சனி 11 2016

இனி வக்கீல்கள் சைகையால் வாதாட வேண்டியதுதான்.

நண்பர் ஒருவரை சந்தித்தபோது ஒரு தகவலை சொன்னார் .. மதுரை அய் கோர்டில் ஒரு வக்கீல் சத்தமாக வாதிட்டதால் அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றார். 

அப்போது அவரிடம் எனது அனுபவத்தையும் நடப்பையும் சொன்னேன்.


சுத்தமாகவே... சென்னை  உயர் நீதி மன்றத்திலும் சரி, மதுரை கிளை உயர்நீதி மன்றத்திலும் சரி, வக்கீல்களோ.. நீதபதியோ... பேசுவது.. நல்ல காது உள்ளவர்களுக்கே  அதாவது நல்லா கேட்கும் திறன் உள்ள .(கூடியிருக்கும்) வக்கீல்களுக்கே .ஒன்னும் கேட்காது. இப்படி அவர்களுக்கே.கேட்காததை. நிதிபதி என்ன சொன்னார் என்று சக வக்கீல்களை கேட்டுத்தான் அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

இதில். தனியாக உட்கார வைக்கப்பட்டு இருக்கும் வழக்குக்கு சம்பந்தபட்டவர்களுவர்களுக்கு  தனது வக்கீல் என்ன பேசினார். அதற்கு நீதபதி என்ன சொன்னார். என்பது பற்றி  சுத்தமாக ஒரு எழவும்  புரியாது

இந்த லட்சனத்தில் வழக்குரைஞர்களை ஒடுக்கும் சட்டத்தை  பேசி முடிக்கும் வரை அமுல்படுத்த மாட்டோம் என்று கூறியதாக தமிழ்நாடுபார் கவுன்சில் தலைவர் சொல்லியதை தெரிந்து  கண்டே.. மதுரைக்கிளையில் ஒரு வக்கிீல் சத்தமாக வாதிட்டார் என்பதற்க்காக  அவர் மீது  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. என்றால் அதுக்கு பேரேன்ன ஒடுக்கு முறைதானே! இதுதான் நீதிபரிபாலனமாம்.....ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே.........


இனி, என்ன.. வக்கீல்கள், வாய் மொய் பொத்தி,கண்ணை மூடிக் கொண்டும், சைகையால் பேசிக் கொண்டும் நீதி கேட்டு வரும் மக்களுக்கு நிதி வாங்கி கொடுக்க வேண்டியதான்....என்று பேசியபோது  நண்பர் சொன்னார். இதுவும் இன்னொரு போலீஸ் நிலையம் தான்.என்று.




4 கருத்துகள்:

  1. காலக்கெரகமடி கருமாரி ஆத்தா....

    பதிலளிநீக்கு
  2. வக்கில் தொழிலே வாய் வார்த்தைகள்தான். எப்படித்தான் வாதாடுவது

    பதிலளிநீக்கு
  3. இது என்ன கொடும சத்தமா பேசினா தப்பா ... அவங்க வேலையே அதானே...http://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  4. இப்படி வேற சொல்லியிருக்காங்களா!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....