படம்-தங்க மோகம் |
“ கேட்பதை.. சொன்னாதானே தப்பா...நிணைக்கிறதா..? இல்லையான்னு ? முடிவு செய்யனும்...”
“அது வந்துண்ணே....”
“ அதான் வந்திட்டேல...சொல்லு”.......
“ அது வந்து..”...
“ என்னடா...வந்து...போயின்னு, பயப்படாமா சொல்லுடா...”
“ அண்ணே.....”
“ சொல்லுடா... வெண்ணெ...”
“அண்ணே, நான் ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்றேண்ணே.... அந்தப் பொண்ணுகிட்ட என்காதல எப்படிண்ணே சொல்றது...”
“ அடப்பாவி, இத என்கிட்ட கேட்கச் சொன்னவன் எவன்டா,? அவன்...”
“யாருமில்லண்ணே..”
“யாருமில்லையா...!! ஒனக்கு எப்படிடா....? என்னிடம் கேட்கத் யோசன வந்துச்சு...”
“ நீங்க காதல்ல பெயிலர் ஆனவராம்.... ஒங்க காதலி உங்களவிட்டு இறந்துபோனதால்தான்...நீங்க கல்யாணமே முடிக்காம இருக்கீங்கன்னு தெருவுல உள்ள எல்லாரும் பேசிகிட்டாங்கண்ணே......”
“அடப் பாவிகளா....!!! என்னயப்பத்தி இப்படி ஒரு கதை உலாவுதாடா...”
“ ஆமாண்ணே....அதவச்சுதான் உங்களுக்கு காதல் அனுபவம்..இருக்குமுன்னு உங்களிடம் கேட்டேண்ணே.....”
எனக்கு அப்படியான எதுவும் இல்லடா....... படிக்கும் காலத்தில..வாத்தியாரு சொன்னாரு...நீ எருமை மேய்க்கத்தாண்டா லாயிக்குன்னு...... உண்மை என்னான்னா... எனக்கு எருமை மேய்க்க கூட லாய்க்கு இருந்திருந்தில்லடா...
போங்கண்ணே........ சும்மா பொய்...பொய்யா... சொல்லிகிட்டு.......
உண்மையைச் சொன்னா உலகமே மறுக்கும்போது...நீ..என்ன ஒத்துகிறவா போற.... சரி ..பார்த்த சொல்றேன் கேளு...
“சரி சொல்லுங்க..........
ஒன்னு.....
“ உங்கள் காதலைத் தெரிவிக்க தங்கத்தைக்
காட்டிலும் வேறேன்ன இருக்கிறது ”
ஆ........ஆ........ஆ....
வாய...பொளக்காதடா...... உண்மைதான்டா....”
அடுத்து.....
“ அருள் இல்லாருக்கு அவ்வுலகமில்லை
தங்கம் இல்லாருக்கு காதல் இல்லை..”
“...............”
என்ன ஊமையாகிட்ட.....செயல் படுத்தி பாரு.....தங்கத்தால்தானடா உன் காதல் சக்சஸ் ஆகும் பாரு.....காதல்..சக்சஸ். ஆகிட்டா குரு காணிக்கை செலுத்த வேண்டும்.. அதை நிணைவில் கொள்ள வேண்டும்.....அப்போதுதான் காதல் கல்யாணத்தில் முடிந்து நிலைத்து இருக்கும்.....
சோத்துக்கே லாட்டரி ,தங்கத்துக்கு எங்கே போறது,
பதிலளிநீக்குகாதலும் காசுள்ளவங்களுக்கு மட்டும்தானா :)
காசு உள்ளவங்களுக்குத்தான் உலகமே எனும்போது... காதலும் காசு உள்ளவங்களுத்தான் நண்பரே.....
நீக்குநண்பரே உங்களது கதையை இப்பத்தான் சொல்றீங்க நல்லாத்தான் இருக்கு.....
பதிலளிநீக்குஆ...இது என் கதையா....????
நீக்குதங்கமான காதல்! வாழ்க!
பதிலளிநீக்குதங்கம் இருந்ததால்தான் தங்கமான வாழ்வு அய்யா...
நீக்குஅப்போ பொருள் இல்லாருக்குக் காதல் இல்லையா? :))
பதிலளிநீக்குஇல்லேன்னுதான் நடப்பு . தெரிவிக்கிறது...நண்பரே....
நீக்குஅப்படியா வலிப்போக்கரே, இப்படி வேற இருக்கா,,,,,,
பதிலளிநீக்குஎப்போதோ எழுதியது... இப்போது பதிவிட்டேன் நண்பரே..... வேறு ஒன்றுமில்லை..நண்பரே...
நீக்கு