நண்பரே.... ”ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

   Delete
 8. அன்பினும் இனிய நண்பரே

  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
  இணையில்லாத இன்பத் திருநாளாம்
  "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. நட்புடன் வேலு என்ற யாதவன்நம்பி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!!நண்பரே...

   Delete
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
  t m 6

  ReplyDelete
  Replies
  1. எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தின்ர் அனைவருக்கும் அவரின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.!!!

   Delete
 10. தமிழ்ப் புத்தாண்டுடன் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  M.Syed
  Dubai

  ReplyDelete
  Replies
  1. எம் சையத் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

   Delete
 11. நல்ல சிந்தனையைத் தூண்டிய பதிவு

  ReplyDelete
 12. என்ன கோவம் தோழரே இந்த தாக்கு தாக்குரீங்க அத்தனையும் உண்மையே, என்ன செய்வது என்று மக்கள் கேட்ப்பது கேட்க்காமல் இல்லை.....

  ReplyDelete
  Replies
  1. கோபத்தை அடக்க கூடாதல்லவா...கோபப்பட்டாவது மக்களின் சிலராக்காவுது ரோசம் வராதா என்ற ஆசைதான் நண்பரே

   Delete
 13. அருமையான வரிகள் நண்பரே!!

  ReplyDelete
 14. அருமையான வரிகள் நண்பரே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com