பக்கங்கள்

Wednesday, June 29, 2016

ஒரு நாள் நடு இரவில்..அவர் சிறுவனாக
இருந்த காலத்தில்
நடு இரவில்
ஒருநாள்

அவரின் அம்மா
அதிகாலை சமயம்
வேலைக்கு  செல்ல
வேண்டும் என்பதால்
தெருக் குழாயில்
தண்ணீர் பிடிக்க
பல தடவை
அவரை எழுப்பினார்.

பகல் எல்லாம்
நாயாய் அலைந்து
ஊர் சுற்றிய
அலுப்பில் எழுந்திருக்க
அவர் மறுத்து 
விட்ட போது

அவர் அம்மா
ஒரு ஆயுதத்தை
எடுத்து சுங்கு
பிஞ்சு போகும்
எழுந்திரு என்ற
உடன் அறக்க
பறக்க எழுந்து
ஓடினார் தெரு
குழாயை நோக்கி....

3 comments :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com